Saturday, October 1, 2011

வாயில் பூத்த பூ..!


என் மகளுக்கு இன்று
பிறந்தநாள்...
தாயும் சேயும் வெளியே
சென்றிருக்க
என் மகளின் புகைப்படைத்தை
பார்த்துக் கொண்டிருந்தேன்...
என் மகளின் கடைசி பிறந்த
நாளன்று எடுத்த புகைப்படம் அது..!

அழகாய் என் மகள்
சிரித்திருக்க
அவள் தலை மேல்
சூட்டிய மலரும் சிரித்திருந்தது
அதனழகைப் பார்த்து
நானும் சிரிக்கலானேன்...

அந்நேரம் பார்த்து
என்னவளும் என் மகளும்
உள்ளே நுழைய...
என் சிரிப்பை கண்டு
என்னருகே வந்த
என்னில்லாள்
சிரித்த காரணம் வினவினாள்...

சிரித்த காரணம் சொன்னேன்
அதுவே சிலாகிக்கும்
கவிதையாய் ஆனது என்றாள்.

நம் மகள் தலையில் சூடிய பூ
நம் வீட்டு செடியில் பூத்த பூ..!
என் மகளின் புன்னகையோ
அவள் வாயில் பூத்த பூ...
என் மகளோ குழவியாய் இருக்கையில்
உன் வயிற்றில் பூத்த பூ...
அதைக் கண்டே என் இதழில்
புன்னகை பூத்தது என்றேன்!

8 comments:

  1. ரசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி அனானி அவர்களே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  2. //அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!//

    ஆனா நீங்க மட்டும் வந்திடாதீங்க...

    சும்மா ஜோக் நண்பா.
    அனைவரும் நலம் தானே?

    ReplyDelete
  3. ஹலோ தோழா நலமா ...............! அகிலன் எப்படி இருக்கான்..? சாட்ல வந்தேன் புடிக்க முடியல, சூப்பர் கவிதை ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  4. வணக்கம் குமார்...

    நேரமின்மை காரணமாக கவிதையே எழுத முடிவதில்லை... மன்னிக்க வேண்டுகிறேன்...

    வந்து ரசித்து வாழ்த்தியமைக்கு..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  5. எல்லோரும் நலம்தான் குமார்...

    தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்..?

    ReplyDelete
  6. வாங்க புவனா...

    அனைவரும் இங்கே நலம்... அகிலத்துடன் அகிலனும் நலமே...

    கவிதையை ரசித்தமைக்கு நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...