Wednesday, October 12, 2011

உனை வெல்ல..!


உன்னழகை வெல்ல வேண்டி
கவிச் சொல்லெடுத்து வந்தேன்...
நீயோ இமைகளெனும்
வில்லெடுத்தாய்...
நானும் அதற்கிணையாய்
வில்லேந்தி வந்தால்
நீயோ விழிகளெனும்
வேலேந்தி வந்தாய்...
நானும் அதற்கிணையாய்
வேலேந்தி வந்தால்
நீயோ காதலேந்தி வருகிறாய்...
உனை வெல்ல மோதலோடு வந்த நான்
உன் காதலால் தோற்றபடி
உன்னிடம் காதல் கைதியானேன்!

12 comments:

  1. nice.........

    by " kavi "

    ReplyDelete
  2. உனை வெல்ல மோதலோடு வந்த நான்
    உன் காதலால் தோற்றபடி
    உன்னிடம் காதல் கைதியானேன்!\\\\\

    பாத்தீகளா? எங்கிட்ட மோதாதே....என்று
    சிறைப்பிடித்ததை!
    ஆமா,உங்களை எப்படி நடத்துகிறார் சிறையில்..?

    ReplyDelete
  3. ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி கவி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. வாங்க கலா...

    சிறையில்தானே... அன்பால் எனை அடித்து அடித்து இன்புறுத்துகிறார்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. நல்ல கவிதை....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  6. ரசித்து வாழ்த்தியமைகுக மிக்க நன்றி கண்ணன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  7. வித்தியாச சிந்தனை! வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkvai.wordpress.com

    ReplyDelete
  8. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

    ReplyDelete
  9. நன்றி.. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  10. ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி வேதா அவர்களே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete
  11. வாழ்த்திய அம்பளடியாளுக்கு எனது நன்றிகள்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...