அன்பே அகிலா- நீ
தத்தித் தத்தி நடைபயின்ற
காலங்கள் கரைந்து போயின..
தடம்பதித்து விளையாடும்
நதியைப் போல்
நான்காவது அகவையில்
நீ இன்று காலடி எடுத்து வைக்கிறாய்...
நல்லவற்றை உன்னோடு
கொண்டு சென்று
உயர்வு எனும் கடலில் கலப்பாய்...
உலகத்தை உய்விப்பாய் அகிலா...
உந்தையின் அவா இதிலா...
உமக்கென் பிறந்தநாள் வாழ்த்துக்களடா...
*******************
அன்பே அகிலா - நீ
அழகிய வான் முகிலா?
நீ வாலுவின் வாண்டு
என் மனதை வருடும் வண்டு
நீ பெயர்ச்சொல் குறும்பு- இனி
என் பெயர் சொல்ல விரும்பு..!
- அம்மு கணேசன்
*******************
நண்பா...
ReplyDeleteஅகிலனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Wish u Happy Birth day my dear child.
ReplyDeleteBy
Bhuvana
நன்றி தோழரே..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நன்றி புவனா..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!