உனைக் கண்டதும்
கட்டற்ற காட்டாற்று
வெள்ளமாய் நான்...
அதில் மூழ்கித் திளைக்கும்
மோகனச் சிலையாய் நீ...
பல்லாண்டுகளாக மனதில்
புதைத்து வைத்திருந்த காதலை
யார் முதலில் வெளிப்படுத்துவது
என்ற போட்டியில் நாம்…
உணர்ச்சிகளின் பிரவாகத்தில்
நம் உயிர்கள் கரைந்து போக
உடலியக்கம் அனைத்தும்
உற்சாக மிகுதியில் உறைந்து போக...
உன் காதலைச் சொன்னாய்..
எனை காற்றில் நிறைத்'தாய்'
முத்தான என் முத்‘தாரமே’
அந்நாளில் இரண்டாம் உலகம் தந்‘தாய்’
மீண்டும் நான் புதி'தாய்’
பிறந்தது போன்ற உணர்வினை தந்'தாய்’
அணைப்பில் அழியா ஒவியமானாய்
அன்பில் அன்னையின் காவியமானாய்…
அன்பே உன் அன்பில்
அகழ்ந்து புதைந்து போகிறேன்
உன்னுள் புதைபொருளாய்..!
ஒவ்வொரு வரியும் ரசித்துப் படித்தேன். பாராட்டுக்கள் சார் ! நன்றி !
ReplyDeleteசின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க 10 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !
நன்றி நண்பரே...
ReplyDeleteஅதன்படி உலவு பட்டையை நீக்க முற்பட்டால் எனது பிளாக்கில் 'எர்ரர்' காட்டுகிறது நண்பரே...
கூடிய விரைவில் அதை நீக்குகிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நண்பா நலமா?
ReplyDeleteகவிதை அருமை நண்பா...
இப்போது அடிக்கடி எழுதுவதில்லையோ?
எப்படி இந்தக் கவிதைப் பூங்கா
ReplyDeleteஇவ்வள்வு நாள் கண்ணில் படாமல் போனது
இனி தொடர்ந்து இளைப்பாறி இங்கு இன்புற வருவேன்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி தோழரே..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நன்றி ரமணி தோழரே..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அன்பை யார் பரிமாறினாலும்
ReplyDeleteஅறுசுவை தாண்டி
ஏழாம் சுவையாகிறது -உன்
கவிதையைப் போலவே !
அன்பு ஏழாம் சுவையா?
ReplyDeleteஅடடா...அசத்துறீங்களே.. இத்தனை நாள் எங்க போயிருந்தீக...