இப்பிறவியில்
என்னோடு சேராமல்
போனதால்
மறுபிறவியாலாவது
என்னை கரம்பிடிப்பாயாவென்று
என் கன்னியவள் கேட்டாள்…
கேட்டதும் என் கண்ணில்
அருவி வழியச் சொன்னேன்...
இங்கே இருப்பது வெறும்
உடல் கூடுதான்...
அப்படி ஒன்று இருந்தால்
அது உன்னோடுதான்…
இல்லையேல்
நான் என்றும் புதைக்கப்பட்ட
மண்மேடுதான்…
நம் காதல் என்றென்றும்
கலந்திருக்கும்
விண்ணோடுதான்..!
______________________________________

நல்ல வரிகள்... தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteநம் காதல் என்றென்றும்
ReplyDeleteகலந்திருக்கும்
விண்ணோடுதான்..!
காதல் வரிகள் அழகு.
superb
ReplyDeleteஅடுத்தப் பிறவி என்று
ReplyDeleteஒன்று இருந்தால்
அது இரண்டாம் பிறவியாய்
இருக்கட்டும் !
இன்னும் ஆறு பிறவிகளும்
இனி உன்னோடு தொடரட்டும் !
வணக்கம் தனபாலரே...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...
வாங்க சசிகலா...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...
வணக்கம் ரஜினிபிரதாப்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...
பிறவிகளில் நம்பிக்கையற்றவன் நான்...
ReplyDeleteஅப்படி ஒன்று கிட்டினால் அது என் பாக்கியமே...