Wednesday, March 20, 2013

குருவிகளைக் காணோம்?



அதிகாலை வேளையில்
சிட்டுக்குருவியின் சிருங்காரக் குரல்கள்
எழுப்பிய காலம் போய்
இன்று செல்போன் குரல்கள்
நமை எழுப்புகின்றன..!
நகரம் நரகமாகிப் போய்விட்டதே
என்று கிராமத்தை
நோக்கிப் பறந்தால் - அங்கும்
அலைபேசி கோபுரங்கள்
அகோரப்பசியுடன்
கூறு போடக் காத்திருக்கின்றன
வானம்பாடியாய்த் திரிந்து
கானம் பாடிய
குருவிகளைக் காணோம்..?

தன் குலம் வாழ
குருவிகளைக் கொன்று
லேகியம் தின்றதொரு கூட்டம்
செயற்கை உரங்களையிட்டு
குருவிகளின் உணவுச்சங்கிலியை
அறுத்ததொரு கூட்டம்
உலகெங்கும் அளவளாவதற்கு
அலைக் கதிர்களைக் கொண்டு
குருவிகளை மலடாக்கியதொரு கூட்டம்
ஓங்கியுயர் மரங்களை அழித்து
குருவிகளின் வீடுகளை
உருத்தெரியாமல் அழித்ததொரு கூட்டம்
எதிர்காலச் சந்ததிக்கு
இனியில்லை இப்படியொரு
குருவிக் கூட்டம்!

(இன்று உலக சிட்டுக் குருவி தினம்... என் கவிதை கேட்டுக்கொண்டதற்காகவும் சிட்டுக்குருவியின் தீவிர ரசிகன் என்பதாலும் இக்கவிதையை எழுதியிருக்கிறேன்)

24 comments:

  1. காணாமல் போய் பல வருடங்கள் ஆகி விட்டன...

    கவி வரிகள் அருமை... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. கருத்துள்ள வரிகள்.. உணவு சங்கிலி பற்றி நமக்கு என்ன கவலை மரங்களை அழித்துக்கொண்டே போவோம் நாளை உலைகள் மெல்ல மெல்ல இதனாலேயே சாகும்..

    ReplyDelete
  3. சரியான நேரத்தில் எழுதியுள்ள அருமையான கருத்தாழம் மிக்க கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சகலாரதனையுடன் கூடிய சம்போகித சித்திரத்தை மனதின் காட்சிப் பேழையின் உள் கனகச்சிதமாக இட்டு அதனூடே ரத்தினத்தின் மாட்சிமையாக அந்த புத்தம் புதியதான பொழுமாறத் தன்மையுடைய செல்போன் அரக்கனின் ஆற்றாமைக் கடுமையை அளவில்லா செழுப்பாதிக்கத்தை கற்றாளை கற்றில் பாயும் வெயில் போல உவமைகளுடன் ஒரு கவிதையை காபாலாகித செயல்வகை வரிசையில் செவ்வனே தந்திருக்கிறீர்கள் உங்கள் கவிச்சோலையின் விரித்தவெளிகளில்.

    அக்மார்க் அமர்களுக்கு நடுவே அமோலோற்சவமான அரும்ஜோதிச மகிபாலனமாக வந்திருக்கிறது உங்கள் பதிவு


    அன்புடன்
    கவிஞர்.பக்‌ஷிராஜன்

    ReplyDelete
  5. ஓங்கியுயர் மரங்களை அழித்து
    குருவிகளின் வீடுகளை
    உருத்தெரியாமல் அழித்ததொரு கூட்டம்
    எதிர்காலச் சந்ததிக்கு
    இனியில்லை இப்படியொரு
    குருவிக் கூட்டம்!//

    குருவிகளை காணாமல் தவிக்கும் மன உணர்வை அழகாய் சொல்லிவிட்டீர்கள். உலக சிட்டுக்குருவி தினத்தில்.

    ReplyDelete
  6. நம் எல்லோருடைய ஆதங்கமும் இந்தக் கவிதையில் வெளியாகி இருக்கிறது.
    எப்படி இவைகளை மறுபடி நம் வீடுகளிலும், தோட்டங்களிலும் கொண்டு வருவது என்பது பற்றி யோசிக்க வேண்டும் நா.
    முயற்சி செய்வது அவசியம்.
    எனது சிட்டுக்குருவிகள் பதிவைப் படிக்க: http://wp.me/p244Wx-40

    ReplyDelete
  7. Dear friend,


    Gud morning.......



    Happy sittu kuruvi day......


    Sittu kuruvi mutham koduthu sernthida kandene...


    ipadilam pattu eluthi irukare kavinger.

    inime epadi eluthuvanga?

    ReplyDelete
  8. அன்பு தோழர் ரமணிக்கு...

    எனது அன்பு கலந்த நன்றிகள்...

    ReplyDelete
  9. தனபாலரே...

    குருவிகளை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை..?

    ReplyDelete
  10. புலோலியூர் கரன்...

    நாளை புவிப்பந்து நெருப்புக்கோளமாகும்.. எல்லோரும் சாம்பலாவோம்... அதுதான் நடக்கும்..

    பாவம் நமது சந்ததிகள்...

    ReplyDelete
  11. நடனசபாபதி ஐயாவிற்கு

    எனது நன்றிகள்...

    ReplyDelete
  12. கவிஞர்.பக்‌ஷிராஜரே...

    தெள்ளு தமிழா... எனைக் கொல்லும் தமிழா..?

    அபாரம்... உங்கள் வர்ணனை...

    ReplyDelete
  13. கோமதி அரசுக்கு எனது நன்றிகள்...

    கவிதை படித்தத்தோடு மட்டுமின்றி.. சிந்தித்து செயல்பட முனைவோம்...

    ReplyDelete
  14. ரஞ்சனி அம்மையாருக்கு

    எனது நன்றிகள்... வீடுகள் தோறும் தோட்டங்கள் அமைக்கலாம் சரி...

    என் போன்றோர்கள் வாடகை வீட்டில் அல்லவா இருக்கிறோம்...

    சொந்த வீடுகளுக்கு எங்கே போவது... நானும் சிட்டுக்குருவி போலத்தான்...

    ReplyDelete
  15. வாங்க செல்வமணி...

    எதிர்காலத்தில் இணையத்தில் உள்ள போட்டோவை பார்த்து எழுதுவார்கள்...

    ReplyDelete
  16. சாம்பல் நிறம் -குறுகுறு கண்கள் -புழுதியில் புரளும் அழகியப் பாங்கு -சோளம் கொத்தும் தோரணை-மின் கம்பங்களில் வரிசையாய் அமர்ந்து கொண்டு பட்சிகளின் மொழியில் பட்டிமன்றம் நடத்தும் கண்ணுக்கினிய காட்சிகள்-இவைகளை மீட்டெடுக்க நானும் மாறப் போகிறேன் மாடி வீட்டிலிருந்து குடிசை வீட்டுக்கு..!..குருவியே..!உன் வீட்டை என் வீட்டில் கட்டிக் கொள்.எனக்கும் ஆசைதான் குருவிக் கூட்டில் வாழ...!!

    ReplyDelete
  17. வாங்க நிரஞ்சா...

    குடிசை வீடானாலும்... குருவிகளின் வீடாக வேண்டும்... அதுவும் அது நம் வீடாக வேண்டும்...

    வாருங்கள் வானம்பாடிகளைக் காக்க...

    ReplyDelete
  18. சித்திர விசவாசமான பெளமார விசாலமான கவிதைகள் எழுதுகிறீர்கள் என்பதாலேயே உங்கட பக்கத்துக்கு யாம் இந்திரோர்சவ விஜயம் தொடர்ந்து செய்கிறோம். நீவீர் லட்டு போன்றதாக நினைக்கும் லெளகீக தமிழ் யமக்கு விருப்பமானதல்ல...... பண்டாரவனிகன் மரபில் தண்டியலங்காரம் எழுதியோன் வகை யாப்புடை தமிழே யாம் விரும்புவதும் எழுதுவதும் என அறிக. எம் தமிழை புரிந்து கொள்ள முடியாவிட்டால் கூட பரவாயில்லை...புரிதல் நிலைக்கு ஏற்ப தானே அறியமுடியும் ஆனால் எம் உயிர் தமிழை தெள்ளு கொள்ளு என்று ஏளனம் செய்தால் எம்மால் உம் அரும்சுவை கவிதையை பருக வர இயலாது என்பது அறிவீர் அய்யரே.

    கவிஞர். பக்‌ஷிராஜன்

    ReplyDelete
  19. 'ஒரு வரியாயினும்

    உனது வரி திரு வரி' குமார நண்பா...

    ReplyDelete
  20. கோபம் வேண்டாம் பக்ஷி ராஜரே...

    தங்கள் அன்பு எப்போதும் வேண்டும் எனக்கு... சாந்தமடைவீராக...

    ReplyDelete
  21. சிட்டுக்குருவி தினத்தில் நினைவுகொள்ள அழகிய கவிதை பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  22. அன்பு நிறை மாதேவிக்கு...

    வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது நன்றிகள்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...