Friday, March 22, 2013

ஒரு துளி அமுது..! - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை



ஒரு துளி அமுது
தேனீக்களுக்கு முக்கியம்
இரு துளி மருந்து
போலியோ ஒழிப்பிற்கு முக்கியம்
மூன்று துளி உயிரணு
உயிர்ப் பெருக்கத்திற்கு முக்கியம்
நான்கு துளி பன்னீர்
விழா வரவேற்பிற்கு முக்கியம்
ஐந்து துளி கண்ணீர்
தூய அன்பிற்கு முக்கியம்
ஆறு துளி விடம்
பாம்பின் பாதுகாப்பிற்கு முக்கியம்
இப்படி இயற்கையோடு
இயைந்து போன துளிகளின்
ஆதியும் அந்தமும் நீரே...
உலகில் வாழும் மனிதனிலும்
மனிதன் வாழும் உலகினிலும்
உள்ளடங்கியிருப்பது எழுபத சதம் நீரே
ஒவ்வொரு துளியும் நமக்கினி உயிர் நீரே...
உலகிலுள்ளோர் இதை உணர்வீரே...
உயிர் நீரை சேமித்திடுவீரே...
வரும் தலைமுறைக்கு 'நீர் வழி' காட்டிடுவீரே..!

*************

இன்று உலக தண்ணீர் தினம்.. அதற்காக எழுதிய கவிதை... கீழே சில குறுங்கவிதைகளைக் கொடுத்திருக்கிறேன்... அதுவும் 'தண்ணீர்' என்பதால்...

*************

குடிநீரை வீணாக்காதீர்
'டாஸ்மாக்' கடையில்
அரசின் வாசகம்..!

*************

குடிமக்களுக்காக குடிநீரை
காய்ச்சித் தராத அரசு
குடிமகன்களுக்காக
லிட்டர் கணக்கில் காய்ச்சித் தருகிறது
டாஸ்மாக்கில்..!

*************

குடிநீரில் சாக்கடை நீர்
கலந்து விற்றாலும்
கண்டு கொள்ளா
அரசு அதிகாரிகள்
டாஸ்மாக் சரக்கில்
நீர் கலந்து விற்றால்
கதகளி ஆடிடுவார்
கை விலங்கை பூட்டிடுவார்
இதுவல்லவோ
'குடிமக்கள்' ஆட்சி..!

*************

இதையும் படிங்க...:  உயிர் தாகத்திற்கு..!

25 comments:

  1. அனைத்தும் அருமை தோழரே...

    சிறப்பிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தனபாலரே...

    தங்கள் தாகம் தீர்ந்ததா..?

    ReplyDelete
  3. Periyasamy KalimuthuMarch 22, 2013 at 4:36 PM

    arumai...

    kanneer thukikalai
    kalavaada mutiyaathu
    thanneer thukikalai
    thantharulum megame
    unnai kalavaada
    orumurai muyalkiren
    yenakkaaga irangki vaa..!

    ReplyDelete
  4. அட அசத்துறீங்களே பெரியசாமி...


    ஆமா... மேகமே உங்களுக்காக இறங்கி வந்துச்சின்னா... அதை எப்படி களவுன்னு சொல்லுவீங்க...

    சும்மாச்சிக்கும் கேட்டேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இனி ஒரு உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள். உங்கள் கவிதை நீரை சேமிப்போம் என்பதை நினைவூட்டுகிறது.
    குறுங்கவிதைகள் எல்லாமே அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நான்தான் பின்னூட்டம் இட்டேன். ஏனோ தெரியவில்லை என்பெயர் அனானி எனக் காட்டுகிறது.
    வே.நடனசபாபதி

    ReplyDelete
  7. சகலராதனையுடன் கூடிய சமூக சிந்தனை நிறைந்த சட்டுவ விசாரம் பொங்கி கோபமாகமல் கோபுர கலசமாய் உயர்ந்து வெண்பொங்கிய ஜலபாதின சமுத்திரமாய் சரப்பிறவாகமாக சிந்துமணித் தூறலாக துட்டிமிடி கூட்டலுடன் வந்துள்ளது. பாகீரத பிராயத்தனம் செய்தால் தான் மகாபலிச் சக்கரவர்த்திதன் சங்கீத முழக்கம் எனவே வரும் என்றாலும் மூன்றாம் உலகப்போர் தண்ணீரை மைய்யப்படுத்தும் என்றால அது மைபாலன் வகை பிதற்றலா என்பது சிந்திக்க தகுந்தது.

    கவிஞர். பக்‌ஷிராஜன்

    ReplyDelete

  8. வணக்கம்

    ஒருதுளி என்ன? உயா்தமிழ் ஏந்தி
    வரும்துளி யாவும் அமுது!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. அன்பர் வே. நடனசபாபதிக்கு...

    தாங்கள் பெயர் குறிப்பிட மறந்திருப்பீர்கள் அல்லது லாக் இன் செய்யாமல் பதிவிலிட்டிருப்பீர்கள்... அவ்வளவே...

    தங்களின் அன்பிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  10. கவிஞர் பாரதிதாசனாருக்கு...

    இச்சிறுவனின் கிறுக்கலையும் படிப்பதற்கு தங்களுக்கு மனமிருக்கிறதா..? தமிழால் பிழைத்தேன் என நினைக்கிறேன்...

    தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  11. கவிஞர் பக்ஷி ராஜருக்கு...

    மூன்றாம் உலகப்போர் மூண்டால் உலகம் மாண்டு விடும்...

    நீரை சேமிப்போம்...

    அன்பிற்கு நன்றி

    ReplyDelete
  12. தனபாலரே...

    தங்களின் அறிவிப்பிற்கும் அன்பிற்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்...

    ReplyDelete
  13. "ஒவ்வொரு துளியும் உயிர்நீரே" அருமை.

    நீர்தின விழிப்புப் பகிர்வு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அன்புக் கவிஞரே ஒரு நாள் வெல்டிங் குமார் மாதிரி டெரர் போஸில் காட்சி தருகிறீர். மறு நாள் ஆடி காரில் போகிற கோமான் மாதிரி இருக்குறீர். கொஞ்சம் கேப் விட்டுப் பார்த்தால் சாது சங்கரலிங்கம் ரேஞ்-ல் போட்டோ போடுறீர். ரொம்ப குரும்புக் காரர் தான் போங்கள்.

    சத்தியவானி

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரரே! வலைச்சரத்தில் உங்கள் அறிமுகங்கண்டு இங்கு வந்தேன்.
    தமிழ்க்கவிதைகள்... அருமை. சிறப்பான சிந்தனைச்சாவி கொண்டு மக்கிக்கிடக்கும் என் அகக்கண்களைத் திறந்தீர்கள். இங்கு அற்புதமான அழகிய காட்சிகளைக் காண்கிறேன்.
    அருமை. வாழ்த்துக்கள்!

    உடலில் ஓடும் செந்நீரும்
    பிறந்ததும் அழும் கண்ணீரும்
    இறந்தவுடன் சாம்பலாகி
    கலந்திடுதே கடல் நீரிலே
    உருவாகி பின் அருவமாகும்வரை
    இந்நீரே தண்ணீரே
    என்றென்றும் எம்மோடே...

    ReplyDelete
  16. அன்பு நிறைந்த கிறுக்கரே (அ)கிறுக்கனே (நீங்க தான் நான் ஒரு கிறுக்கன்னு சொல்லீட்டிங்களே)
    குதம்பை,
    குயில்,
    குரவை,
    குறத்தி,
    கூடல்,
    கொச்சகச் சார்த்து,
    கோத்தும்பி,
    கோழிப் பாட்டு,
    சங்கு,
    சாயல் வரி,
    சார்த்து வரி,
    சாழல்,
    செம்போத்து,
    தச்சராண்டு,
    தச்சாண்டி,
    தாலாட்டு,
    திணைநிலைவரி,
    திருவங்கமாலை,
    திருவந்திக் காப்பு,
    தெள்ளேணம்,
    தோணோக்கம்,
    நிலைவரி,
    நையாண்டி,
    பகவதி,
    படைப்பு வரி,
    பந்து,
    பல்லாண்டு,
    பல்லி,
    பள்ளியெழுச்சி,
    பாம்பாட்டி, பிடாரன்,
    பொற்சுண்ணம்,
    மயங்குதிணை
    நிலைவரி,
    முகச்சார்த்து,
    முகமில் வரி,
    முகவரி,
    மூரிச் சார்த்து,
    வள்ளைப்பாட்டு முதலியன. இவையன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுக்களும் நொண்டிச் சிந்து, சிந்து முதலியவைகளும் கும்மி கோலாட்டம் முதலியவைகளும் பல வகையான கண்ணிகளும் ஆனந்தக்களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக்களைச் சேர்ந்தனவே.கவிதை எப்படி எழுதனும் என்பதே தெரியாமல் அறியாமையில் இருக்கும் அன்பு அய்யாவே, நீங்கள் ஏன் இந்தப் பாடல்கள் பற்றிப் ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்று எழுதக் கூடாது. இவைகளிஅ எப்படி எழுதினார்கள் என்று வாசித்தால் கூட உங்களுகு கொஞ்சம் சுமரா கவிதை வரலாம். தளிர் எஸ்.சுரேஷ் கவிதைகளை படித்தாலும் தெளிவு கிடைக்கும்

    விக்ரம்வர்மா
    தலைவர், இளங்கோ அடிகள் பேரவை,இத்தாலி

    ReplyDelete
  17. வாங்க மாதேவி...

    பூதேவி வாழ ஒவ்வொரு துளியும் முக்கியமல்லவா...

    தங்களன்பிற்கும் ரசனைக்கும் எனது நன்றிகள்...

    ReplyDelete
  18. சத்தியமா சொல்லுங்க சத்தியவானி...

    நான் வெல்டிங் குமாரு...

    ஆடி காரு கோமான்..

    சாது சங்கரலிங்கம் மாதிரியா இருக்கேன்...

    ஏங்க அவங்களையெல்லாம் அசிங்கப்படுத்தறீங்க... அவங்க எல்லாம் ஊரறிந்த பிரபலங்கள்...

    ReplyDelete
  19. அன்பு இளமதிக்கு...

    தங்களின் கவிதை பலாச்சுளையில் ஊறும் தேன் போல...

    அருமை... அருமை....

    ReplyDelete
  20. தலைவர் விக்ரம்வர்மா
    அவர்களே

    இத்தாலி இளங்கோ அடிகள் பேரவையின் மூத்த தலைவர் அவர்களே...

    தங்களின் குட்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத்தருகிறது...

    நேரமில்லாக் காரணத்தால்... வாசிப்புப் பழக்கத்திற்கு விடுமுறை அளித்திருக்கிறேன்...

    வாய்ப்பு கிடைக்கும் போது... படித்து தெளிகிறேன்... நன்றி இக்கிறுக்கனையும் மதித்து பேசியதற்கு...

    ReplyDelete
  21. ஆமாம்... யார் யார் எல்லாம் தண்ணீர் சேமிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்..?

    ReplyDelete
  22. இந்த கவிதை கண்டிப்பாக இப்பொழுது பொருந்தும்

    ReplyDelete
  23. அன்பு பரமசிவத்திற்கு

    தங்களின் அன்பிற்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...