Monday, April 1, 2013

அன்பிற்கு இவன் அடிமை..! - அகர வரிசைக் கவிதை


மோகத்தின் முதற்பிள்ளை
மோகனின் மூன்றாம் பிள்ளை
அன்பினில் அன்றில் பறவை
ஆசையில் அன்னப் பறவை..!

ன்பிற்கு இவன் அடிமை
க்கத்தில் நிகழ்த்துவான் புதுமை
அனைத்தையும் அறிந்து கொள்ள
ஆசைப்படும் இவன் இளமை

வனொன்றும் செய்யாமலே
டற்ற தென்றல்கள் இவனைத் தீண்டும்
இவன் வாசம் பெற ஏங்கும்
ஈரிதழும் பெருமூச்செறிந்து தூங்கும்..!

ண்மையில் ஒன்றுமில்லாதவனெனினும்
க்கத்தை நிறைத்து வைப்பான்
உலகம் உய்ய உழைத்திருப்பான்
ஊடல் பல செய்து வைப்பான்

ளிமை வாழ்க்கை விரும்புமிவன்
ழை பெற்ற எளிய மகன்
என்னையும் நேசிக்கும்
ஏந்திழையே நான் செய்த பேறென்ன

யம் பட்டு நிற்கிறேன் - அன்பே என்
ஐயத்தை நீக்குவாய்... உன்னருகாமைக்கு
ம்புலனும் ஏங்குவதேன்
ஐயகோ என்று அலறுவதேன்...

ன்றாய் வாழ நினைக்கிறேன்
வியமே பதிலைச் சொல்...
ஒன்றிணைவது எப்போது? - நாம்
ஓடி விளையாடுவது எப்போது?

வை சொன்ன மொழி கேட்டால்
ஔடதமாய் இனிக்குதடி..
க்கறையே நான் இக்கரையில்
ஃதே அன்பே நானென்ன செய்ய...?

(என் கவிதை ஓர் தமிழ் விரும்பி. தமிழ் குறும்பி... அவளுக்கென அகர வரிசையில் எனை வைத்து அவளுக்காக வரைந்த கவிதை இது...)

8 comments:

  1. உயிர் எழுத்துக்களை வைத்து புனையப்பட்ட கவிதைக்கு தலைப்பு இல்லையென்றாலும் உயிர் இல்லாமல் இல்லை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அன்பு ஐயாவிற்கு...

    தலைப்பிடாமல் தவறுதலாய் பதிவிலிட்டுவிட்டேன். உடனே அதை சரி செய்தும் விட்டேன்.

    அதற்குள் கவிதையைப் படித்து, பின்னூட்டமும் இட்ட உங்களை என்னென்று சொல்வேன் நான்...

    வார்த்தைகள் வரவில்லை.. வணங்குகிறேன்... நன்றி...

    ReplyDelete
  3. நீங்கள் மட்டுமா...? நாங்களும்...

    அசத்தல்... அழகு...

    வாழ்த்துக்கள்... (இருவருக்கும்)

    ReplyDelete
  4. வருக தனபாலரே...

    வாழ்த்தியமைக்கு நன்றி...

    ReplyDelete

  5. arumai migavum arumai kurumbu meesaiare...

    Helen Sathya

    ReplyDelete
  6. ரசித்தமைக்கு நன்றி ஹெலன்

    ReplyDelete
  7. அருமை கலக்கீட்டீங்க

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  8. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்தோட்டத்தின் காற்று இப்பக்கம் வீசுகிறது...

    மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது... வருகைக்கு நன்றி யூஜின்

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...