Friday, April 12, 2013

உன் பிறப்பால்..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை

ண்டத்தில் சுற்றித் திரியும்
      துண்டங்களில் அழகினும் பேரழகிய
வெண்ணிலவாய் உருவெடுத்து
      பெண்ணிலவாய் பிறந்தாய் இன்று
னிலம், நீர், காற்று, வெளியென
      உன் பிறப்பால் களிப்பெய்திய நாளின்று
ஸ்வரமே நீ பிறந்த இந்நாள் மட்டும்
      இன்றி என்னாளும் உன்னாளாகட்டும்!


(என் அலுவலக தோழிக்கு நேற்று பிறந்த நாள். நான் அலுவலகத்தில் சோர்ந்திருக்கும் போதெல்லாம், எனை அன்போடு விசாரிப்பவர். நேற்றும் நான் அப்படி இருக்கவே, அவருக்கு நான் ஒருவாழ்த்து கூட சொல்லவில்லை. மாலையில் அவரே எனை அணுகி, ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டுதானே இருப்பீர்கள். அப்படி இருப்பதுதான் எங்களுக்குப் பிடிக்கும்  என்று, என்னை ஆசுவாசப்படுத்தினார்... அதன் பிறகே அவருக்கு வாழ்த்து சொல்ல விரும்பி, இக் கவிதை  மூலம் வாழ்த்தை சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். 

இக்கவிதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் தடித்திருக்கும் முதல் எழுத்தை மேலிருந்து கீழாக படித்துப் பார்த்தால் என் தோழியின் பெயர் படிக்கக் கிடைக்கும்.)

10 comments:

  1. அருமை... உங்களின் தோழிக்கு (அவெனிஸ்) பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்தியமைக்கு நன்றி...

    அவங்க அ.வெனிஸ் தோழரே...

    ReplyDelete
  3. வெனிஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துகள் வெனிஸ்.

    தோழர் வெனிஸை கவிதை எழுதி கவுரவப்படுத்தியதற்கு நன்றி தோழர் மோகன்.

    ReplyDelete
  5. உங்கள் தோழியருக்கு வாழ்த்துக்கள்
    வழக்கமான வாழ்த்துக்கள் கவிதை
    சுவை இல்லை ..

    ReplyDelete
  6. அன்பு நண்பர் கும்மாச்சிக்கு

    எனது நன்றிகள்..!

    ReplyDelete
  7. தோழமையோடு வாழ்த்து சொன்ன
    தோழர் யுவகிருஷ்ணாவிற்கு நன்றிகள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்தான் முக்கியம் நண்பரே

    கவிதை கிடக்கட்டும்... நன்றி தங்களது வாழ்த்திற்கு...

    ReplyDelete
  9. Periyasamy KalimuthuApril 13, 2013 at 11:04 AM

    என் வாழ்த்துக்கள்...

    இன்று போல் என்றும் நலமாய் வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    Periyasamy Kalimuthu

    ReplyDelete
  10. தங்களின் வாழ்த்திற்கு நன்றி தோழரே

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...