Thursday, July 18, 2013

வாலிபக் கவிஞரே வாலி! - இரங்கல் கவிதை


வாலிபக் கவிஞரே வாலி
வாழ்வாங்கு வாழ்ந்தவரே வாலி - நீ
தமிழ்க் கவியில்
நுண்மாண் நுழைபுழம் மிக்க ஆழி!
காதல் பாடல்களில்
எம் மனதைத் தாலாட்டும் தூளி!
சோகப் பாடல்களில்
மனதை கவிழ்த்துப் போடும் சோழி!
தத்துவத்தில்
எம் மனதை ஆழ உழும் மேழி!
வீரத்தில்
எமை தட்டி எழுப்பும் சேவற்கோழி!
காவியத்தில்
எமைக் கவர்ந்த அறி வாளி!
நீ மறைந்தாலும்
உம் வரிகள் இவ்வுலகில் வாழி வாழி!

14 comments:

  1. கவிஞரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் நண்பா... அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

    ReplyDelete
  2. வாலி என்றும் வாழி...

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  3. எனை தாலாட்டிய கவிஞர்களில் வாலியும் ஒருவர் நண்பா...

    ReplyDelete
  4. வாலி என்றும் நம்முடன் வாழ்வார் தனபாலரே...

    ReplyDelete
  5. வாலி இல்லாத திரையுலகம் போலி

    ReplyDelete
  6. கவிஞர் வாலி மறையவில்லை. வாழ்கிறார் நம்மோடு என்பதை அவர் படைப்புகள் பறை சாற்றும்.

    ReplyDelete
  7. வாலி நின்புகழ் கடலாழி
    நிலவுக்கோ ஒளி
    நின்புகழ் வாழி...
    ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

    ReplyDelete
  8. வருந்துகிறோம்..!நெஞ்சில் நீங்கா நினைவுகளுடன்..!

    ReplyDelete
  9. எத்துணை ஆறுதல் தந்தாலும் மாண்டவர் மீள்வதில்லை...

    அவர் பாடல்களே நமக்கு ஆறுதல் பரிதி...

    ReplyDelete
  10. // வே.நடனசபாபதி said...
    கவிஞர் வாலி மறையவில்லை. வாழ்கிறார் நம்மோடு என்பதை அவர் படைப்புகள் பறை சாற்றும்.//

    தங்களின் கருத்தே என் கருத்தும் ஐயா...

    ReplyDelete
  11. கவியாழியின் அஞ்சலி கவிஞர் வாலியின் காலடியில் சேரட்டும்...

    ReplyDelete
  12. லட்சோப லட்சம் தமிழ் ரசிகர்களை கண்ணீரில் மூழ்க வைத்து விட்டார் வாலி...

    ReplyDelete
  13. கவிஞரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .

    ReplyDelete
  14. கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...