உன் அன்னைக்கு
நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்
என்பதை விட
என் அன்னையே
என் மகளாகப்
பிறந்திருக்கிறாள் என்பதே
உண்மை என
உணர வைத்த தாயே
எங்கள் உயிர் மகள் நீயே!
நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்
என்பதை விட
என் அன்னையே
என் மகளாகப்
பிறந்திருக்கிறாள் என்பதே
உண்மை என
உணர வைத்த தாயே
எங்கள் உயிர் மகள் நீயே!
இதயம் முழுதும்
இன்பம் பொங்குதடா!
அப்பா என நீ
எனை அழைக்கும் போது
என் ஆயுள் கூடுதடா!
என் மகளே... எங்கள் உயிரே...
நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!
உன் அன்னையைப் போல்
கற்பூர மூளையடா உனக்கு
எனையும் குழந்தையாக்கும்
குதூகலக் குறும்படா உனக்கு
மயில் தோகையைப் போல்
படரும் கூந்தலடா உனக்கு
புள்ளி மானைப் போல்
துள்ளும் நடையடா உனக்கு
மலரும் தாமரையைப் போல்
மனம் நிறையும் சிரிப்படா உனக்கு
உனை மகளாய் பெற்றதில்
மகிழ்ச்சி உனக்கல்லடா எனக்கு!
இன்பம் பொங்குதடா!
அப்பா என நீ
எனை அழைக்கும் போது
என் ஆயுள் கூடுதடா!
என் மகளே... எங்கள் உயிரே...
நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!
உன் அன்னையைப் போல்
கற்பூர மூளையடா உனக்கு
எனையும் குழந்தையாக்கும்
குதூகலக் குறும்படா உனக்கு
மயில் தோகையைப் போல்
படரும் கூந்தலடா உனக்கு
புள்ளி மானைப் போல்
துள்ளும் நடையடா உனக்கு
மலரும் தாமரையைப் போல்
மனம் நிறையும் சிரிப்படா உனக்கு
உனை மகளாய் பெற்றதில்
மகிழ்ச்சி உனக்கல்லடா எனக்கு!
//என் அன்னையே என் மகளாகப்
ReplyDeleteபிறந்திருக்கிறாள் என்பதே உண்மை.//
அன்பு மகளில் அன்னையைப் பார்க்கும் உங்களுக்கும், இன்று பிறந்த நாள் காணும் தங்கள் அன்பு மகளுக்கும் எனது உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!
சிறப்பான உணர்வுடன் வரிகள்... செல்லத்திற்கு எனது அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteRompa nalla irukku very Nice, Unarvu poorvama irukku,oru oru linenum rasithu padiththen. Thanks ma.
ReplyDeleteநடன சபாபதி ஐயாவிற்கு நன்றிகள்...
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றி தனபாலரே...
ReplyDeleteஉணர்வு பூர்வமாய் வாசித்து மகிழ்ந்தமைக்கு நன்றி 'நட்டு'
ReplyDeleteவணக்கம், தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரியில் சென்று காணவும். நன்றி...
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/08/blog-post_18.html
அட நீங்க அறிமுகப் படுத்தும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை தலைவா...
ReplyDeleteஇருப்பினும் தங்கள் அன்பிற்கு தலை வணங்குகிறேன்...
தங்கள் அன்பிற்கும் நட்பிற்கும் எனது நன்றிகள்...
Super
ReplyDelete