நடையழகில் காட்டுகிறாய்
மானினத் துள்ளல்!
இடையழகில் பூட்டுகிறாய்
மயக்குறு விள்ளல்!
இதழழகில் காட்டுகிறாய்
முல்லைப்பூ எள்ளல்!
விழியழகில் நீட்டுகிறாய்
கயல்களின் அள்ளல்!
மார்பழகில் காட்டுகிறாய்
மனம்மயக்கும் கள்ளல்!
மதியழகில் தீட்டுகிறாய்
அசாத்திய மள்ளல்!
சிகையழகில் காட்டுகிறாய்
மேகத்தின் மேடுபள்ளல்
நகையழகில் கூட்டுகிறாய்
நறுந்தேனின் நள்ளல்!
என்னிதயத்தில் இட்டுவிட்டாய்
இடையழகில் பூட்டுகிறாய்
மயக்குறு விள்ளல்!
இதழழகில் காட்டுகிறாய்
முல்லைப்பூ எள்ளல்!
விழியழகில் நீட்டுகிறாய்
கயல்களின் அள்ளல்!
மார்பழகில் காட்டுகிறாய்
மனம்மயக்கும் கள்ளல்!
மதியழகில் தீட்டுகிறாய்
அசாத்திய மள்ளல்!
சிகையழகில் காட்டுகிறாய்
மேகத்தின் மேடுபள்ளல்
நகையழகில் கூட்டுகிறாய்
நறுந்தேனின் நள்ளல்!
என்னிதயத்தில் இட்டுவிட்டாய்
மாபெரும் தொள்ளல்!
எப்போது வந்து நீக்குவாய்
மனதிலுள்ள பொள்ளல்!
மயிலிறகென வருடுகிறாய்
பேச்சினில் சுள்ளல்!
சிரித்து எனை சிக்கவைத்தாய்
மையலெனும் சள்ளல்!
உன்னிடம் ஈர்த்து விட்டாய்
காதல்தனை கொள்ளல்!
கனவுகளில் ஆழ்த்திவிட்டாய்
நினைவுகள் உள்ளல்!
பெண்ணினத்தை நாண வைத்தாய்
நீயே பேரழகின் வள்ளல்!
எப்போது வந்து நீக்குவாய்
மனதிலுள்ள பொள்ளல்!
மயிலிறகென வருடுகிறாய்
பேச்சினில் சுள்ளல்!
சிரித்து எனை சிக்கவைத்தாய்
மையலெனும் சள்ளல்!
உன்னிடம் ஈர்த்து விட்டாய்
காதல்தனை கொள்ளல்!
கனவுகளில் ஆழ்த்திவிட்டாய்
நினைவுகள் உள்ளல்!
பெண்ணினத்தை நாண வைத்தாய்
நீயே பேரழகின் வள்ளல்!
(நண்பர் சாமுராய் கேட்டுக்கொண்டதற்காக 'வள்ளல்' எனும் தலைப்பில் இக்காதல் கவிதை. உங்களுக்கு இங்குள்ள சொற்களுக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்கும்தான்... எதுக்கும் அருஞ்சொற்பொருள் கொடுத்திடறேன்...)
கயல் = மீன், மதி = அறிவு, மள்ளல் = வலிமை,
கள்ளல் = திருடுதல், சிகை = கூந்தல், பள்ளல் = பள்ளம்,
நள்ளல் = உறவு கொள்ளுதல், தொள்ளல் = துளை,
பொள்ளல் = வடு, சுள்ளல் = வலிமை, மையல் = காதல்,
சள்ளல் = சேறு, சிக்கல், உள்ளல் = நினைத்தல், மகிழ்தல்)
---------------------------------------------------------
![Blogger](https://www.blogger.com/img/blank.gif)
கவிதை நல்லா இருக்கு அண்ணா :)
நீங்க தலைப்புக் குடுத்தா கவிதை குடுக்கிறதுல கர்ணனாமே? எனக்கு "வள்ளல்" எண்டுற தலைப்பில ஒரு (காதல்) கவிதை?
வாழ்த்துக்கள் :)
நீங்க தலைப்புக் குடுத்தா கவிதை குடுக்கிறதுல கர்ணனாமே? எனக்கு "வள்ளல்" எண்டுற தலைப்பில ஒரு (காதல்) கவிதை?
வாழ்த்துக்கள் :)
![Delete](https://www.blogger.com/img/blank.gif)
ஒவ்வொரு வரியும் ரசித்தேன்... அழகிய சொல்லாடல்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலரே...
ReplyDeleteஅதெப்படி உடனே உங்களிடமிருந்து பின்னூட்டம் வந்து விடுகிறது..?
உங்ககிட்ட இருந்து கத்துக்கணும் தலைவரே...
வான் மயங்கும் சிரிப்பொலியும்
ReplyDeleteநான் மயங்கும் விண்ணொளியும் -
பூட்டிய தேன் நிலவே !
அள்ள அள்ள பெருகிடும் காதலின் விளை நிலம்தான் உன் உள்ளமா -உன்
அழகல்ல வள்ளல்
நம் காதலில் பெருகி வரும் வெள்ளமாய் கலந்திருக்கும் அன்பின் அருவிதான் வள்ளல் !!
கலக்கறீங்க பாஸ் நீங்களும்...
ReplyDeleteகவித.. கவித... அசத்துங்க...
கவிதை அருமை. படித்ததும் மனம் போட்டது ஒரு துள்ளல்! வாழ்த்துக்கள் கவிஞரே!
ReplyDeleteவாங்க தலைவரே...
ReplyDeleteநானெல்லாம் கவிஞனா... அல்ல அல்ல...
சாதாரண கிறுக்கன் நான் தலைவரே... துள்ளல் போட்டது கண்டு மகிழ்கிறேன்... 'சிக்கல்' கவிதை பற்றி ஒரு தகவலையும் தாங்கள் தரவில்லையே ஏன் தலைவரே..?
ReplyDeleteஇந்த கவிதையை ஏனோ படிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க, கவிதை அருமை, நான் கொடுத்த ‘சிக்கல்’ தலைப்புக்கான கரு காதலா கடமையா என தவிக்கும் காதலனின் நிலை. திருமணமாகாமல் இருக்கும் தங்கைக்கு திருமணமாக வேண்டுமென்றால் வரப்போகிற மாப்பிள்ளையின் தங்கையை மணக்கவேண்டும் என்ற மாப்பிள்ளை வீட்டாரின் நிபந்தனை ஒருபுறம். காதலை தியாகம் செய்ய முடியாமல் தவிக்கும் மன நிலை ஒருபுறம். இதுதான் கரு.
மன்னிப்பு வேண்டாம் ஐயா... தங்களை விட சிறியவன் நான்...
ReplyDeleteஇப்படி ஒரு தலைப்பை மட்டும்தான் அப்போது கொடுத்தீர்கள்... கரு அப்போது இப்படி நீங்கள் தரவே இல்லை ஐயா...
இருப்பினும் தாங்கள் இப்போது கொடுத்த தலைப்புதான் மிகப்பெரிய சிக்கல்...
இருப்பினும் முயற்சிக்கிறேன்...
தங்களிடம் சிறு விண்ணப்பம்... அந்த 'சிக்கல்' கவிதையில் தங்களது பின்னூட்டம் வேண்டும்... முடிந்தால் அதற்கென பிரத்யேகமாக இடவும்...
நன்றி..!
அடுக்கு மொழி ஒவ்வொன்றும் அழகு! மிக மிக அழகான கவிதை. மிகவும் ரசித்தேன் :) கவிதைக்கு நன்றி அண்ணா :)
ReplyDeleteவாங்க சாமுராய்...
ReplyDeleteதாங்கள் கேட்ட தலைப்பில் கவிதை கொடுத்து விட்டேன்...
தாங்கள் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா..?
அன்பிற்கும், ரசித்தமைக்கும் எனது நன்றிகள்..!
ReplyDeleteவணக்கம்!
வில்தொடுக்கும் அம்பாய் விரைகின்ற பாக்களைச்
சொல்கொடுக்கும் வள்ளலே சூடு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கம்பன் கழக தலைவரிடமிருந்து வாழ்த்து...
ReplyDeleteவஷிஷ்டர் வாயால் வாழ்த்து பெற்ற பேறு கிட்டிற்று....
தங்களன்பிற்கு நன்றி பாரதிதாசனாரே...
"தாங்கள் கேட்ட தலைப்பில் கவிதை கொடுத்து விட்டேன்..."
ReplyDeleteநன்றிகள் பலகோடி :)
"தாங்கள் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா..?"
நான் கேள்விப்பட்டது அத்தனையும் உண்மை :)) இன்னும் தலைப்பு வேணுமெண்டா சொல்லுங்க, கைவசம் நிறைய இருக்கு :)
"அன்பிற்கும், ரசித்தமைக்கும் எனது நன்றிகள்..!"
என்றைக்கும் எப்பொழுதும் :))
அன்பு சாமுராய்க்கு...
ReplyDeleteஉமது அன்பிற்கு நன்றி...
ஐயா நடன சபாபதி ஒரு தலைப்பும் கவிதைக்கான கருவும் கொடுத்திருக்கின்றார்...
அதை எழுதிவிடுகிறேன்... அதற்குப்பிறகு தலைப்பினை தாருங்கள்... எல்லோரது விருப்பத்தையும் நிறைவேற்றுவோம்...
உங்கள் கவிதைகளைக் காண நேர்ந்தது.
ReplyDeleteபேரழகின் வள்ளலும் ,குழந்தைக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கவிதையும் நன்றாக வந்துள்ளன. வாழ்த்துக்கள்
-ஏகாந்தன்
தங்களின் வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றி ஏகாந்தன்...
ReplyDeleteதமிழ்ச்சொற்களைத் தேடித் தேடி அமைத்த அழகிய கவிதைக்கும், கவிதைக்கேற்ற சங்குமணிகள் அணிந்த சங்கக்காலப் பெண்ணின் படத்திற்கும் அத்தனை பொருத்தம்.
ReplyDeleteஒரு தமிழாசிரியராக படிக்கும் அத்தனை பேருக்கும் இவ்வளவு தமிழ்ச்சொற்களை அறிமுகப் படுத்தியுள்ளமை கண்டு மெத்த மகிழ்ச்சி.
வலைத்தளத்தில் ஒரு தமிழ்ப்பணி-
வாழ்த்துகள்.
நன்று நண்பரே.
பெண்மை ரசிக்கும்படி இக்கவிதை இருப்பது கண்டு மகிழ்கிறேன்...
ReplyDeleteஅதிலும் தமிழாசிரியை ரசிக்கும்படி இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'