Wednesday, July 15, 2015

கல்வி தந்த ஐயா..! - பிறந்தநாள் கவிதை!




கல்வி தந்த ஐயா!
எங்கள் காமராசர் ஐயா! - நீங்கள்
கல்வித் தந்தை ஐயா
எங்கள் காமராசர் ஐயா!

களத்து மேட்டில் கிடந்தவனை
கல்வி கற்க வைத்தவர்!
ஆடு மாடு மேய்த்தவனை
ஏடெடுக்க வைத்தவர்! 
                    
பாடுபடும் ஏழைகளுக்கென்று
பள்ளிக்கூடம் திறந்தவர்!
பசியில் படிக்கும் பிள்ளை கண்டு
உணவு திட்டம் தந்தவர்!                     
(கல்வி தந்த…)

கல்வி எனும் செல்வம் தன்னை
தமிழ்ச் சந்ததிக்கு தந்தவர்
மதிய உணவுத் திட்டத்தினை
உலகினுக்கே ஈந்தவர்!

தமிழ்நாடு செழிக்க தரணி போற்றும்
தொழிற் பேட்டைகளை திறந்தவர்
ஏழை விவசாயிகள் ஏற்றம் பெற
பல நீரணைகள் கட்டியவர்!                   
(கல்வி தந்த…)

ஏழைகளுக்காய் திட்டம் தீட்டி
ஏழைப் பங்காளர் ஆனவர்
காரியங்களை கணக்காய் தீட்டி
கர்ம வீரர் ஆனவர்! 
           
இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை
வேண்டாமென மறுத்தவர்
லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கி
நாட்டின் ‘கிங் மேக்கர்’ ஆனவர்!          
(கல்வி தந்த…)

பெருமை கொள்ளும் தலைமையேற்று
பெருந்தலைவர் ஆனவர்
கதராடையுடன் போராடியதால்
‘காலா காந்தி’ ஆனவர்!

தமிழகத்தை ஆட்சி செய்து
அதை பொற்காலமாய் மாற்றியவர்
வரலாற்றுப் பக்கங்களில் மறத்தமிழனாய்
வாகை சூடி நிற்பவர்!                     
(கல்வி தந்த…)

11 comments:

  1. அனைவரையும் படிக்க வைத்த படிக்காத மேதை... ஒவ்வொரு வரியும் சிறப்பு...

    ReplyDelete
  2. நன்றி தனபாலரே...

    ReplyDelete
  3. தேடிக் கிடைக்காத பெருஞ் செல்வம் காமராசர்.

    ReplyDelete
  4. மீண்டும் வரவேண்டும் ஐயா

    ReplyDelete
  5. நன்றி 🙏🙏🙏🙏👌👌👌👌

    ReplyDelete
  6. அருமை

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...