Thursday, January 14, 2016

தைப் பொங்கல்..!




வான்மழை பொய்க்காமல்
நீர்நிலை வற்றாமல்
வயல் வெளி சிறுக்காமல்
பயிர் வகைகள் கருக்காமல்
உழவன் நிலை தாழாமல்
தமிழன் மானம் வீழாமல்
இந்த ஆண்டிலேனும்
காக்கட்டும் இந்த தைப் பொங்கல்..!

பூங்கரும்பு பந்தலிட
தேன்கரும்பு பொங்கலிட
வானுயர்ந்த சூரியனும்
நிலமுயர்த்தும் விலங்குகளும்
ஏர் பிடிக்கும் தமிழினமும்
செழித்துத் தழைத்திட
செம்மையாய் வரட்டும்
இந்த தைப்பொங்கல்..!

(என் அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்)

4 comments:

  1. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி தனபாலரே...

    ReplyDelete
  4. நன்றி என் நட்பே...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...