Friday, August 28, 2009
Wednesday, August 26, 2009
தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!
உன் கூந்தலை கலைத்துச்
சென்ற குற்றத்திற்காக
தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!
கூந்தல் கலைந்து போனாலும்..?
உன் அழகு குறையாமல்
மேலும் கூடியிருக்கிறது என்பதால்
தென்றலை தண்டிக்காமல் விடுகிறேன்..!
மருதாணிச் சிவப்பு..!
நீ வெட்கப்பட்டாலே போதும்
உன் முகம் மட்டுமன்று
முழு உடலும் சிவந்து விடும்..!
பிறகெதற்குப் பெண்ணே
மருதாணிச் சிவப்பு..!