உன் கூந்தலை கலைத்துச்
சென்ற குற்றத்திற்காக
தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!
கூந்தல் கலைந்து போனாலும்..?
உன் அழகு குறையாமல்
மேலும் கூடியிருக்கிறது என்பதால்
தென்றலை தண்டிக்காமல் விடுகிறேன்..!
வெறும் சதைப் பிண்டங்களின்
மேல் பித்து
கொண்டுத் திரியும்
பித்தர்களே..!
நீங்கள் ஆசைப்படும்
அப்பூத உடல்
அடங்கிவிட்டால்
கடைசியில்
ஒருபிடி சாம்பலுக்குள்
அடங்கிவிடும்..!