Wednesday, April 27, 2011

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..! - ஈழத் தமிழ்க் கவிதை!



சிங்கள ராணுவத்தினரால்
அப்பாவித் தமிழர்கள்
நாற்பதாயிரம் பேர்
உருத்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள்
என்று அதிகாரப் பூர்வமாய்
ஐ.நா. தனது நாவினை
தற்போதுதான் திறந்திருக்கிறது..!

அன்று கொன்றழிக்கப்பட்ட
கொடும் சரித்திரம் இன்றுதான்
அதிகார பூர்வமாய்
உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது...
போர்க்குற்றம் புரிந்தான் சிங்களன்
என்று உலகமே தற்போது
சிலுப்பிக் கொண்டிருக்கிறது..!

அன்றே எம்மீழத்தமிழன்
இங்கொடுஞ்செயல்களுக்கான
ஆதரங்களைக் காட்டினான்...
அப்பாவிகளை காக்கும்படி
அண்டை நாடுள்பட
அனைத்து நாடுகளிடம் முறையிட்டான்
அம்மக்களைக் காத்திட
அவனாவியை ஈந்தான்..!

வீரத்தின் விளை நிலங்களில்
எம்மீழத் தமிழனின் வீரம்
பரிசோதிக்கப்பட்டது...
அச்சோதனையில்
கொடும் படைக்கஞ்சா புலிகள் என்று
எம்புலிகள் வீரச் சமர் புரிந்தனர்
வீரமாய் மரணத்தை தழுவினர்..!

அங்கே வீழ்ந்தது ஒவ்வொன்றும்
ஈழத்தமிழனின் சிதையல்ல...
ஈழத்தமிழ் விடுதலையின் விதை...
வீரப் புலிகளின் விடுதலைக் கதை...
தன் தமிழினம் காக்க...
தன் தமிழ்க்குலம் காக்க...
தன் தமிழ் மக்களைக் காக்க...
மரணத்தைத் தழுவிய வீர மறவர்களின் கதை...

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..!
எம்மீழத்தமிழ் மக்களின் உயிர்த்தியாகத்திற்கு
உற்ற பலன் கிடைக்க வேண்டும்..!
போர்க்குற்றம் புரிந்த புல்லர்களுக்கு
சரியான புத்தி புகட்டிட வேண்டும்..!
புலிகளின் தன்னலமற்ற தியாகத்திற்கு
ஈழத்தமிழ் மண் கிடைத்திட வேண்டும்..!
எம் தமிழ் மக்கள் அங்கே சுதந்திரமாய்
வாழ வழிவகை செய்திடல் வேண்டும்..!
இதை அத்தனையும் பெரிதாய்க் கேள் ஐ.நா.வே..!
இவைகளத்தனையும் என்று கிடைக்குதோ
அன்றுதான் எம் புலிகளின் ஆன்மா
அமைதி பெறும்... தியாகம் சுடர் விடும்..!

12 comments:

  1. அற்புதமான கவிதை

    ReplyDelete
  2. வாங்க கலைசெல்வன்...

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் எனது நன்றிகள் பல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. வாங்க தர்மா...

    தங்களின் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. மோகனன் உங்கள் உணர்வுக்கு
    நன்றி.

    எத்தனை கவிதைகள் எழுதினாலும்,
    சொன்னாலும் போன உயிர்கள் அனைத்தும் திரும்புவதில்லை

    மொத்தத்தில் சொல்வதென்றால்......
    தமிழராய் ஈழத்தில் பிறந்ததே பாவம்!!

    - கலா

    ReplyDelete
  5. அன்பான கலாவிற்கு...

    தங்களின் ஆதங்கத்தை நானறிவேன்... என்னுடைய ஆதங்கமும் அதுவே... உலகத் தமழர்களின் ஆதங்கமும் அதுவே...

    காலம் மாறும்... காட்சிகள் மாறும்...

    காத்திருப்போம் கலா...

    ReplyDelete
  6. unarvu poorvamana varikal

    very Nice Mohanan sir

    By Bhuvana

    ReplyDelete
  7. Extraordinary Very nice..........


    Thanks & Regards,
    R. Saranya.

    ReplyDelete
  8. very very superb moganan..!


    - Jothi

    ReplyDelete
  9. நன்றி புவனா...

    இனியேனும் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. நன்றி சரண்யா..

    என் உள்ளத்தில் கொப்பளித்த கோபத்தை இங்கே கொட்டிவிட்டேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. வாங்க ஜோதி...

    கருத்திற்கு நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...