Tuesday, December 20, 2011

வலி அறிதல் - முல்லை பெரியாறு அணை சிறப்புக் கவிதை


'கொண்டான் கொடுத்தான்' என
விளங்கிய தமிழனும்
கேரளனும்
இன்று கொலைவெறியோடு
ஒருவரை ஒருவர்
கொளுத்தி விடப் பார்ப்பதேன்..?

வெள்ளை இனத்தில்
வெளிப்பட்ட
வெளிச்சக் கீற்றாய்
வந்த பென்னி குயிக்
தன் கடைசி 'பென்னி' வரை
செலவிட்டுக் கட்டிய
முல்லைப் பெரியாறால்
வந்த வினையா அது?

வெளிநாட்டில் பிறந்த
பென்னி குயிக்கிற்கு இருந்த
நாடுகடந்த நேசம்
நமக்கில்லாமல்  போனதேன்..!
இங்கேயே பிறந்து வளர்ந்த
தமிழனுக்கும்
கேரளனுக்கும் அந்த உணர்வு
இல்லாமல் போனதேன்..?

வேற்றுமையில் ஒற்றுமை
காணச் சொன்ன
நம் இந்தியாவில்
நம் ஒற்றுமையில் வேற்றுமையை
கிளப்பி விட்டவர்கள் யார்..?
அந்த கீழ்த்தர மூடர்கள் யாரென அறிக..?
அரசியல் ஆதாயம் தேடும்
பச்சோந்தி நாய்கள் எவையெனத் தெளிக..!
சிந்திக்கத்தானே ஆறாம் அறிவு..?
அதை சிந்தையிலிருந்தே
அகற்றி விட்டது ஏன்?

அதிகம் படிப்பறிவு பெற்ற
மக்கள் அங்கே மாக்களாய்
தமிழர்களிடம் நடந்து கொள்ள...
நாமும் அதே போல்
நடந்து கொள்ளல் நியாயமா?
வலி என்பது அனைவர்க்கும்
பொது என்றாலும்...
அதையே திருப்பி செய்வது
தமிழரின் மாண்பல்லவே..!

உங்கள் எதிர்ப்பை காட்ட
அமைதியையும் அகிம்சையும்
கையாளுங்கள்...
அமைதியாய் போனால்
அடங்கிப் போவது என்பதல்ல..?
அது அன்பின் வழி எனக் கொள்க..!
அன்னை தேசத்தின் மீதுள்ள
அபிமானம் எனக் கொள்க..!
அமைதியாய் பேசி தீர்த்துக் கொள்க..!

நம்மின் வலி அறிதலை
நையாண்டியாய் கேரளம் கொண்டால்
அவர்களை நையப்புடைக்க
வினாடி நேரம் ஆகாது...
விரைவில் நல் முடிவு வரும்..!
அது வரை கேரளத்து பொருட்களை
புறக்கணியுங்கள்..
கேரளத்து கடைகளை புறக்கணியுங்கள்
இங்கிருக்கும் கேரளர்களை புறக்கணியுங்கள்

நம் வலி(மை)யை
ஆதிகாலம் தொட்டே
அவர்களறிந்திருப்பர்...
சிறுநரி ஊளையிட்டு
சிறுத்தை ஓடாது என்பதை
கேரளனுக்குக் காட்ட
விரைவில் நமக்கு காலம் வரும்..!
அன்பால் கட்டுண்டோம்...
காத்திருப்போம்...
காலம் வரும் சாதிப்போம்..!

******************************

ஆர். சரண்யா என்பவர் 'மழையினை ரசிக்கும்' என்ற கவிதைக்கு பின்னூட்டமிடுகையில் 'வலி அறிதல்' என்ற தலைப்பில் கவிதை கேட்டார். அதை இன்றைய முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இணைத்து எழுதியிருக்கிறேன்... நன்றி..!

******************************


Anonymous Saranya R said...



Very Nice!!!!!!!

I Need kavithai for the topic of Vali arithal!!!!!!

Saranya R
15 December 2011 12:44 PM

18 comments:

  1. Very nice lines ethilirukkum anathu varikalum thamilanai thatti elupuvathu ullathu really super iruku Ganesh

    By
    Bhuvana

    ReplyDelete
  2. நல்ல அருமையான கவிதை. அமைதியாய் போனால் அடங்கிப்போவது அல்ல. நல்ல கருத்து.

    ReplyDelete
  3. படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. அன்பு கும்மாச்சிக்கு...

    ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. முத்தமிழ்December 21, 2011 at 5:40 PM

    நன்றி தோழரே.....

    ReplyDelete
  6. வருகைக்கும், வாசித்தமைக்கும் மிக்க நன்றி தோழரே...


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. the content of your poem is nice and good.if possible you pl come to madurai on 24.12.2011.on that day several poets,writers are join their hands for mullai periyar .pl ct kirish 9894840093

    ReplyDelete
  8. அன்பான கிரிஷ்ஷிற்கு...

    தங்களின் அன்பிற்கு நன்றி.. ஆனால் என்னால் மதுரை வர இயலாது. ஆகவே தாங்கள் எனது படைப்பை தாங்களே அங்கு ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  9. good all are people see the kavithai...

    ReplyDelete
  10. hello friend
    gd mng u r kavithai is express the pain of our tamil people,i dont know when they feel pain of human feelings.

    i have a kavithai about tsunami i will send u later u read and reply me andalso i have lot of intrested to participate in kavithai competition so intimate me anybody anywhere conduct the competiton

    ReplyDelete
  11. ரசித்தமைக்கும் வாழ்த்தியமைகுகம் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  12. வாங்க பிரபு

    தங்களின் அன்பிற்கு நன்றி

    கவிதைப் போட்டி இருப்பின் கண்டீப்பாக தகவல் தருகிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  13. நல்ல அருமையான கவிதை.

    ReplyDelete
  14. ரசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சசிகலா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  15. Thanks Very nice..!

    Saranya R

    ReplyDelete
  16. நன்றி சரண்யா...

    தாங்கள் கேட்ட தலைப்பில் கவிதை கொடுத்தது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  17. very nice................
    we'll wait the time..........

    Sri Vickram Antani

    ReplyDelete
  18. அன்பு விக்ரம் ஆண்டனிக்கு...

    ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...