ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, December 10, 2011

மழையினை ரசிக்கும்..!எனை விடுத்து...
மழையினை ரசிக்கும்
என் மதி மலரே..!

மழை முகம் கண்டதும்...
உன் புன்னகையை மேகத்திடம்
காட்ட சென்றாயோ..?

உன் புன்னகை கண்டு
பூரித்த மழை மேகமோ
கண்ணை மின்னலாய் சிமிட்டியதோ..?

உன் கார் கூந்தலைக் கண்டு
பொறாமை கொண்ட வானமகள்
தன் மேகக் கூந்தலை மென்மேலும்
கருமையாக்கியாக்கினாளோ..?

இவை எதையும் நானறியேன்...
வான் நிலவை மறைத்த மேகம்
மழையாய்ப் பொழிவது போல்...
என் நிலவை குடையால்
மறைத்து காதலைப் பொழிவேனடி..!
12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புரியுது நண்பா புரியுது!
அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பா!

மோகனன் said...

வந்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Saranya R said...

Very Nice!!!!!!!

I Need kavithai for the topic of Vali arithal!!!!!!

Saranya R

Vijay Chandran said...

உங்கள் கவிதை மழையில் நனைந்தேன்...

கவிதை நன்றாக உள்ளது...

Vijay Chandran

Prabhu C said...

helo sir

gd mng u r kavithai so nice

Prabhu C

மோகனன் said...

பாராட்டிற்கு நன்றி சரண்யா...

'வலி அறிதல்'தானே... விரைவில் தருகிறேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

ரசித்து வாழ்த்திநமைக்கு மிக்க நன்றி விஜய் சந்திரன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க பிரபு...

ரசித்தமைக்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

எப்படி நண்பரே உங்களால் மட்டும் மட்டும் இப்படியல்லாம் முடியுது

really very grate Ganesh

I Like Kavithai

Thanks

By
Bhuvana

மோகனன் said...

வாங்க புவனா...

எல்லாம் ஒரு பூவையால் விளைந்ததுதான்...

அவள் விளைத்தால் நான் அதை படையாலாக்கினேன்... அவ்வளவே..

அந்த 'பூவி'ற்கு அவ்வளவு காந்தம்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

shanthi ganeshan said...

super pa ramba thanks..!

shanthi ganeshan

மோகனன் said...

கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சாந்தி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!