தென்றல் காற்றும் உன் நினைவுகளும்
ஒன்றுதான் போல…
தென்றல் காற்று என்
இதய அறைகளை நிரப்பியபடி
வினாடிக்கு வினாடி
என்னை உயிர்ப்பித்து விட்டுச் செல்கிறது..!
உன் நினைவுகளோ...
என் இதயத்தை நிரப்பி விட்டு
நம் காதலை ஒவ்வொரு வினாடியும்
உயிர்ப்பித்து விட்டுச் செல்கிறது..!
Wednesday, January 27, 2010
Friday, January 22, 2010
உயிருள்ள சிற்பமே..!
காஜிராஹோ சிற்பங்கள்
கண்ணைக் கவரும்..!
மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
மனதைக் கவரும்..!
உயிரற்ற சிற்பங்களுக்கே
இவ்வளவு வசீகரம் எனில்
உயிருள்ள சிற்பமே
உன்னழகிற்கு கேட்கவா வேண்டும்..!
Thursday, January 21, 2010
உன் புன்னகைக்கு..?
காதில் ஆடும் லோலாக்கு
மூக்கில் மின்னும் மூக்குத்தி
கழுத்தில் நிறைந்த தங்கச் சங்கிலி
விரலில் ஜொலிக்கும் வைர மோதிரம்
என ஒரு பொன்னகைக் கூடமே
உன் அழகிற்கு அழகு
சேர்த்தாலும்..?
அவைகள் என்றுமே
உன் புன்னகைக்கு ஈடாகாது..!
Wednesday, January 20, 2010
சுவாசித்து மகிழ்கிறாய் என்பதற்க்காக..!
என் கவிதைகளை
நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்க்காகவே…
நாள்தோறும்...
கவிதைகளாக
எழுதிக் கொண்டிருக்கிறேன்..!
உனக்காகவே...
அதுவும் உன்னைப் பற்றியே..!
நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்க்காகவே…
நாள்தோறும்...
கவிதைகளாக
எழுதிக் கொண்டிருக்கிறேன்..!
உனக்காகவே...
அதுவும் உன்னைப் பற்றியே..!
Tuesday, January 19, 2010
என் பேனாவை எப்படி..!
என்னைத்தானே வசியம் செய்தாய்..!
என் பேனாவை எப்படி
வசியம் செய்தாய்..?
பார்… அது எப்போதும்
உன் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருக்கிறது..!
Tuesday, January 12, 2010
மலருக்காக மலரிடம் நான் விட்ட தூது..! - நூறாவது கவிதைப் பதிவு
உன் கார்மேகக் கூந்தலில்
பூச்சூடுவதற்க்காக
நான் வாங்கிய
ரோஜாமலரிடம் சொன்னேன்...
‘மெல்லிய மலரே...
உன்னை விட மென்மையானவளிடம்
உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...
அவள் கார் மேகக் கூந்தலில்
அழுத்தமாய் உட்காராதே
அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது
'அவளைப் பார்த்ததும்
அழகாய் ஒரு புன்னகையை
வீசி விட்டு...
அப் பெண்மையிடம்
என் காதலை மென்மையாய்ச் சொல்...' என்றேன்
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!
'என்னவளின் மனசு போல
உன் நிறமிருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே..?
என்னவளின் மனது...
வெண்ணிலவை விட
வெண்மையானது...
வெண் பனியை விடத்
தூய்மையானது...' என்றேன்..!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது..!
'உனக்கு வாசமில்லை
என்று வருந்தாதே...
அவளுக்கு வாசமுண்டு...
அவள் வாசத்தை
நீ சுவாசித்தால்...
நீயும் மணக்கும் மலராவாய்...
மல்லிகைப் பூவாவாய்...
நீ மணந்தால் மட்டும் போதாது
அவள் வாசத்தை வாங்கி
என்னிடம் அனுப்பு
நானும் அதை சுவாசிக்க வேண்டும்...' என்றேன்!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...
அப்படியே செய்கிறேன்’ என்றது..!
'என்னன்பையும்
என் காதலையும்
அவளிடம் அன்பாய்ச் சொல்...
அவள் நினைவில்தான் வாழுகிறேன்...
நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்'
என்றும் சொல்லென்றேன்..!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!
சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?
அந்த மலரோ...
உன் கார்மேகக் கூந்தலில்
ஏறிய மயக்கத்தில்
அத்தனையும் மறந்துவிட்டு
அசடு வழிந்தபடி சிரித்தது..!
அதுவும் என்னைப் போலவே..!
இக்கவிதைகளை எனக்குள் ஊற்றெடுக்கச் செய்த தாய்த்தமிழுக்கும், என்னவளுக்கும் அன்பு கலந்த முத்தங்களை பரிசளிக்கிறேன்...
தொடரும் உங்கள் ஆதரவுக்கு என்றும் எனது அன்பு கலந்த நன்றிகள்..!
என்றென்றும் அன்பு'டன்'
உங்கள்
மோகனன்)
பூச்சூடுவதற்க்காக
நான் வாங்கிய
ரோஜாமலரிடம் சொன்னேன்...
‘மெல்லிய மலரே...
உன்னை விட மென்மையானவளிடம்
உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...
அவள் கார் மேகக் கூந்தலில்
அழுத்தமாய் உட்காராதே
அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது
'அவளைப் பார்த்ததும்
அழகாய் ஒரு புன்னகையை
வீசி விட்டு...
அப் பெண்மையிடம்
என் காதலை மென்மையாய்ச் சொல்...' என்றேன்
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!
'என்னவளின் மனசு போல
உன் நிறமிருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே..?
என்னவளின் மனது...
வெண்ணிலவை விட
வெண்மையானது...
வெண் பனியை விடத்
தூய்மையானது...' என்றேன்..!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது..!
'உனக்கு வாசமில்லை
என்று வருந்தாதே...
அவளுக்கு வாசமுண்டு...
அவள் வாசத்தை
நீ சுவாசித்தால்...
நீயும் மணக்கும் மலராவாய்...
மல்லிகைப் பூவாவாய்...
நீ மணந்தால் மட்டும் போதாது
அவள் வாசத்தை வாங்கி
என்னிடம் அனுப்பு
நானும் அதை சுவாசிக்க வேண்டும்...' என்றேன்!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...
அப்படியே செய்கிறேன்’ என்றது..!
'என்னன்பையும்
என் காதலையும்
அவளிடம் அன்பாய்ச் சொல்...
அவள் நினைவில்தான் வாழுகிறேன்...
நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்'
என்றும் சொல்லென்றேன்..!
மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!
சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?
அந்த மலரோ...
உன் கார்மேகக் கூந்தலில்
ஏறிய மயக்கத்தில்
அத்தனையும் மறந்துவிட்டு
அசடு வழிந்தபடி சிரித்தது..!
அதுவும் என்னைப் போலவே..!
(இது என்னுடைய நூறாவது பதிவு என்பதில் எனக்கு பெரு மகிழச்சி, இந்த வலைக் குடிலுக்கு ஆதரவு தந்து வரும் எனது அன்பு இணைய வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்...
இக்கவிதைகளை எனக்குள் ஊற்றெடுக்கச் செய்த தாய்த்தமிழுக்கும், என்னவளுக்கும் அன்பு கலந்த முத்தங்களை பரிசளிக்கிறேன்...
தொடரும் உங்கள் ஆதரவுக்கு என்றும் எனது அன்பு கலந்த நன்றிகள்..!
என்றென்றும் அன்பு'டன்'
உங்கள்
மோகனன்)
Sunday, January 10, 2010
என் நண்பனுக்கு வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவிதை..!
என் அன்பில் நிறைந்த நண்பன் பிரேம் சந்திரனுக்கு ஜனவரி 7 அன்று திருமணம்... நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்த எனது அன்பு நண்பனுக்கு ஜனவரி 7, 2010 அன்று திருமணம்...
அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ...
என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் பிரேம் சந்திரன்...
என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!
(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! இல் வாழ்க்கையில் இணைந்துள்ள, வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)
அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ...
என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் பிரேம் சந்திரன்...
என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!
(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! இல் வாழ்க்கையில் இணைந்துள்ள, வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)
Friday, January 8, 2010
என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!
அன்ன நடை நடந்து வந்து
அடி மனதை வருடி விட்டாய்..!
பின்னலிடை போட்டு வந்து
பித்தம் கொள்ள வைத்து விட்டாய்..!
மின்னலொரு பார்வையிலே
எனைக் காதலிக்க வைத்து விட்டாய்..!
உன்னுயிரைத் திறந்து விட்டு
என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!