மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதப்படும் கவிதைகளை... 'ஹைக்கூ கவிதைகள்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான நம் தமிழ்க்குடியின் முதுபெரும் மூத்த புலவரான திருவள்ளுவர் எழுதிய குறள் வடிவம்தான் இந்த ஜப்பானிய வடிவமாக இருக்கும் 'ஹைக்கூ'. வித்தியாசம் என்னவெனில், அவர் இலக்கணச் சுத்தமாக, மரபு நடையில், இரண்டே அடிகளில் ஐயந்திரிபர சொல்லிவிடுவார். அந்த இரண்டு வரிகளில் முதல் வரியை இரண்டாக மடித்து எழுதினால் குறள் மூன்று வரிகளாகிவிடும். அதைத்தான் 'ஹைக்கூ' வும் செய்கிறது. ஆனால் புதுக்கவிதை நடையில்...
நமக்குதான் தமிழிலேயே அனைத்தும் இருக்கிறதே பிறகு ஏன் 'ஹைக்கூ' கவிதை என்கிறீர்கள். முத்து, முத்தாய் மூன்றே வரிகளில் எழுதுவதை, நறுக்குத் தெரித்தாற்ப் போல் நான்கே வரிகளில் எழுதுவதை இனி குறுங்கவிதைகள் என்ற அழைக்கலாமே..! இதுநாள்வரை நான் அப்படித்தான் அழைத்திருக்கிறேன். அழைத்துக் கொண்டே இருப்பேன். மாற்றுக் கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் விவாதிப்போம்...
இனி எனது குறுங் கவிதைகள்...
--0--0--0--0--0--0--0--
தண்ணீர்க்குடம்
எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!
--0--0--0--0--0--0--0--
பிச்சைக்காரன்
நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!
--0--0--0--0--0--0--0--
வேண்டுதல்
குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!
--0--0--0--0--0--0--0--
எயிட்ஸ்
நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!
--0--0--0--0--0--0--0--
கடியாரம்
கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!
--0--0--0--0--0--0--0--
கருமி
எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!
--0--0--0--0--0--0--0--
அகிம்சை
அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் 'ஆயுதம்'..!
--0--0--0--0--0--0--0--
எரிமலை
பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!
--0--0--0--0--0--0--0--
இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)
கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!
--0--0--0--0--0--0--0--
குளோனிங் முறை
மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!
--0--0--0--0--0--0--0--
முதுமை
மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!
--0--0--0--0--0--0--0--
மரணம்
மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!
--0--0--0--0--0--0--0--
திருக்குறள்
தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!
--0--0--0--0--0--0--0--
பள்ளி...
தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி - பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!
--0--0--0--0--0--0--0--
Wednesday, September 30, 2009
Tuesday, September 29, 2009
என்றன் தாய் - மரபுக் கவிதை (முயற்சி)
எனைப் படைத்த பிரம்மாக்கள்
எண்பா
அன்பென்ற சொல்லுக் கர்த்த மும்நீயே..!
துன்பமொன் றுநேரின் துடிப்பவ ளும்நீயே..!
உன்னுடலைக் கவசமாக் கிகாத்தவ ளுமீயே..!
பொன்னுல கிலுன்போலா ருமில்லையே..!
உய்யுள்
கருவறையில் நானுதித்த போதுகளிப் பெய்தினாய்
அரும்பொருளே உன்வயிறை எனக்ககில மாக்கினாய்
பெருவயிறை தடவிப்பார்த்து பெருமித மடைந்'தாய்'
உருக்கொடுத்த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
வெளியுலகை நான் காணபுவி வருகையில்
வளிமண்டல மதிரும்படி அலறித் துடித்'தாய்'
உளிவெட்டு 'வதை'ப்போன்ற வலியைப் பொறுத்'தாய்'
தளிரெனைகாத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
பத்தியம் கடைபிடித்த பரம்பொருளேயனைக் காத்'தாய்'
நித்தமிமை சோராமல் விழித்திருந் தெனைப்பார்த்'தாய்'
கத்தியழுகை யிலுன்னுதிரத்தை எனக்கமு தாக்கினாய்
உத்தமத் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
மழலையான் சிரித்த போதுநீயும் மழலையானாய்
அழகுமக னானென்று ஆனந்த மடைந்'தாய்'
குழவியான் நோயுற்றால் பதறித் துடித்'தாய்'
வாழவைத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
பள்ளிநான் செல்லுகையில் பரவச மடைந்'தாய்'
துள்ளிவிளை யாடுகையில் மகிழ்ச்சி யடைந்'தாய்'
கள்ளமில்லா யன்புதனை ஊட்டி மகிழ்ந்'தாய்'
வள்ளியென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
கல்லாத பரம்பரையில் கல்விபயில் கிறேனென்று
கல்லூரிக்குச் செல்லுகையில் கண்ணீர் உகுத்'தாய்'
தொல்லையின்றி படிப்பதற்கு தொண்டு புரிந்'தாய்'
அல்லிமலர்த் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
மேற்படிப்பு படிப்பதற்கு சென்னை செல்கையில்
கற்பதுன் கடமையாடா கற்றுவா யென்றாய்..!
பொற்பொருளை எனக்களித்து புறப்ப டென்றாய்..!
ஊற்றான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
காதலினால் கடிதவறு செய்தேன் - அதனால்
சேதமுற்ற வாழ்க்கைதனை சேர்த்து வைத்'தாய்'
அதன் பாதகமோயெனை பிரிந்து வாழ்கிறாய்
இதமான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
பட்டணத் திலிருந்தாலும் தாயேயுன் நினைவு
திட்டமாய் திரும்பத் திரும்ப வருகிறது
எட்டாத பொருளில்லை தாயேயிங் கெனக்கு
கிட்டாத 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
பொன்னான உன்சொற் பதம்வேண் டியபடி
உன்பொற் பாதம் பணிகிறே னென்'தாயே'..!
என்றுமுன் மகவாகப் பிறக்கின்ற வரம்தனை
ஈன்றயென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
{எனைப் பெற்ற என் தாய்க்கு இந்த மரபு மீறிய கவிதை முயற்சி சமர்ப்பணம்.}
அன்பென்ற சொல்லுக் கர்த்த மும்நீயே..!
துன்பமொன் றுநேரின் துடிப்பவ ளும்நீயே..!
உன்னுடலைக் கவசமாக் கிகாத்தவ ளுமீயே..!
பொன்னுல கிலுன்போலா ருமில்லையே..!
உய்யுள்
கருவறையில் நானுதித்த போதுகளிப் பெய்தினாய்
அரும்பொருளே உன்வயிறை எனக்ககில மாக்கினாய்
பெருவயிறை தடவிப்பார்த்து பெருமித மடைந்'தாய்'
உருக்கொடுத்த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
வெளியுலகை நான் காணபுவி வருகையில்
வளிமண்டல மதிரும்படி அலறித் துடித்'தாய்'
உளிவெட்டு 'வதை'ப்போன்ற வலியைப் பொறுத்'தாய்'
தளிரெனைகாத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
பத்தியம் கடைபிடித்த பரம்பொருளேயனைக் காத்'தாய்'
நித்தமிமை சோராமல் விழித்திருந் தெனைப்பார்த்'தாய்'
கத்தியழுகை யிலுன்னுதிரத்தை எனக்கமு தாக்கினாய்
உத்தமத் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
மழலையான் சிரித்த போதுநீயும் மழலையானாய்
அழகுமக னானென்று ஆனந்த மடைந்'தாய்'
குழவியான் நோயுற்றால் பதறித் துடித்'தாய்'
வாழவைத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
பள்ளிநான் செல்லுகையில் பரவச மடைந்'தாய்'
துள்ளிவிளை யாடுகையில் மகிழ்ச்சி யடைந்'தாய்'
கள்ளமில்லா யன்புதனை ஊட்டி மகிழ்ந்'தாய்'
வள்ளியென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
கல்லாத பரம்பரையில் கல்விபயில் கிறேனென்று
கல்லூரிக்குச் செல்லுகையில் கண்ணீர் உகுத்'தாய்'
தொல்லையின்றி படிப்பதற்கு தொண்டு புரிந்'தாய்'
அல்லிமலர்த் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
மேற்படிப்பு படிப்பதற்கு சென்னை செல்கையில்
கற்பதுன் கடமையாடா கற்றுவா யென்றாய்..!
பொற்பொருளை எனக்களித்து புறப்ப டென்றாய்..!
ஊற்றான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
காதலினால் கடிதவறு செய்தேன் - அதனால்
சேதமுற்ற வாழ்க்கைதனை சேர்த்து வைத்'தாய்'
அதன் பாதகமோயெனை பிரிந்து வாழ்கிறாய்
இதமான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
பட்டணத் திலிருந்தாலும் தாயேயுன் நினைவு
திட்டமாய் திரும்பத் திரும்ப வருகிறது
எட்டாத பொருளில்லை தாயேயிங் கெனக்கு
கிட்டாத 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
பொன்னான உன்சொற் பதம்வேண் டியபடி
உன்பொற் பாதம் பணிகிறே னென்'தாயே'..!
என்றுமுன் மகவாகப் பிறக்கின்ற வரம்தனை
ஈன்றயென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!
{எனைப் பெற்ற என் தாய்க்கு இந்த மரபு மீறிய கவிதை முயற்சி சமர்ப்பணம்.}
Monday, September 28, 2009
Thursday, September 24, 2009
Wednesday, September 23, 2009
பணம் ஒரு வேசி..!
விடாமல் விரட்டும் வறுமை
மனதில் படரும் வெறுமை
மற்றவர் பார்வையில் சிறுமை
மனம் கேட்கிறது பொறுமை..!
வாய்மையை கடைபிடித்தால்
வருவாய் கிடைக்காது..?
பொய்மையைப் பிடித்தால்..!- அதற்கு
வாய்த்திறமை வேண்டும்..!?
எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!
பணம் கிட்டாவிடில்
மனம் ஆகிவிடுகிறது ரணம்...
குணம் குமைந்து சாகிறது
மனம் அழுது தொலைக்கிறது..!
பணம் ஒரு வேசி
பணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி
அவ்வேசி நம்மிடமிருந்தால்
சமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்
இல்லாவிடில் குப்பையில் தள்ளும்..!
(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது. இங்கே மீள்பதிவாக...)
Tuesday, September 22, 2009
குழந்தையின் உறவுகள்..!
அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...
அம்மாவின் தாலாட்டு..!
அப்பாவின் ஆறுதல் மொழி..!
அண்ணனின் பாட்டு..!
அக்காவின் கொஞ்சல்..!
தாத்தாவின் அரவணைப்பு..!
பாட்டியின் பாசமொழி..!
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின்
வீறிடல் நின்றது..!
இன்றோ..?
வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது...
அக்குழந்தையின் உறவுகள்..?!
(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை (27.03.2005 -அன்று) எழுதியது)
Friday, September 18, 2009
Thursday, September 17, 2009
பெண் சிசுவின் கேள்வி..!
அம்மா...
நான் செய்த
தவறென்ன...
உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...
நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?
Tuesday, September 15, 2009
தென்னாட்டு பெர்னாட்ஷா..!
தென்னாட்டு பெர்னாட்ஷா..!
எனை ஆளும்
தமிழகத்தின் தலைவாசா..!
காஞ்சிபுரத்து மகராசா
கன்னித்
தமிழ் மொழியரசா..!
அன்புக்கு அணியரசா
பண்புக்கும்
பணிவுக்கும் படியரசா..!
தம்பிக்கு உடைய ராசா..!
கம்பீரத்
தங்க நடை தமிழரசா..!
கணிர் குரல் பேச்சரசா..!
கருத்து
நிறை உரையரசா..!
அண்ணா துரையரசா..!
தம்பிக்கு
என்னாலும் துணையரசா..!
இன்னாளில் பிறந்தராசா..!
நூற்றாண்டை
வென்றுவிட்ட இளவரசா..!
என்னாளும் மறவாத உன்
அன்பை
பெற்றுவிட்டோம் பிறந்தநாள் பரிசா..!
Monday, September 14, 2009
நம் இதயங்கள்...
நீயே தடுத்தாலும்...
நீயே பிரிக்க நினைத்தாலும்...
உன் உதடுகள்
ஒன்று சேர மறக்காது..!
அது போலத்தான் அன்பே
உன்னுடைய காதலும்..!
என்னதான் நீ மறைக்க
நினைத்தாலும்...
நம் இதயங்கள்
ஒன்று சேர மறக்காது..!
நீயே பிரிக்க நினைத்தாலும்...
உன் உதடுகள்
ஒன்று சேர மறக்காது..!
அது போலத்தான் அன்பே
உன்னுடைய காதலும்..!
என்னதான் நீ மறைக்க
நினைத்தாலும்...
நம் இதயங்கள்
ஒன்று சேர மறக்காது..!
Friday, September 11, 2009
மகாகவி பாரதிக்கு மரபுக் கவிதாஞ்சலி
ஆசுகவி படைத்தெம் தேசியக் கவியே
வீசுகின் றகாற்றில் கரைந்து போனதேன்
பூசுநறு மணந்தமிழ் கவிபடைத் ததமிழே
மாசுநிறை பூமியில் மறைந்ததேன்
ஆரியனை எரித்தது போல் பரங்கியனை
எரித்து நின்றாய்… எழுத்தாணி யெடுத்து
விரித்தெழு தினாய் சுதந் திரத்தை – தமிழ்கவிச்
சூரியனே நின்கவி சூழ்ந்’தேன்’.
உன்னுடைய கவிதை யெல்லாமெனக்கு உரம்
நின்னுடைய வரிகளெல்லாமெனக்கு வரம்
கன்னித் தமிழ்வார்த் தைகள் சரம் – பைந்தமிழ்
மன்னவ நின்கவி ஆலமரம்.
மண்ணை விட் டுமறைந் துவிட்டெம்மை
கண்ணீரில் ஆழ்த்தி விட்டாய் கவிஞனே
விண்ணில் நீ நட்சத் திரமாம் – தீந்தமிழ்ப்
பண்ணில் நீ கவிப் பகலவன்.
துயில்கொண் டெம்மைது யரத்திலாழ்த் திவிட்டாய்
குயில்போலெங் களுக்குக விசமைத் துக் கொடுத்து
நோயிற்குன் னுயிரைக் கொடுத்தாய் – செந்தமிழ்
பாயிரமே நின்னைப் பணிந்’தேன்’.
(மகா கவிக்கு மரபுக் கவிதையால் கவிதாஞ்சலி எழுதியுள்ளேன்... அவருடைய நினைவு நாளில் அவரது மலர்ப்பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறேன்... குறைகளிருப்பின் சுட்டுங்கள்..)
மகா கவி பாரதிக்கு கவிதாஞ்சலி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHzPTjUEK4Ifly9yC_nXphSVDLGhyphenhyphenl5gA0jrq_MY0MKUp0gQc2RuChZi3xW6cn9nlCRZ8c2fDvvt6401s6g9VVRTG-_Eo3_EIvlx24TTdhiIMIq38qXp4FO6Elx8tX_dWLRb9tY5AVUiw/s320/bharathi.jpg)
பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோமென்றவன்..!
பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!
வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய் என
பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கும் எழுதியவன்..!
பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெறவதற்கு
கேலிச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தவன்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!
பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டியபடி, எழுத்தாணி தீட்டியபடி சமூக
முரண்பாடுகளை வேரறுக்க புறப்பட்டவன்..!
எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திக்கும்
செந்தமிழ்க்கவியால் சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி..!
விந்தன் எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!
கடும் நோயால் விண்ணுலகம் சென்றாய் நீ
உன்பிரிவால் தமிழன்னை கண்ணீர் உகுக்கிறாள்
உன் கவி முகம் காணாத நம் தமிழுலகம்
சூரியனை இழந்த வானம் போல் இருண்டுவிட்டது
மண்ணில் நீ மறைந்தாலும் எம்மில் நீ
திண்ணமாய் நீக்கமற வாழுகின்றாய்...
நம் தமிழன்னை தேம்பித் தேம்பி அழுதாழும்
உன் தேன்கவி படித்து ஆறுதல் கொள்கிறாள்..!
தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன் நீ..!
நீ நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
வளரிளங்கவி தலைமுறையின் துயரநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் கவி மறையாது..!
நின் புகழ் மறையாது... நீ புரட்சிக் கவி மட்டுமல்ல
எங்களின் தேசியக் கவி... தீவிர தேன்தமிழ்க் கவி நீ...
உன்னடி தொழுதபடி கண்ணீரோடு காகித்திலிட்ட
என் கவிதாஞ்லி உன் திருவடியில் சமர்ப்பணம்..!
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோமென்றவன்..!
பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!
வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய் என
பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கும் எழுதியவன்..!
பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெறவதற்கு
கேலிச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தவன்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!
பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டியபடி, எழுத்தாணி தீட்டியபடி சமூக
முரண்பாடுகளை வேரறுக்க புறப்பட்டவன்..!
எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திக்கும்
செந்தமிழ்க்கவியால் சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி..!
விந்தன் எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!
கடும் நோயால் விண்ணுலகம் சென்றாய் நீ
உன்பிரிவால் தமிழன்னை கண்ணீர் உகுக்கிறாள்
உன் கவி முகம் காணாத நம் தமிழுலகம்
சூரியனை இழந்த வானம் போல் இருண்டுவிட்டது
மண்ணில் நீ மறைந்தாலும் எம்மில் நீ
திண்ணமாய் நீக்கமற வாழுகின்றாய்...
நம் தமிழன்னை தேம்பித் தேம்பி அழுதாழும்
உன் தேன்கவி படித்து ஆறுதல் கொள்கிறாள்..!
தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன் நீ..!
நீ நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
வளரிளங்கவி தலைமுறையின் துயரநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் கவி மறையாது..!
நின் புகழ் மறையாது... நீ புரட்சிக் கவி மட்டுமல்ல
எங்களின் தேசியக் கவி... தீவிர தேன்தமிழ்க் கவி நீ...
உன்னடி தொழுதபடி கண்ணீரோடு காகித்திலிட்ட
என் கவிதாஞ்லி உன் திருவடியில் சமர்ப்பணம்..!
(11.09.2007அன்று எழுதியது, சிற்சில மாற்றங்களுடன், கண்ணீரோடு இங்கு பதிவிலிடுகிறேன் ..)
Thursday, September 10, 2009
Friday, September 4, 2009
எங்கள் ஆசிரியர்..!
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
ஆசை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!
இனிய தமிழ் பயிற்றுவித்த எங்கள் ஆசிரியையே...
இனிய கதை சொல்லித்தந்த எங்கள் ஆசிரியையே...
ஈன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!
உலக மொழி ஆங்கிலத்தை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
உண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...
ஊர் கேட்க சொல்லிடுவோம் உங்கள் பெருமையே..!
எண் கணிதத்தை கற்றளித்த எங்கள் ஆசிரியையே...
எளிமைதனை எமக்களித்த எங்கள் ஆசிரியையே...
ஏற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே..!
ஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...
ஐயங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...
ஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!
ஓர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியையே...
ஓர்குலம் நாமெல்லாம் என்றுரைத்த எங்கள் ஆசிரியையே...
ஔவை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!
எஃகு போல் உடற்கல்விதனை உய்ய வைத்த எங்கள் ஆசிரியரே...
(எ)ஃகணமும் தொழுது நிற்போம் உந்தன் பணியையே..!
(செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம், இந்நாளில் என்னை இந்த அளவிற்கு ஆளாக்கிய எனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள் உரித்ததாகட்டும்... வாழ்க ஆசிரியர் குலம்...)
அன்னை தெரசா...
அன்பான தெரசா அன்னையே..!
அகிலம் போற்றுது உன்னையே..!
சேவையின் உருவான அன்னையே..!
சேவையின் உருவான அன்னையே..!
போற்றுவோம் தினமும் உன்னையே..!
அல்பேனியாவில் நீ பிறந்தாய்..!
இந்தியாவில் சேவை செய்தாய்..!
சேரிகளின் உள்ளே நுழைந்தாய்..!
அம்மக்களுக்கென்றே நீ உழைத்தாய்..!
யாரும் அனாதைகளில்லை என்றாய்..!
யாவர்க்கும் அடைக்கலம் தந்தாய்..!
தொண்டுக்கே தொண்டென வாழ்ந்தாய்..!
தொழுநோயாளிகளைக் கூட காத்தாய்..!
பாழும் ஏழைகள் வாழ வழிவகுத்தாய்..!
பாரில் அவர்கள் ஏற்றம் பெற கல்வி தந்தாய்..!
எளிமைக்கே இலக்கணமாய் வாழ்ந்தாய்..!
சேவைக்கு என்றென்றும் நீதான் தாய்..!
கருணை இல்லத்தை நீ படைத்தாய்..!
கைவிடப்பட்டோரை வாழ வைத்தாய்..!
'கன்னி'யாய் இருப்பினும் நீதான் தாய்..!
என்றென்றும் எங்களுடன் வாழ்கின்ற தாய்..!
(செப்டம்பர் 5, அன்னை தெரசாவின் நினைவு தினம், அவரது நினைவாக எழுதிய கவிதை)
Thursday, September 3, 2009
என்னை முறைத்தாவது பார்…
என்னை முறைத்தாவது
என் முகத்தைப் பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப் பார்…
என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
அப்படியாவது என் காதல்
உனக்குத் தெரியட்டும்..!