எங்கு திரும்பினாலும்
எதிரில் நீயாகவே தெரிகிறாய்..!
யாருடன் பேசினாலும்
எதிரில் நீ பேசுவதாகவே தெரிகிறாய்..!
நான் எங்கு சென்றாலும்
நிழல் போல் என்னுடன்
நீயும் வருவதாகவே தெரிகிறாய்..!
என்ன நோயடி இது..?
உலகமே மறந்து போய்
உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு உலகமாகி இருக்கிறது..!
நீ எனைச் சந்தித்தால்
எனக்குள் இன்ப மழை..!
நீ எனைப் பார்த்துச் சிரித்தால்
எனக்குள் மின்னல் மழை..!
நீ எனைப் பற்றி பேசினால்
எனக்குள் கவிதை மழை..!
நீ எனைக் கட்டியணைத்தால்
நமக்குள் (அடங்காக்) காதல் மழை..!
மொழியின் இன்பம் கவிதை
கவிதையின் இன்பம் ஊடல்
ஊடலின் இன்பம் கூடல்
கூடலின் இன்பம் காதல்
காதலின் இன்பம் காதலி
காதலியின் இன்பம் காதலன்
காதலனின் இன்பம் காதலி..!
இருவரின் இன்பம் இணைந்து வாழல்
-ஆக வாழ்க நம் காதல் ..!