நமக்கிடையே
நடக்கும்
அலைபேசி
உரையாடல்களில்
அதிகம் ஊடல்தான்
வெற்றி நடை போடும்..!
அதிலும் நீ
அடிக்கடி என்னிடம்
'தொலைந்து போ' என்று
சொல்லும் போது
என்னுள் தோன்றுவது
ஒன்றே ஒன்றுதான்-
'தேடுவது நீ எனில்
மீளா இடத்தில் கூட
தொலைந்து போகத் தயார்!'
‘உன் நினைவுகளை மட்டுமே சுமக்க எனக்கு உரிமையுண்டு’ என்று சொல்லிவிட்டு எனதுநினைவுகளைமட்டும் எடுத்துச் செல்பவளே... என்னையும் உன்னோடு அழைத்துச் செல்... இல்லையேல் என் உயிரை எடுத்துக் கொண்டு செல்... நீயின்றி இங்கே நான் சடலமாய்த் திரிவதை விட சாம்பலாய்க்கரைவது மேல்..!