பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!
--------------------------------------------------------
(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )