பூமித்தாய்
தன்னுள்
உயிர்ப்புடன்
விழுகின்ற எதனையும்
வேறுபாடு காட்டாமல்
உயிரூட்டி உரமேற்றி
வெளியுலகம் காணவைப்பாள்!
உயிரற்று வீழ்பவற்றை
வேறுபாடு காட்டாமல்
தன்னுள் அடக்கிக் கொள்வாள்!
பூமித்தாயைப் போலேதான்
இவ்வுலகில் உள்ள
ஒவ்வொரு பெண்ணும்
தன்னைச் சார்ந்தோரின்
நல் குணங்களை
வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி
தீயகுணங்களை தன்னுள் அடக்கி
அன்பு நிறை அன்னையாக
அடம்பிடிக்கும் சகோதரியாக
தோள் கொடுக்கும் தோழியாக
அறிவார்ந்த மனைவியாக
அழகு நிறை மகளாக
உருவெடுத்து வாழ்ந்து நிறைகிறாள்
ஆணினத்தை வாழவைத்து மறைகிறாள்!
(உலகிலுள்ள பெண்கள்
அனைவருக்கும் எனது சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்… மகளிரைப் போற்றுவோம்!)