இன்னுயிர் தமிழ் மறவா
ஈழத்தமிழர் இலங்கையில்
சுதந்திரப் போரை நடத்தினர்..!
மாவீரன் பிரபாகரன்
தலைமையில் ஒன்றிணைந்து
தனிநாடு கேட்டு நின்றனர்..!
எதிரிகளோ எம்தமிழரை
எள்ளி நகையாடினர்
எங்கும் துன்பத்தை இழைத்தனர்
திகதி தோறும் நல்பொழுது
விடியாதா என விழித்திருந்தோரை
அகதியாக்கி விரட்டினர்..!
பொறுத்தது போதுமென்று
வீர மறவப் புலிகள்
போர் முரசம் கொட்டினர்..!
வெங்குருதி பெருகினாலும்
செங்குருதி மருகினாலும்
சுதந்திரம் வேண்டி போரிட்டனர்!
செஞ்சோற்றுக் கடனாற்ற
செந்தமிழர் வருவானென்று
ஈழத்தமிழர் எதிர் நோக்கவில்லை!
எதிரிகளைச் சிதறடிக்க
எமதிரு தோள்கள் போதுமென்று
பொருதிப் பார்த்தனர்!
உலகெங்கும் உள்ள
பொல்லாத ஓநாய்களுடன்
கை கோர்தது எதிரிப்படை..!
எப்படை வரினும்
எத்துயர் வரினும்
எம்தமிழர் அசரவில்லை!
இறுதி மூச்சு உள்ளவரை
ஈழத்தமிழ் மண்ணுக்கேயென
இன்னுயிரை ஈந்தனர்..!
அவ்வெஞ்சமரில் பாழாய்ப்போன
வஞ்சகர்களின் சதியால் - பல
இசைப்பிரியாக்கள் அழிந்தனர்..!
பல மாவீரர்கள் தங்கள்
மதிப்பற்ற உயிர்களை - ஈழத் தமிழ்
மண்ணுக்கீந்தனர்..!
எம் தமிழ் தலைவர்
அப்போரில் வீர மரணம் எய்து
இறவாப் புகழடைந்தார்..!
ஈழம் அழிந்ததென்று
எதிரிகள் எக்காளமிட்டனர் - உலகமதிர
போர்குற்றங்கள் புரிந்தனர்..!
வேதனைகள் அரங்கேறுவதை
உலகமே வேடிக்கைதான் பார்த்தது...
தடுப்பார் யாருமில்லை..!
ஏ... ஈனங் கெட்ட எதிரிகளே...
போர்முறை தெரியாப் புல்லர்களே
புழுவினும் கீழானவர்களே..!
நாங்கள் மண்ணில் புதையவில்லை
ஒவ்வொருவரும்
விதைக்கப் பட்டிருக்கிறோம்..!
பீனீக்ஸ் பறவை போல்
மீண்டெழுவோம்...
தமிழரை நிலை நாட்டுவோம்..!
(இசைப் பிரியா கொடுராமாக கொலை செய்யப்பட்டது முதலே மனதில் வலி இருந்து கொண்டே இருந்தது... அதை மிகத் தாமதாகப் பதிவு செய்திருக்கிறேன்... ஈழத்தில் பிறந்திருந்தால். என்னுயிரைக் கொடுத்து ஈழத்தை மீட்டிருப்பேன்... தமிழகத்தில் பிறந்து தொலைத்ததால், ஈழத் தமிழனுக்கு உதவாத ஈனப்பிறவியாகி விட்டேன்... ஈழத் தமிழர்களே எனை மன்னியுங்கள்...)