முத்துத் தமிழெடுத்து
முத்தாரக் கவியெடுத்து
உன்
மாமன் வருகிறேன் பிறந்தநாள் வாழ்த்துப் பாட
குயிலாய் குரல்
கொடுக்கும் குழவியாயிருந்த நீ
இன்றோடோராண்டை எட்டுகிறாய் மருமகனே- உனக்காக
ந்திர லோக சபையை
நான் கூட்டட்டுமா..!
மாமன்
முதுகிலேற்றி உலகைக் காட்டட்டுமா..!
தங்க நண்பனுக்கு
தப்பாமல் நீ பிறந்தாய்..!
தங்க
மகனென்று போற்றிடவே நீ வளர்வாய்..!
ன்று மட்டுமன்று
என்னாளும் ஊருலகம் உனைப்
போற்றும்படி
வாழ்வாங்கு வாழ்கவென் மருமகவே!
*********************************************************************************
(எனது ஆருயிர் நண்பனும், எனக்கு தோள் கொடுக்கும் தோழனுமான வ.நவநீதகிருஷ்ணனின் மகனாகிய எனது மருமகனுக்கு இன்று முதல் பிறந்தநாள். அவனுக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை. பிறந்தநாள் கொண்டாடும் எனது மருமகனின் பெயர் தெரியவிரும்பினால் கவிதை வரிகளில் தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... குதுகலமாய் உங்கள் நாவில் உலா வருவான் என் மருமகன்...)
**************************************************************************************************
நானெழுதிய புதிய சிறுகதை: என்னப் பெத்தவரு
நானெழுதிய புதிய சிறுகதை: என்னப் பெத்தவரு