பூமித்தாய்
தன்னுள்
உயிர்ப்புடன்
விழுகின்ற எதனையும்
வேறுபாடு காட்டாமல்
உயிரூட்டி உரமேற்றி
வெளியுலகம் காணவைப்பாள்!
உயிரற்று வீழ்பவற்றை
வேறுபாடு காட்டாமல்
தன்னுள் அடக்கிக் கொள்வாள்!
பூமித்தாயைப் போலேதான்
இவ்வுலகில் உள்ள
ஒவ்வொரு பெண்ணும்
தன்னைச் சார்ந்தோரின்
நல் குணங்களை
வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி
தீயகுணங்களை தன்னுள் அடக்கி
அன்பு நிறை அன்னையாக
அடம்பிடிக்கும் சகோதரியாக
தோள் கொடுக்கும் தோழியாக
அறிவார்ந்த மனைவியாக
அழகு நிறை மகளாக
உருவெடுத்து வாழ்ந்து நிறைகிறாள்
ஆணினத்தை வாழவைத்து மறைகிறாள்!
உயிர்ப்புடன்
விழுகின்ற எதனையும்
வேறுபாடு காட்டாமல்
உயிரூட்டி உரமேற்றி
வெளியுலகம் காணவைப்பாள்!
உயிரற்று வீழ்பவற்றை
வேறுபாடு காட்டாமல்
தன்னுள் அடக்கிக் கொள்வாள்!
பூமித்தாயைப் போலேதான்
இவ்வுலகில் உள்ள
ஒவ்வொரு பெண்ணும்
தன்னைச் சார்ந்தோரின்
நல் குணங்களை
வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி
தீயகுணங்களை தன்னுள் அடக்கி
அன்பு நிறை அன்னையாக
அடம்பிடிக்கும் சகோதரியாக
தோள் கொடுக்கும் தோழியாக
அறிவார்ந்த மனைவியாக
அழகு நிறை மகளாக
உருவெடுத்து வாழ்ந்து நிறைகிறாள்
ஆணினத்தை வாழவைத்து மறைகிறாள்!
(உலகிலுள்ள பெண்கள்
அனைவருக்கும் எனது சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்… மகளிரைப் போற்றுவோம்!)
10 comments:
வாழ்த்துக்கள். இது என் முதல் முறை, உங்கள் தளத்தில். அழகாக எழுதிருக்கிறீர்கள். இப்போது தான் புதிதாக தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கடிதம் மூலமாக தொடர்பு கொள்வது தான் என் தளத்தின் முக்கிய கொள்கை. வாருங்கள். வந்து வாசித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
~ NRIGirl
ஒவ்வொரு வரியும் சிறப்பு...
சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் -என்றும்...
சர்வதேச மகளிர் தினத்தன்று தந்திருக்கும் இந்தக் சிறப்புக் கவிதையின் சிறப்பே கவிதையின் கடைசி வரிதான். கவிதை அருமை. வாழ்த்துக்கள்
அன்பு கடிதப் பெண்ணுக்கு...
தங்களின் தமிழ்க் கடித முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்...
கண்டிப்பாக வருகிறேன்...
நன்றி தனபாலரே...
அன்பர் நடனசபாபதி அவர்களே
தங்களின் வாழ்த்திற்கு நன்றி...
அன்பு நிறை அன்னையாக
அடம்பிடிக்கும் சகோதரியாக
தோள் கொடுக்கும் தோழியாக
அறிவார்ந்த மனைவியாக
அழகு நிறை மகளாக
உருவெடுத்து வாழ்ந்து நிறைகிறாள்
அனைத்துவரிகளும் அழகு .. பாராட்டுக்கள்..! நல்வாழ்த்துகள்..!
நன்றி கலந்த வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி...
எங்கோ படித்த வரிகள் உங்கள் கவிதையைப் படித்ததும் நினைவுக்கு வருகிறது-
எதையும் சீரணித்து விடும் மண்
விதையை மட்டும் முளைக்க வைக்கிறதே?
பெண்மையும் அப்படித்தான் நண்பரே
அல்லவை அகற்றி
நல்லவை காக்க
ஆக்கல்,அழித்தல், காத்தல் என மூன்றுமாய் உருவெடுத்தவள்
அன்பு சங்கீதாவிற்கு...
பூமி என்பவளை பெண்ணாகத்தான் வர்ணிக்கிறோம். அதைத்தான் இங்கே சொல்லி இருக்கிறேன்...
உண்மையில் நீங்கல் ஆக்கல், அழித்தல், காத்தல் வேலையை செய்பவர்தான்...
வாழ்க மகளிர்..!
Post a Comment