விதைத்தவள் நீயென்பதால்
விளைந்து கொண்டே இருக்கிறது
கவிதையும் காதலும்!
கடுகளவும் அவன் நினைவுகள் குறையவில்லை
பாஸ்போர்ட் விசா இன்றி
எப்படி வந்தான் என்னோடு புரியவில்லை
கடல் விட்டு ஒதுங்கிய கிளிஞ்சலாக நானிருக்க
ஓயாத அலைகளாக அவன் இருக்க
கடல் சேரவும் முடியாமல்
கரை ஒதுங்கவும் முடியாமல்
ஏன் இந்த நிலை
என்ன நான் செய்த பிழை
மழையாக இருந்தவள்
கானல் நீர் போல் ஆனது ஏனோ?
நீல வானமாய் இருந்தவள்
கலையும் மேகமானது ஏனோ?
வான் நிலவாய் இருந்தவள்
நதியில் விழும் பிம்பம் போல்
ஆனதும் ஏனோ? - புரியல்வில்லை
உன்னை புரிந்துகொள்ளும் திறன் இல்லை,
மறந்துவிட மனமும் இல்லை,
காற்றில் என் உயிர் கரையும் வரை
நெஞ்சோடு இருக்கும் உன் நினைவுகள்
எனக்குள்ளே சிரித்து,
எனக்குள்ளே அழுது,
எனக்குள்ளே மகிழ்ந்து,
எனக்குள்ளே வருந்தி
எனக்குள்ளே அத்தனையும்
ஆனவனே நீ
என் தாயுமானவனே....
தந்தையின் திருவடி போற்றி போற்றி
என்னைச் சுமந்தோரே போற்றி போற்றி
எந்தையாய் இருந்தோரே போற்றி போற்றி
கருவாக ஆக்கினீர் போற்றி போற்றி
உருவாக ஆக்கினீர் போற்றி போற்றி
கர்ப்பத்தில் தாங்கினீர் போற்றி போற்றி
பொற்பதம் பணிகிறேன் போற்றி போற்றி
வயிற்றினுள் காத்தீரே போற்றி போற்றி
வையகம் அளந்தீரே போற்றி போற்றி
உயிருதிரம் தந்தீரே போற்றி போற்றி
உயிர்பணயம் வைத்தீரே போற்றி போற்றி
பத்தியம் காத்தீரே போற்றி போற்றி
சத்தியத் தாயானீர் போற்றி போற்றி
சதைகீறி ஈன்றீரே போற்றி போற்றி
விதையினை தந்தீரே போற்றி போற்றி
உத்தமித் தாயேநீ போற்றி போற்றி
உதிரத்தைத் தந்தவரே போற்றி போற்றி
வித்தகத் தந்தையே போற்றி போற்றி
சித்தத்தை தந்தவரே போற்றி போற்றி
தாய்ப்பாலைத் தந்தவரே போற்றி போற்றி
தாயேஉன் மலர்மடி போற்றி போற்றி
சேயெனக் கொஞ்சினீர் போற்றி போற்றி
தூயவரின் திண்தோளே போற்றி போற்றி
குழவியெனைக் காத்தீரே போற்றி போற்றி
அழகென மகிழ்ந்தீரே போற்றி போற்றி
உலகத்தைக் காட்டினீர் போற்றி போற்றி
உலாப்போக வைத்தீரே போற்றி போற்றி
தாய்மொழி தந்தீரே போற்றி போற்றி
தாய்வழி உறவுகள் போற்றி போற்றி
சிந்தைமொழி தந்தீரே போற்றி போற்றி
தந்தைவழி உறவுகள் போற்றி போற்றி
நடைபயில வைத்தீரே போற்றி போற்றி
கடைகண்ணேறு கழித்தீரே போற்றி போற்றி
அடைமழையில் வாழ்ந்தீரே போற்றி போற்றி
குடைகொண்டு காத்தீரே போற்றி போற்றி
துள்ளிவிளை யாடவைத்தீர் போற்றி போற்றி
எள்ளிநகை யாடவைத்தீர் போற்றி போற்றி
பள்ளிக்கு போகவைத்தீர் போற்றி போற்றி
பலகலைகள் பயிற்றுவித்தீர் போற்றி போற்றி
மனிதராய் ஆக்கினீர் போற்றி போற்றி
புனிதராய் வாழ்ந்தீரே போற்றி போற்றி
மண்ணுலகம் சென்றீரே போற்றி போற்றி
உன்பாதம் பணிகிறேன் போற்றி போற்றி
வாழவைத்த எம்தாயே போற்றி போற்றி
வள்ளியம்மா உன்நாமம் போற்றி போற்றி
தோகைமயில் தந்தையே போற்றி போற்றி
மோகன்ராஜி உன்நாமம் போற்றி போற்றி
எனைபடைத்த தெய்வங்களே போற்றி போற்றி
என்னோடிருக்க வேண்டும் போற்றி போற்றி
விண்காற்றில் கலந்தீரே போற்றி போற்றி
எனைக்காப்பீர் எந்தைகளே போற்றி போற்றி!
உங்களின் மகன்
மோ.கணேசன்
அம்மா அடிக்க வருகையில்
வேட்டிக்குள் மறைய...
தூக்கம் வருகையில்
தோள் மீது உறங்க...
வீதி உலா போகையில்
விரல் பிடித்து நடக்க...
சகதோழர்களுக்கு இணையாக
சைக்கிள் பழக...
பள்ளிக்கு செல்லும்போது
பத்திரமாய் கொண்டு விட..
நீரூறும் பெருங்கிணற்றில்
நீச்சல் பழக...
அத்தனைக்கும் நீங்கள் தேவை
என்றன் தந்தையே...
அகவை எனக்கு நாற்பதாகினும்
அந்த சிறுபிராயம்
மீண்டும் வேண்டுகிறேன்...
உங்கள் மடியில்
மீண்டும் நான் துள்ளிவிளையாட!
காலனால் எனைப் பிரிந்து
மண்ணில் புதைந்து
மறைந்தீர்களே நியாயமா?
மறுஜென்மத்தில்
நம்பிக்கையில்லாதவன்
தந்தையே உங்கள் மகன்!
நடவாதெனினும்
உங்கள் மகனாகப் பிறக்கவே
இன்னொரு ஜென்மம்
வேண்டுகிறேன் இயற்கையிடம்!
நிலவாய் மாறி வெளிச்சம் தந்தாலும்
நீங்கள் இல்லா இவ்வுலகம்
இருளாக இருக்கிறது அப்பா!
தாயில்லா பிள்ளையிவன்
என்றறிந்தும்
தந்தையில்லா பிள்ளையாக்கிய
காலமே என்
தந்தையிடம் சொல்லிவிடு
எனது தந்தையர் தின வாழ்த்துகளை!
இந்த பிறந்தநாள் வாழ்த்து கவிதை எனது அண்ணனுக்காக நான் எழுதியது...
இந்த நிழற்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கவிதையின் வரிகளில் 1,3,5,7,9 ஆகிய வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து கீழாகப் படித்தால்... பிறந்தநாள் கொண்டாடும் எனது அண்ணனின் பெயர் வரும்...
உங்களுக்கும், உங்களது அன்பில் நிறைந்தவர்களுக்கும் இதுபோன்று அவர்களது பெயரைக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கவிதை வேண்டுமென்றால்... தாராளமாக 9600045295 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்க... கவிதைக்கும்... வடிவமைப்புக்கும் கட்டணம் உண்டு...
இப்படி ஒரு வாழ்த்தினை உங்களின் அன்பானவர்களுக்கு கொடுக்க விரும்பினால் என்னை அணுகலாம்... சுயதொழில் செய்ய விரும்பும் எனக்கு இப்படியும் நீங்கள் எனக்கு பணி வழங்கலாம்...
மிக்க அன்புடன்
மோகனன்
moganan@gmail.com
எழுத்து வடிவில் இதே அந்தக் கவிதை
மோனத்தில் உழலும் இப்பூவுலகில் இந்நாள் ஓர்
மறவாத திருநாளனது நம்முடைய குடும்பத்திற்கு!
வேலும் மயிலும் துணையான வள்ளியம்மைக்கும்
வீரத்தின் வித்தான மோகன் ராஜிக்கும் பிறந்து
லுலுலுவாயென தாலாட்டுப் பாட வைத்தாய்!
தளிர் நடை பயின்று பெற்றோரை மகிழவைத்தாய்!
மளமளவென வளர்ந்து தச்சுப் பணியில் சிறந்து
குடும்பம் குழவியென சமூகத்தில் உயர்ந்தாய்!
ணிலவினைப்போல உன் வாழ்வில் துன்பம் தேய்ந்து
நன்மைகள் வளர நீ பிறந்த இந்நாளில் வாழ்த்துகிறோம்!