ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, December 31, 2012

கருவறையில் இருப்பது..! - புத்தாண்டு சிறப்பு கவிதை!தோள் கொடு தோழா…
தோள் கொடு..!
தாய்மையைக் காக்க தோள் கொடு!

வாள் எடு தோழா…
வாள் எடு..!
பெண்மையைக் காக்க வாள் எடு..!

கருவறையைத் தாங்குவது
கோவில் எனில்
ஒவ்வொரு தாயும் கோவிலடா..!

கருவறையில் இருப்பது
கடவுள் எனில்
ஒவ்வொரு மனிதரும் கடவுளடா..!

பெண்மையில் இருப்பது
தாய்மை எனில்
ஒவ்வொரு பெண்ணும் தாயடா..!

தாயைப் பழிக்கும் நாய்களை ஒழிக்கும்
தாய்த்திரு நாட்டில்
பாலியல் கொடுமை ஏனடா..?

பெண்மையை காப்பதே
ஆண்மை என்பதை
மறந்தவன் காமுகனடா…

காமவெறி கொண்டு அலையும்
காமுக நாய்களை
வேட்டையாடுவோம் வாடா..!

காமுக நாய்களை சிறையிலடைத்து
விருந்து கொடுக்கும்
சட்டங்கள் வேண்டாம் போடா..!

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
அவன் குடலை உருவி
சுடலைக்கு அனுப்புவோம் வாடா..!

பெண்ணியம் காக்கும் சட்டங்கள்
வேண்டுமென்று
வெடித்து முழங்குவோம் வாடா..!

கற்பினை பொதுவினில் நிறுத்தி
கண்களில் கண்ணியம் பொருத்தி
பெண்மையை காத்திட வாடா..!

(பாலியல் வன்முறைக்கு ஆளாகி, இருதினங்களுக்கு முன் இறந்து போன தில்லி மாணவிக்காக மட்டுமல்ல, இந்த வன்முறைக்கு இலக்காகி, இலக்கற்றுப் போன ஒவ்வொரு பெண்ணிற்கும் இக்கிறுக்கல் சமர்ப்பணம். 

நமை ஈன்ற அன்னையும் பெண்ணே. நம்முடன் பிறந்த சகோதரியும் பெண்ணே.. நமை திருமணம் செய்யும் மனைவியும் பெண்ணே.. நமை சரிசமமாய் நடத்தும் தோழியும் பெண்ணே... நமக்கு பிறக்கும் மகளும் பெண்ணே... பெண்களின்றி ஆண்களில்லை. 

இனியொரு பாலியல் வன்கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல, இப்புவியில் இல்லாமல் செய்ய ஒவ்வொரு ஆண்மகனும் உறுதி எடுப்போம். ஏனெனில் ஆணினத்தால்தான் பெண்ணினம் சிலுவையில் அறையப்படுகிறது.

இனி ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் பெண்மையைக் காப்போம். ஆண்மையுடன் வாழ்வோம்...

உங்களனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2013)
Thursday, December 13, 2012

நவநீதன் மகனே..! - சிறப்புக் கவிதை
இருளைக் கிழித்துப் பிறந்த
நவநீதன் மகனே…
வளர்பிறையில் வளரும்
என் மருமகனே…
உன் வரவால்
என்னுள்ளம் துள்ளுதடா
உன்னாலென்
நண்பன் தந்தையானான்
என்ற மகிழ்வை விட
நானுந்தன் மாமனானேன்
என்பது கண்டு மகிழ்ந்தேனடா
நீ எங்களின் ‘மகிழ்’ தேனடா…

உன்னாலிங்கு
உன் அத்தை உள்ளம் பூரித்து
சிரிக்கிறாள் – உவகையால்
கவிதையாய் வடிக்கிறாள்..!
எத்தனை முறை அவள்
எழுதிப் பார்த்தும்
உனைப் போலொரு உயிர்க்கவிதையை
வடிக்க முடியாதென
உனை வாழ்த்தி மகிழ்கிறாள்
வருக எங்களின் இளவலே...
வளர்க நீயும் புவியிலே...
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!


(இன்று எனது ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணன் - கவிதா தம்பதிக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது. அம்மகவின் வரவிற்க்காக இக்கவிதை..!)
Tuesday, December 11, 2012

மாபெரும் கவியே..! - பாரதியார் பிறந்தநாள் கவிதை!பாட்டுக்கொரு புலவா! – என்றன்
பாட்டுடைத் தலைவா நின்றன்
சிகக் கோடிகளில் ஒருவன் – உன்றன்
கவிகளுக்கு அடியார்க்கு அடியன்!
தியாகத் தமிழ் திருவுருவே – விழியில்
     தீஞ்சுடர் செந்தமிழ்க் க(ன்)னலே..!
யாக்கையும் குருதியும் ஈந்தே – தமிழ்
     மொழிக்கே மாற்றம் தந்(தை)தாய்..!
ர்ரென்றாலும் நீயிங்கில்லை – அமிழ்
     தமிழ் கவியால் எங்களுள் வாழ்கிறாய்!

தேசத்தின் மாபெரும் கவியே – மொழியில்
விடுத்தாய் விடுதலைத் தணலே..!
ட்டத்தை உடைத்த ரவியே – பரங்கியன்
கொட்டத்தை அடக்கிய கவிப்புனலே..!
ம்மாநிலம் பயனுற வேண்டியே – தீயவற்றை
தீயிட்டழிக்கப் பிறந்த கவிச்சூரியக் கனலே..!


(தேசிய கவிஞர் பாரதியாரின் 130-வது பிறந்த தினம் இன்று. தமிழ் தேசம் இன்று சினிமாவின் பின்னால் போய்க்கொண்டிருக்க, சிற்சில தமிழார்வலர்களாவது பாரதியின் பின்னால் இருப்பது கண்டு மனம் ஆறுதல் கொள்கிறது. தேசியக் கவிக்கு இச்சிறுவனின் கிறுக்கல் சமர்ப்பணம். அவன் வழி தொட்டு வாழிய செந்தமிழ்..!)Wednesday, December 5, 2012

சுவாச அறைக்குள்..!இங்கிருக்கும் தென்றலே
என்னவனை தீண்டிவிட்டு
எனை வந்து சேர்வாயா..?
என்று என்னவள்
தீந்தென்றலை தூது விட்டாள்..!
அவளின்றி அணு உலையாய்
கொதித்துக் கொண்டிருந்த
என் தேகத்தில்
அவளைத் தீண்டிய தென்றல்
குளிர் காற்றாய் எனை மோதியது..!
குளிர வைத்த தென்றலை
அவளிடம் திருப்பி அனுப்ப மனமில்லை…
அவள் வாசத்தை
அது சுமந்து வந்திருந்ததால்…
அதை என் சுவாச அறைக்குள்
சிறை பிடித்தேன்…
என் கனவறையில்
அவளுக்குள் சிறைப்பட்டேன்..!

******

பூந்தென்றல் எனக்காக
தீந்தென்றலை தூது விட்டது
அவளைத் தீண்டிய தென்றலை
திருப்பி அனுப்ப மனமின்றி
சுவாச அறைக்குள் சிறைபிடித்து
உயிர் நிறைத்தேன்..!
அது உயிர் நிறை தேன்..!

******