ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, October 30, 2009

நூறு மில்லி..!



மறந்தும் கூட பெரிய வார்த்தை
பேசாத அப்பா..!
அன்புடன் அரவணைப்பதில்
அன்னைக்கு
நிகரான தந்தை..!
கேட்டவுடன் அள்ளித் தருவதில்
புராண காலக் கர்ணனை விஞ்சிய
நிகழ்கால வள்ளல்..!
அப்பப்பா... என் அப்பாவிடம்
எவ்வளவு நற்குணங்கள்..!
அத்தனையும் தவிடு பொடியானது
அவரடித்த நூறு மில்லியால்..!



Thursday, October 29, 2009

குறுங்கவிதைகள்: கல்வி..!




இன்றைய கல்வி

சரஸ்வதியைக் காண
லட்சுமியைத்
தேட வேண்டியிருக்கிறது..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

பள்ளி

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி..!
பெயர் மட்டும்
'ஔவையார் அகாடமி'

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*



Wednesday, October 28, 2009

உலகின் மிகச் சிறந்த சிற்பிகள்..!



இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்..?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே..!



Tuesday, October 27, 2009

நீரின்றி..!

நீரின்றி மீன்கள்
வாழுமா பெண்ணே..?
வாழமுடியாதடா என்றாய்
பிறகெப்படி..?
நீரே இல்லாமல்
உன் கண்களுக்குள்
இரண்டு கெண்டை மீன்கள்
துள்ளி விளையாடுகின்றன..?



(இது என்னுடைய 50-வது பதிவு... இந்நேரத்தில் என் தாய், தந்தைக்கும், தாய்த்தமிழுக்கும், அன்பு நண்பர்களுக்கும், எனை எழுதத் தூண்டிய என்னவளுக்கும் எனது நன்றிகள் சமர்ப்பணம்..)




Monday, October 26, 2009

எனக்கும் தேனீக்கும் சண்டை..?




உன்னால்...
எனக்கும் தேனீக்கும்
சண்டை பெண்ணே...
நீ சிந்துவது
புன்னகையா..?
தேனா என்று..?



Friday, October 23, 2009

உதைக்க வருவதேன் பெண்ணே..!




உண்மையைச் சொன்னால்
உதைக்க வருவதேன் பெண்ணே..?
உன் முகம் அழகிய ரோஜா என்றேன்..!
சீச்சீ... என் முகமெல்லாம்
முகப்பருக்கள்..?
ஏனடா ரோஜா என பொய் சொல்கிறாய்
என்றபடி எனை அடிக்க வருகிறாய்..!
அட அசடே...
முள்ளில்லாத ரோஜா ஏது..?



சென்னை மா பாலைவனம்..!



அரிசிலாற்றங்கரையில்
அலை மோதி விளையாடிற்றாம்...
உப்பலாற்றங்கரையில்
மழை மோதி விளையாடிற்றாம்...
அதில் வளர்ந்த நாணல்கள்
மகிழ்ச்சியில் ஆடிற்றாம்...
ஆற்றுப் படுகையின்மேல் தாழ்வாகப்
படுத்திருந்த மாமரம் மழை கண்டு
மந்தகாசப் புன்னகைப் புரிந்திற்றாம்..!
மந்திகள் கூட்டம் மாங்கனியுண்ட
மயக்கத்தில் ஆற்றுப்படுகையில்
குதித்து விளையாடிற்றாம்..!

அத்துனையும் இந்நாட்டில் நடந்ததென்றும்
மாதம் மும்மாரி பெய்ததென்றும்
சரித்திர ஏடுகளில் பதிக்கப்பட்டிருந்ததை
சாவகாசமாய்ப் படித்துக் கொண்டிருந்தேன்..!

அப்போது...
சட்டென்று மின்சாரம் இறந்து விட...
என்னுடலெங்கும் வியர்வைத்துளிகள்
உயிர் பெற்றெழ...
காற்று வேண்டி என்னறையின்
சன்னலைத் திறந்தேன்...

சென்னை எப்போதும் தன் பரபரப்பில்
ஆழ்ந்து கொண்டிருக்க...
ஆமையாய் ஆங்காங்கே வாகனங்கள்
ஊர்ந்து கொண்டிருக்க...
வாகனப் புகைகளெங்கும்
வாட்டமாய் வியாபித்திருக்க...
சுவாசிக்க சுத்தமான காற்று எங்கே வரும்...

பெட்ரோலைக் குடித்துக் குடித்து
உயிர்வாழும் இயந்திர ஒட்டகங்கள்
சாலையில் ஓடிக் கொண்டிருக்க...
சாலையெங்கும் வெப்பச்சலனம் விசிறியடிக்க...
சென்னையும் வெப்பக்காற்றில் மூச்சுத் திணற...
இன்று பெய்யும்.. நாளை பெய்யும் என்று
ஏக்கப் பார்வை பார்க்கும் விவசாயியைப் போல்
வானத்தைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும்
சென்னை மாந(க)ரகம்...
அதனோடு சேர்ந்தபடி நானும்...

மழையற்றுப் போனதால் இங்கே
தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாட...
தண்ணீர் லாரியைக் கண்டதும் மக்கள் கூட்டம்
தலைதெறிக்க ஓடி வர...
சென்னை மாநகரமல்ல
சென்னை மா பாலைவனம்...
என்ன ஊரடா இது என்று நினைத்தபடி
வெப்பத்தோடு வெப்பமாக
வெம்பிப் போனேன்...

மின்சாரம் உயிர் பெற்றழ...
சன்னலைச் சாத்தியபடி
மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன்

'அரிசிலாற்றங்கரையில்
அலை மோதி விளையாடிற்றாம்...
உப்பலாற்றங்கரையில்
மழை மோதி விளையாடிற்றாம்...'


------------------------------
('யாருக்கு நன்றி சொல்ல..!' என்ற தலைப்பிட்ட கவிதையை வாசித்த அன்பு நண்பர் அன்பு மதி நிறை செல்வன் பின்னூட்டத்தில் அவரிட்ட கருத்துக்களம் கீழே... அவரின் வயிற்றெரிச்சலைத் தீர்ப்பதற்க்காகவும்... அவரைப் போன்ற சென்னை வாசிகளின் வயிற்றெரிச்சலைத் தீர்ப்பதற்க்காகவும் இந்தக் கவிதை...)

//அய்யா!

ஏன் எங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்பு கின்றீர்கள்? மழையைக் கண்டு பல திங்கள் ஆகிவிட்டதே சென்னையில்... தெரியாத உங்களுக்கு?

சென்னை இப்போது பாலைவனமாக ஆகி வருகிறது..மக்களின் மன நிலை போல. இனி பாலைவனத்தைப் பற்றி கவிதை எழுதுங்கள்.

வாழ்த்துக்களுடன்,
அன்பு மதி நிறை செல்வன்,
20/10/2009.//



Thursday, October 22, 2009

எனை என்ன செய்தாய் பெண்ணே..?




என் அலைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
நீதான் அழைக்கிறாய்
என ஓடோடி வருகிறேன்..!
குறுந்தகவல் வரும்போதெல்லாம்
குறும்புக்காரி நீதான் அனுப்பினாய்
என ஆவலோடு ஓடி வருகிறேன்..!
நீ இல்லை என்று தெரிந்ததும்
வாடிப் போகிறேன்..!
இப்படி யார் அழைத்தனுப்பினாலும்
எனக்கு நீ அழைத்தனுப்புவதாகவே தோன்றுகிறது…
எனை என்ன செய்தாய் பெண்ணே..!



Wednesday, October 21, 2009

நிலவிற்கு முகமூடி..!




நிலவிற்கு முகமூடி அணிந்தது
போலிருக்கிறது பெண்ணே…
தூசிகளிலிருந்து தப்பிப்பதற்காக
உன் முகத்தைச் சுற்றி
துப்பட்டாவை கட்டியிருக்கும் அழகு..!



Tuesday, October 20, 2009

வளைந்து கொடுக்கும் நாணலடி..!


தென்றாலாக வீசுவாய்
என காத்திருந்தேன்...
நீயோ கொடும் புயலாக வீசுகின்றாய்..!
நான் ஆலமரமல்ல பெண்ணே
உனை எதிர்த்து நின்று
அடியோடு வீழ்ந்து போவதற்கு..?
நான் வளைந்து கொடுக்கும் நாணலடி
உன் புயல் வீச்சிற்கு தகுந்தாற்போல்
தலையசைத்து உன் வருகையை
உவகையோடு ஏற்றுக் கொள்வேன்..!
அப்போதாவது என்காதலை
புரிந்து கொள்..!




நீயோ இதை அத்தனையும்..!


மருண்ட விழி மானுக்குச் சொந்தம்
திரண்ட கருங்கூந்தல் மேகம்
வானிற்குச் சொந்தம்
வெள்ளி நிற வதனம் அந்த
வெண்ணிலவிற்குச் சொந்தம்…
பளீர் வெள்ளைச் சிரிப்பு
மின்னலிற்குச் சொந்தம்…
பளிங்கு நிறக்கழுத்து
வெண் சங்கிற்குச் சொந்தம்…
இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை
சொந்தமாக்கி வைத்திருக்க…
நீயோ இதை அத்தனையும்
சொந்தமாக்கி வைத்திருக்கிறாயே…




Monday, October 19, 2009

யாருக்கு நன்றி சொல்ல..?




மழையில் நீ நனைந்து விளையாடும்
அழகைப் பார்த்து
கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு..!
இதில் நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?



Thursday, October 15, 2009

இயற்கையின் நியதி..?




தாமரையில்
தண்ணீர்த் துளிகள்
ஒட்டவே ஒட்டாது
என்பதுதானே
இயற்கையின் நியதி..!
பிறகெப்படி
உன் முகத்தில் மட்டும்
வியர்வைத் துளிகள்..!



தென்றலைத் தூது விட்டாயா..?


உன்னைத் தீண்டிய தென்றல் வந்து
என்னைத் தீண்டும்போது
உன்னுடைய வாசத்தை
எனக்கு சுவாசமாய்
கொடுத்து விட்டுப் போகிறது பெண்ணே..! 
தென்றலைத் தூது விட்டாயா என்ன..?   




Wednesday, October 14, 2009

சீண்டல் எதற்கு..?


நீ பொய்க் கோபமுற்று
என் நெஞ்சில் செல்லமாய்
அடித்து விளையாடுவதற்காகவும்…
நீ வெட்கத்தால் நாணிச் சிவந்து
ரோஜாவைப் போல் சிரிக்கும்
அந்த குங்குமச் சிரிப்பை
ரசிப்பதற்காகவும்..!
உன்னை வேண்டுமென்றே
சீண்டி விளையாடுகின்றேன்..!




Tuesday, October 13, 2009

உன்னுடைய தலையணையாய்..!


உன்னுடைய தலையணையாய்
நான் இருந்திருக்கக் கூடாதா..?
உன்னுடைய அன்பான
அரவணைப்பு...
கனிவான கதகதப்பு எல்லாம்
எனக்கு அனு தினமும்
கிட்டியிருக்குமே..!   




ஒற்றைக் காலில் தவம்..!




நீர் நிறைந்த குளத்தில்
ஒற்றைக் காலில்
நின்றபடி
உன் தரிசனத்திற்காகவே
தவம் செய்து கொண்டிருக்கிறது
அந்த செந்தாமரை..!  



மூன்றாம் பிறை அழகு..!


உன் கார்மேகக் கூந்தலில்
மல்லிகைப்பூ
சூடியிருக்கும் அழகு
எப்படி இருக்கிறதென்றால்..?
கரு மேகத்தினூடே
மிதந்து திரியும்
மூன்றாம் பிறை போல
இருக்கிறது அன்பே..!




Friday, October 9, 2009

உன் தாவணிக்கு அடிமை..!


என்னதான் ஆயிரம் பெண்கள்
நாகரீகம் என்ற பெயரில்
சுடிதார்… ஜீன்ஸ்...
என வித விதமாய் ஆடைகள்
அணிந்து வந்தாலும்…
அவைகள் என்றுமே
உன் அழகான தாவணிக்கு
அடிமைகள்தான்..!




கடல் கன்னியல்ல... காதல் கன்னி..!


உன் கண்களிரண்டும்
துள்ளி விளையாடும்
கெண்டை மீன்கள்..!
உன் பற்களனைத்தும்
வெள்ளை முத்துக்கள்..!
நீ உதிர்க்கும் சிரிப்புகளனைத்தும்
சிலிர்த்து வரும் கடலலைகள்..!
மொத்தத்தில் நீ ஒரு கடல் கன்னி
நீ என் காதல் கன்னி..!




Thursday, October 8, 2009

இன்று சம்பள நாள்..?!

பால்காரனுக்கு இவ்வளவு…
பள்ளிக் கட்டணம் இவ்வளவு…
மளிகை சாமானுக்கு இவ்வளவு…
வீட்டு வாடகைக்கு இவ்வளவு…
தீபாவளி செலவுக்கு இவ்வளவு…
என வரிசையாய்
கணக்கு போட்டபடி
அலுவலகம் வந்து சேர்ந்தேன்…

மாலைக்குள் அத்தனை வேலையையும்
முடித்து விட்டு சம்பளத்திற்காகக்
காத்திருந்தேன்..!
அழைத்துச் சொன்னார் முதலாளி
இம்மாதம் சம்பளமில்லை
அடுத்த மாதம் பார்க்கலாமென்று.

என்னுடைய அத்தனை
கணக்குகளும் நொடிப்பொழுதில்
இந்தியனின் எண்கணிதக்
கண்டுபிடிப்பில் வந்து நின்றன..!

ஏமாற்றத்தோடு
வீடு திரும்பினேன்...
சிரித்தபடி வரவேற்ற
என் இல்லாள்
விபரமறிந்ததும்
வாடி நின்றாள்..!

எனைப் பார்த்து ஓடி வந்த
என் நான்கு வயது மகன்
வெற்றுக் காகிதத்தைக் காட்டி
சிரித்தபடி கேட்டான்
'அப்பா..! இதோ என் சம்பளம்...
உன் சம்பளம் எங்கே..?'

அவனுடைய சம்பளத்தைப் பார்த்தேன்
அந்த வெற்றுக் காகிதம்
எனைப் பார்த்து சிரித்தது..!



Wednesday, October 7, 2009

உன் வாசலில் தவம்..!


மார்கழிக் குளிரில்
சூரிய விடியலில்
நீர் தெளித்து
கோலமிட்டுச் செல்லும்
உன்னழகைக் காணவே
எண்ணற்ற கனவுகளோடு
உன் வாசலில் தவமிருக்கிறேன்..!
பூசணிப் பூவாய்..!




Tuesday, October 6, 2009

கடிதமெழுத முயற்சிக்கிறேன்..!


உனக்கு கடிதம் எழுதலாமென்று
எவ்வளவோ
முயற்சித்துப் பார்த்தேன்…
ஊஹும்…
அத்தனையும்
கவிதையாய்த்தான்
வருகிறது..!



கர்வப்பட்ட அன்னப்பறவை..!


இது நாள் வரை
தன் நடைதான்
அழகு நடையென
கர்வப் பட்டுக் கொண்டிருந்த
அன்னப் பறவை..!
உன் அழகு நடையைக்
கண்டதும்
அடங்கி விட்டதடி..! 



Monday, October 5, 2009

தாஜ்மஹால்


இரு பறவைகளின்
இல்லற இன்பத்தில்
ஒரு பறவை இறந்துவிட...
மறு பறவை கட்டிய
வெண் பளிங்கு
வெள்ளைக் கூடு..!



Thursday, October 1, 2009

மதுமிதாவிற்கு வாழ்த்து..!

காலட்ச் மியுமுனைப் பெறவே - அவளிடத்
துஞ்சினாய் தூயவளே… கவிணேசக்  கவித்துவா
மின் மகளே சத்தியத்தின் வழி நிற்கும்
தானாதிபதியாய்  நூறாண்டு நீ வாழி..!


(எங்களது தோழியின் மகளான மதுமிதாவிற்கு இன்று 4வது பிறந்தநாள்... அச்சிறுமிக்காக நான் எழுதிய மரபுக்கவிதை (முயற்சி)... இதில் எதுகை, மோனை இருக்காது. ஆனால், சீர்கள் வெண்பாவிற்குரிய இலக்கணத்துடன் இருக்கும்...

இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலுள்ள முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்தால்... பிறந்தாநாள் கொண்டாடும் சிறுமியின் பெயர் வரும்... இச்சிறுமியின் தாயின் பெயரை, இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலுள்ள இரண்டாவது எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இச்சிறுமியின் தந்தையார் பெயரான கணேசனுடைய பெயரும் இதில் அடங்கி இருக்கும்.

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்...)


கா மேரு பருவதமடா உன்றன் தாய்
துஞ்சினாய் அவள் வயிற்றில் மழலையாய்…
மிசல் கணக்கனின் கணக்குப்படி – பத்துத் திங்கள்
தானாகத் தனித்திருந்தாய்க் கருவறையில்..!

பிறப்பெடுத்தாய் பெண் மலராய் இப்புவியிலி
வாத நிலை பெறுவாய் என்கவியில்..!
ந்தியத் திருநாட்டில்  நீ ஒரு பூங்காற்று..!
மிழின் தலைமகளே நீ எங்கள் தாலாட்டு..!
நாமகளே… நீ பிறந்த இந்நாளில் என்றும் நலமேவ
ள்ளி மகன் வாழ்த்துகிறான்… வாழ்க நீ பன்னூறாண்டு..!

(அதே போன்றதுதான்..ஆனால் கொஞ்சம் வித்தியாசம்...)





விதவை..!?


--*--*--*--*--*--*--*--
பிறருக்கு வெளிச்சம்
கொடுப்பதற்காக
தன்னையே அழித்துக் கொள்ளும்
மெழுகுவர்த்தி..!

--*--*--*--*--*--*--*--