ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, April 16, 2013

மின் வெட்டு! - ஜாலி கவிதை


இதோ வருகிறேன்
அதோ வருகிறேன்
என்று சொல்லி விட்டு
அடிக்கடி காணாமல் போகிறாயே
நீயென்ன
என் வருங்கால
சம்சாரமா..?
இல்லை
தமிழ்நாட்டின்
மின்சாரமா..?

@@@@@@@@@@@@@

நீ கண்வெட்டிப்
போகும்
போதெல்லாம்
எனக்கு
தமிழ்நாட்டின்
மின்வெட்டுதான்
நினைவிற்கு வருகிறது...

@@@@@@@@@@@@@

மின்சாரத் துண்டிப்பால்
அடிக்கடி
இயக்கமிழக்கும்
இயந்திரத்தைப் போல்
உன் கண்சாரத்
துண்டிப்பால்
நானிங்கு
இயக்கமிழந்து போகிறேன்..!

@@@@@@@@@@@@@

(கோடை வெயில் கொளுத்தி அடிக்க, தமிழகமே மின்வெட்டால் திமிலோகப்பட, நான் மட்டும் சும்மா இருப்பேனா... மின்வெட்டை இப்படியும் நையாண்டியாக சுட்டலாம் என்பதை இங்கே நாசூக்காக எழுதியிருக்கிறேன்...

ஹி...ஹி... சும்மா ஜாலிக்கு இந்த மின்வெட்டு கவிதை..!)
Saturday, April 13, 2013

விஜயமே வருக..! - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை!
நனிமகள் நந்தனாண்டு நடை தளர்ந்தாள்
பனிமகள் தளிர்நடை வளர்ந்தாள் - பறக்கும்
சித்திரைத் தேரிலேறும் தமிழ் விசயாண்டே
முத்திரை பதிக்க வருக!

************(இஃது ஒரு வெண்பா முயற்சி)**************


ஆண்டாண்டு காலமாய்
அழுது புலம்பினாலும்
மாண்ட காலம் மீள்வதில்லை
ஆயினும்
எம் தமிழ்ப் புத்தாண்டுப்
பெண்ணோ
ஆண்டாண்டு காலமாய்
மீண்டு கொண்டிருக்கிறாள்
எனைப் போன்ற
தமிழ்ப் பித்தன்களை
மீட்டுக் கொண்டிருக்கிறாள்...

குழவியாய்
நடைபயின்ற
நந்தன ஆண்டு
இன்றோடு
விடை பெறுகிறது
கிழவியாய்..!
அவள் பெற்ற குழவி போல்
அடுத்து நடைபயில
வருகிறது
விஜய ஆண்டு...
வரவேண்டும் விஜயமே
வளம் பல வேண்டும்
தினமுமே..!

வருக வருக
விஜயமே வருக
தருக தருக
நலம் பலவே தருக
பருக பருக
தமிழ் அமுதே பருக
பெருக பெருக
தமிழ் புகழே பெருக
எழுக எழுக
தமிழர் வாழ்வே எழுக
வெல்க வெல்க
தாய்த் தமிழே வெல்க
வளர்க வளர்க
மனத நேயமே வளர்க
பொழிக பொழிக
மாதம் மும்மாரி பொழிக
வாழ்க வாழ்க
தமிழ்புத்தாண்டே வாழ்க..!

(எனது அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
ஏற்றத்தாழ்விலா சமுதாயம் மலர வேண்டும்

என வேண்டும்
உங்கள்
மோகனன்)
Friday, April 12, 2013

உன் பிறப்பால்..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை

ண்டத்தில் சுற்றித் திரியும்
      துண்டங்களில் அழகினும் பேரழகிய
வெண்ணிலவாய் உருவெடுத்து
      பெண்ணிலவாய் பிறந்தாய் இன்று
னிலம், நீர், காற்று, வெளியென
      உன் பிறப்பால் களிப்பெய்திய நாளின்று
ஸ்வரமே நீ பிறந்த இந்நாள் மட்டும்
      இன்றி என்னாளும் உன்னாளாகட்டும்!


(என் அலுவலக தோழிக்கு நேற்று பிறந்த நாள். நான் அலுவலகத்தில் சோர்ந்திருக்கும் போதெல்லாம், எனை அன்போடு விசாரிப்பவர். நேற்றும் நான் அப்படி இருக்கவே, அவருக்கு நான் ஒருவாழ்த்து கூட சொல்லவில்லை. மாலையில் அவரே எனை அணுகி, ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டுதானே இருப்பீர்கள். அப்படி இருப்பதுதான் எங்களுக்குப் பிடிக்கும்  என்று, என்னை ஆசுவாசப்படுத்தினார்... அதன் பிறகே அவருக்கு வாழ்த்து சொல்ல விரும்பி, இக் கவிதை  மூலம் வாழ்த்தை சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். 

இக்கவிதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் தடித்திருக்கும் முதல் எழுத்தை மேலிருந்து கீழாக படித்துப் பார்த்தால் என் தோழியின் பெயர் படிக்கக் கிடைக்கும்.)
Monday, April 1, 2013

அன்பிற்கு இவன் அடிமை..! - அகர வரிசைக் கவிதை


மோகத்தின் முதற்பிள்ளை
மோகனின் மூன்றாம் பிள்ளை
அன்பினில் அன்றில் பறவை
ஆசையில் அன்னப் பறவை..!

ன்பிற்கு இவன் அடிமை
க்கத்தில் நிகழ்த்துவான் புதுமை
அனைத்தையும் அறிந்து கொள்ள
ஆசைப்படும் இவன் இளமை

வனொன்றும் செய்யாமலே
டற்ற தென்றல்கள் இவனைத் தீண்டும்
இவன் வாசம் பெற ஏங்கும்
ஈரிதழும் பெருமூச்செறிந்து தூங்கும்..!

ண்மையில் ஒன்றுமில்லாதவனெனினும்
க்கத்தை நிறைத்து வைப்பான்
உலகம் உய்ய உழைத்திருப்பான்
ஊடல் பல செய்து வைப்பான்

ளிமை வாழ்க்கை விரும்புமிவன்
ழை பெற்ற எளிய மகன்
என்னையும் நேசிக்கும்
ஏந்திழையே நான் செய்த பேறென்ன

யம் பட்டு நிற்கிறேன் - அன்பே என்
ஐயத்தை நீக்குவாய்... உன்னருகாமைக்கு
ம்புலனும் ஏங்குவதேன்
ஐயகோ என்று அலறுவதேன்...

ன்றாய் வாழ நினைக்கிறேன்
வியமே பதிலைச் சொல்...
ஒன்றிணைவது எப்போது? - நாம்
ஓடி விளையாடுவது எப்போது?

வை சொன்ன மொழி கேட்டால்
ஔடதமாய் இனிக்குதடி..
க்கறையே நான் இக்கரையில்
ஃதே அன்பே நானென்ன செய்ய...?

(என் கவிதை ஓர் தமிழ் விரும்பி. தமிழ் குறும்பி... அவளுக்கென அகர வரிசையில் எனை வைத்து அவளுக்காக வரைந்த கவிதை இது...)