ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, May 31, 2010

உன் மயக்கம்..!

உன் அதர வாய் திறந்து
அன்பாய் என்னை
நீயும் அழைக்கும் போது…
என் உயிரும் உருகி வழிகிறது...
உனக்குள் புதைய நினைக்கிறது..!
செல்லமாய் நீ எனை அடித்து
விளையாடும் போது...
என் கரமோ
உன்னை அணைக்கத் துடிக்கிறது...
உன் கன்னத்தைக்
கிள்ள நினைக்கிறது..!
குறும்பாய் நீயும் சிரித்திடும் போது...
உன் கன்னக்குழியின்
அழகைப் பார்த்து
என் உள்ளமும்
மகிழ்ச்சியில் விரிகிறது...
உன்னோடு ஊடல்
கொள்ள விழைகிறது..!
உன் வெட்கச் சிவப்பை
பார்த்தத்திலிருந்து...
அடிக்கடி உனை வெட்கப்பட
வைக்கத் தோணுகிறது...
உன் வெட்கத்தில்
திளைக்கத் தோணுகிறது..!
போதும் பெண்ணே உன் மயக்கம்...
எனை ஏற்றுக் கொள்வதில்
ஏன் தயக்கம்..?Friday, May 28, 2010

உடல் மேல் காதல்..!


காமம்தான் மனிதனை
சில நிமிடங்கள்
நிர்வாணமாக்குகிறதென்றால்...
கடும் கோடை வெயிலோ 
மனிதனை
பல மணி நேரங்கள் 
நிர்வாணமாக்குகிறது..!
Thursday, May 27, 2010

சத்தமில்லா யுத்தமொன்றை..!

உன் வேல் விழிகளால்...
என் விழிகளுடன்
சத்தமில்லா யுத்தமொன்றை
செய்துவிட்டுப் போனவளே…
அந்த யுத்தத்தில்...
நான் அடியோடு வீழ்ந்து விட்டேன்..!
போர்க்கைதியாக அல்ல…
உன் மடியில்
காதல் கைதியாக..!Wednesday, May 26, 2010

'கன்னி'த் தமி்ழ்..!


எனைப் பெற்ற தாயிடமிருந்து
தாய்த்தமிழைக் கற்றுக் கொண்டேன்...
அழகான தமிழ்ப் பேச்சு வந்தது..!
என் தாயிடமிருந்து
எனைப் பெற்ற 'கன்னி '
உன்னிடமிருந்து
'கன்னி'த் தமிழைக் கற்றுக் கொண்டேன்...
அழகான கவிதை வந்தது..!
அதுவும் உன்னைப் போலவே
மிக அழகாக..!  Monday, May 24, 2010

அறிவியலா..? அழகியலா..?

இதுவரை அறிவியலை
மட்டுமே நம்பிக்
கொண்டிருந்த நான்...
நீ எனை பார்த்து விட்டுச்
சென்ற பிறகுதான்
அழகியலை நம்புகின்றேன்..!
உன் காதல் பார்வையால்
என் மனதிற்குள் காதல் பூத்தது…
அப்படியே என் முகத்தினில்
முகப்பருக்களும் பூத்தது..!
இது அறிவியலின் வேலையா..?
உன் அழகியலின் வேலையா..?Wednesday, May 5, 2010

நீ எந்தன் காதலியானால்..!


வெண்ணிலவில் வீடு கட்டி
என் பெண்ணிலவே
உனைக் கூட்டிச் சென்று
விண்மீன்களே அசரும்படி...
உன் விரல்களைப் பற்றிக்கொண்டு
வானவீதியில் உலா வருவேன்..!
வண்ண மயில் இறகினிலே   
வாகாக மெத்தை செய்து...
பெண்மயிலே அதில் உன்னை
தூங்க வைப்பேன்..!
வெண்மேகத்தின் மழைத்துளிகளை
அருவியாக்கி
பொன் மயிலே உனை
குளிக்க வைப்பேன்..!
அதிகாலைக் கதிரவனை
அழைத்து வந்து
உன் கார்மேகக் கூந்தலை
காய வைப்பேன்..!
இவையத்தனையும் செய்ய
என்னால் முடியும்
நீ எந்தன் காதலியானால்..!