ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 31, 2010

புயலென்று சொன்னாலும்..!


புயலென்று சொன்னாலும்
நீயென்று சொன்னாலும்
இரண்டும் ஓன்றுதான்..!
'தென்றலல்ல அவள்' என்று
உன்னைப் பற்றி
உன் உறவுகள் சொல்லக்
கேட்டிருக்கிறேன்..!
அப்ப்போதெல்லாம் அதை
நம்பாத நான்
உனை நேரில் சந்தித்த பின்
நம்பத் தொடங்கினேன்..!
நீ வெறும் புயலல்ல..?
பேரழகுப் புயலென்று..!Tuesday, March 30, 2010

நீ என்னிடம் வரும் நாள்..?


எதற்கெடுத்தாலும்
விரல் விட்டு எண்ணும்
சிறு குழந்தையைப் போல…
அனு தினமும் - உன்
அடியவனும் விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருக்கிறேன்…
நீ என்னிடம் வரும் நாள்
எப்போது வரும்
என்பதற்காக..?
அலுமினியப் பறவையில்
பறந்து சென்ற
அன்னப் பறவையே…
உனக்கென கவி விடு தூது அனுப்புகிறேன்..
காற்றாய் விரைந்து வந்து விடு...
என்னுள் கவி மூச்சுக் காற்றாய் கலந்து விடு..!
என் காதலை எப்படியும்..!


ஆளரவமற்ற பாலைவனத்தில்
அனாதையாய் உனைத்
தேடுகின்றேன்..!
நீ போன வழியினைத்
தேடித் தேடி
ஓடாய்த் தேய்ந்தபடி
உனைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்..!
ஒவ்வொரு நாள்
சூரியன் உதிக்கும் போதெல்லாம்
என் காதலை எப்படியும்
கண்டு பிடித்துவிடுவேன்
என்ற நம்பிக்கையை மட்டும்
தேய்த்து விடாமல்..!Monday, March 29, 2010

ஒரே ஒரு மௌனப் புன்னகை..!


என் அமைதியான மனதை…
கொஞ்சிக் குலுங்கும்
உன் கொலுசொலிகள்
குலைக்கவில்லை..!
கொஞ்சிப் பேசும்
உன் கை வளையல்கள்
குலைக்கவில்லை..!
ஆனால் நீ உதிர்த்த
ஒரே ஒரு மௌனப் புன்னகை
என் மனதைக் குலைத்து விட்டதடி..!
இப்போதேனும் ஒத்துக் கொள்..!
உன் மௌனப் புன்னகைக்கும்
வலிமை உண்டென்று..!Saturday, March 27, 2010

சட்டென்று முத்தமிட்டு..!


அடங்காமல் திரிந்து
கொண்டிருந்த என்னை…
சட்டென்று முத்தமிட்டு
சாந்தமானவனாய்
மாற்றிவிட்டாய்..!
அந்த முத்தத்தினால்
என் சித்தம் மாறியது மட்டுமின்றி
காதல் பித்தம் ஏறியபடி
மொத்தமாய் உனக்காகிப் போனேன்...
மெழுகாய் உருமாறிப் போனேன்..!Friday, March 26, 2010

அழகற்ற பொருள் கூட..?


உன் கண்ணழகை
ரசிப்பதற்கே
எனக்கு நேரம் போதவில்லை..!
இதில் உன் ஆடையழகைப் பற்றி
என்னிடம் கேட்டால்
நான் என்னென்று சொல்ல..?
பெண்ணழகே…
அழகற்ற பொருள் கூட
உன்னோடு சேர்ந்தால்
அத்தனையும் அழகாகி விடும்…
நானும் அழகாகியதைப் போல்..!Thursday, March 25, 2010

இதோ... இந்நொடியிலிருந்து..!


என் பாதை
கரடு முரடானது என்று
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் சுவடைப்
பின் தொடருகிறாய்..!
என் பேச்சு
சற்று நாகரீகமற்றது எனத்
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் பேச்சை
நாகரீகப்படுத்துகிறாய்..!
என கொள்கைகள்
உனக்குப் பொருந்தாது என்று
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் கொள்கைகளைப்
பின்பற்றுகிறாய்..!
இத்தனையும் எனை
அறியாமல்
செய்தவளே..!
உன் அன்பை இப்போதுதான்
கண்டுகொண்டேன்..!
இதோ... இந்நொடியிலிருந்து
நான் உனக்கானவனாக
மாறி விட்டேன்..!Wednesday, March 24, 2010

உன்னை கண்ட பின்புதான்..!


எப்படித்தான் என்னுள் உற்சாகம்
ஊற்றெடுக்கிறது
என்பது தெரியாமல்
தினமும் தவித்துக் கொண்டிருந்தேன்..!
உன்னை கண்ட பின்புதான்
தெரிந்து கொண்டேன்…
என்னுள் எப்படி
ஊற்றெடுக்கிறதென்று..!
Tuesday, March 23, 2010

உன் மௌனப் புன்னகைக்கு முன்..?


பேசா மடந்தையாகி விட்ட
உன்னைப் பேச வைக்க
உன்னிடம் என்னென்னவோ பேசுகிறேன்…
பதிலுக்கு நீ மௌனத்தை
பரிசாகத் தருகிறாய்…
உனை என்னிடம் பேச வைக்க
பகீரதப் பிரயத்தனங்களை
செய்து பார்க்கிறேன்…
பதிலுக்கு உன் மௌனப் புன்னகையை
பரிசாகத் தருகிறாய்..!
அந்த மௌனப் புன்னகைக்கு முன்
என் அத்துனை முயற்சிகளும்
ஆயுள் இழந்து விட்டன என்பதை
பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறேன்..!
இப்போதாவது பேசு..!Monday, March 22, 2010

நாவிற்கு ஏது பேச்சு..?


தலை இருக்கும் போது
வால் ஆடக்கூடாது என்பார்கள்…
அது உண்மைதான் பெண்ணே..!
நம் கண்களிரண்டும்
காதலோடு பேசிக்
கொண்டிருக்கும் போது
நாவிற்கு ஏது பேச்சு..?
அவைகள் சற்று
அடங்கியே இருக்கட்டும்..!Saturday, March 20, 2010

என் தமிழின் மூன்றினமும்..!


நீ சேலை கட்டியிருந்தபோது
உன்னுடைய அழகான
இடையினத்தைக் கண்டு ரசித்தேன்..!
அதைக் கண்ட நீயோ
சட்டென்று உன் இடையினத்தை
மறைத்தது மட்டுமின்றி
உன் இயல்பான மெல்லினத்தையும்
மறைத்து விட்டு
வல்லினத்தைக் காட்டுகிறாய்..!
இப்படி என் தமிழின்
மூன்றினமும் உன்னிடம்
மொத்தமாய் இருக்கும் போது
ஓரினத்தை மட்டும்
நான் பார்த்து ரசித்தது
தவறுதான் பெண்ணே..!Friday, March 19, 2010

உன் அருகாமைச் சுகத்தில்..!


எனைப் பார்த்தும்
பார்க்காமல் போனது ஏன்..?
என்னிடம் பேச நினைத்தும்
பேசாமல் போனதேன்..?
என அத்தனையும் உனைப் பார்த்ததும்
கேட்க வேண்டுமென நினைப்பேன்..!
உனைப் பார்த்த வினாடியில்
அத்தனையும் மறந்தபடி
உன் அருகாமைச் சுகத்தில்
அசைவற்றுப் போய் விடுகிறேன்…Thursday, March 18, 2010

சுவாசித்து மகிழ்கிறாய் என்பதற்க்காகவே..! (மீள்பதிவு...)


என் கவிதைகளை 
நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்காகவே
நாள்தோறும்...
எழுதிக் கொண்டிருக்கிறேன்

கவிதைகளை..!
அதுவும் உன்னைப் பற்றியே..! 
Wednesday, March 17, 2010

உன் மடி மீது தலை சாய..!


உன் மடி மீது தலை சாய
ஆசைப்பட்ட எனக்கு…
உன் நெஞ்சணையில்
எனைச் சாய்த்து
வள்ளல் எனக் காட்டி விட்டாய்..!
என் மீசைதனை பிடித்திழுத்து
உன் குறும்புகளை
அவிழ்த்து விட்டாய்..!
இதை அத்தனையும்
ஆனந்தமாய் என்
அடி மனதில் சேமிக்கிறேன்..!
நீ என்னருகே இல்லாத
தருணங்களில்
மீட்டெடுத்துப் பார்ப்பதற்கு..!அதிகாலையில்..!


அதிகாலையில் கூவும் குயிலாய்
உன் மயக்கும் குரல்..!
அதிகாலையில் உதிக்கும் சூரியனாய்
உன் மஞ்சள் முகம்..!
அதிகாலையில் எழுப்பும் அன்னையாய்
உன் அன்பு எழுப்பல்..!
அதிகாலையில் மலரும் மல்லிகையாய்
உன் அழகிய புன்னகை..!
இந்த சுகங்களத்தனையும்
அதிகாலையிலேயே எனக்கு
கிட்டுமென்றால்...
என் காலம் முழுதும் எனக்கு
அதிகாலையாகவே இருக்கட்டும்..!
என்னவளின் அழகு தரிசனம்
எனை அனுதினமும் அள்ளித் தின்னட்டும்..!Friday, March 12, 2010

உண்மையிலேயே நீ..?


உயிரோடு கலந்த உறவென்பது
உன்னோடு பழகிய பின்புதான்
தெரிந்து கொண்டேன்..!
பிரிவென்பது கொடும் சாவென்று
உன் பிரிவினில்தான்
நான் தெரிந்து கொண்டேன்..!
நல்லதையும் காட்டி விட்டு
தீயதைதையும் காட்டுகிறாயே..?
உண்மையிலேயே  நீ...
காதல் தேவதைதானா..?!  Thursday, March 11, 2010

ஏதாவதொரு கவிதை சொல்..!அலைபேசியில் அழைத்து
‘என்னைப்பற்றி
ஏதாவதொரு கவிதை சொல்…
அதுவும் இப்போதே சொல்லென்கிறாய்..!’
உன் அழகிய புன்சிரிப்பும்
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த
உன் வெண்ணிலவு வெட்கமும்
ஆயிரமாயிரம் கவி சொல்லும் போது
பிறிதொரு கவிதை எதற்குப் பெண்ணே..!
Tuesday, March 9, 2010

உன் பெயருடன்..!


என் பெயரை தனியே
எழுதிப் பார்ப்பதை விட
உன் பெயருடன்
சேர்த்து எழுதுவதைத்தான்
என் பேனாவும் விரும்புகிறது...
அதுவும் என்னைப் போலவே..!Monday, March 8, 2010

அன்பை உலகிற்கு அளிக்கும்..!


இம்மண்ணை தாய் மண்ணென்றழைத்த
நம் முன்னோர்க்கு வணக்கம்..!
தங்கத் தமிழை தாய்த்தமிழ்
என்றழைத்த தமிழனுக்கு
என் தலைவணக்கம்..!
இம்மண்ணிற்கு எனை
ஈன்றளித்த என்
அன்னைக்கு வணக்கம்..!
என் கண்ணிற்குள் நுழைந்து
கவிதையாய் மாறிய
என் காதலிக்கு வணக்கம்..!
என்றன் வாழ்வினையாய் மாறி
என்னுள் வாழ்கின்ற
துணைவிக்கு வணக்கம்..!
அன்பினைப் பொழியும் என்
அன்பு மகளுக்கு வணக்கம்..!
அன்பை உலகிற்கு அளிக்கும்
அகிலத்து மகளிர்க்கு வணக்கம்..!

******

அன்பில்லா வாழ்க்கையும் பாழ்
அன்னையில்லா அண்டமும் பாழ்..!

மண்ணில்லா மரமும் பாழ்
பெண்ணில்லா உறவும் பாழ்..!

உயிரற்ற இவ்வுடலும் பாழ்
பெண்ணற்ற ஆணும் பாழ்..!

 ******

என்னை இம்மண்ணில் உலவ விட்ட என் அன்னைக்கும், எனை நேசிக்கும் என் பெண் கவிதைக்கும், என் தோழிகளுக்கும், நாங்கள் ரசிக்கும் எங்களின் பெண் மகள்கள் உள்ளிட்ட அனைத்து உலக மகளிருக்கும் இச்சிறுவனின் இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

வாழ்க நம் பெண்குலம்..!
Friday, March 5, 2010

ஒவ்வொரு வினாடியும்..!


பெண்ணே..!
வசந்த காலத்திற்காக காத்திருக்கும்
வாழ்க்கை போல
உன் வருகைக்காக காத்துக்
கொண்டிருக்கிறேன்..!
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகமாகத்
தோன்றுகிறது எனக்கு..!
விரைந்து வா அன்பே..?
அந்த யுகங்களை உன்னுடன்
சேர்ந்து களிக்க வேண்டும்..!
Thursday, March 4, 2010

என் விடியல் உனக்காக..!


முப்பது நாள் கழித்துதான்
எனக்கு உன் முழுமதி நிலவு
முகத்தரிசனம் கிடைக்குமென்கிறாய்..!
நிலவின்றி இரவிற்கேது வெளிச்சம்..?
நீயின்றி என் மனதிற்கேது வெளிச்சம்..?
விரைவில் என்னிடம் வந்து விடு…
என் விடியல் உனக்காக காத்திருக்கிறது..!

**********************************

(அன்புத் தோழி திவ்யா ஹரி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இதோ எனது பாலக வயது நினைவலைகள்... படிக்க இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும் என் பதின்ம கால நினைவுகள்..! )Wednesday, March 3, 2010

காதலெனும் கடிகாரத்தில்..!


காதலெனும் கடிகாரத்தில்
மணி முள்ளாய் நீ..!
நிமிட முள்ளாய் நான்..!
நொடி முள்ளாய் நம் காதல்..!
நொடி முள்ளின்றி
நிமிட முள் ஓடாது..!
நிமிட முள்ளின்றி
மணி முள் ஓடாது..!
அது போலத்தான் அன்பே
நம்முடைய காதலும்..!

**********************************

(அன்புத் தோழி திவ்யா ஹரி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இதோ எனது பாலக வயது நினைவலைகள்... படிக்க இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும் என் பதின்ம கால நினைவுகள்..! )Tuesday, March 2, 2010

ஒரு முறைதான் அமாவாசை..!


இப்பூமியில் மாதத்திற்கு
ஒரு முறைதான்
அமாவாசை வரும்..!
ஆனால் எனக்கோ..?
அவள் என்னருகே இல்லாத
இந்த மாதம் முழுதும்
அமாவாசைதான்..!
என் வெள்ளி நிலவு என்று வரும்
என்ற ஏக்கத்தோடு நான்..?
அதோடு என் காதலும்..!
என் உறங்கா விழிகளும்..!


(என்னை தனியே விட்டு விட்டு, என்னவள், அவளது ஊருக்குச் சென்று விட்டாள்... வருவதற்கு ஒரு மாதமாகுமென்றாள்... அவளின் பிரிவைத் தாளமாட்டாமல் நான் எழுதிய கவிதை..!)
 Monday, March 1, 2010

உன் சுமையை..!

-->


என் தோள் மீது சாய்ந்தது
மலரா..? இல்லை மலர்க்கொத்தா..?
உன் சுமையை நான்
சுகமாய்ச் சுமக்க
நீ லேசாகிப் போனாய்…உன்னோடு சேர்ந்து நானும்..!


(என்னவள் துன்பத்தில் துவளும் போதெல்லாம்... என் தோள் மீது சாய்ந்து கொள்வாள்... அதை இங்கே கவிதையாக...)