ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, August 28, 2009

உன் குறும்புப் பேச்சில்..!


தமிழில் நீ பேசுவதால்
என் தமிழ் அழகா..?
இல்லை…
நீ பேசுவது தமிழென்பதால்
உன் பேச்சு அழகா..?
குழம்பிப் போகிறேன்
உன் குறும்புப் பேச்சில்..!
Wednesday, August 26, 2009

தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!உன் கூந்தலை கலைத்துச்
சென்ற குற்றத்திற்காக
தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!
கூந்தல் கலைந்து போனாலும்..?
உன் அழகு குறையாமல்
மேலும் கூடியிருக்கிறது என்பதால்
தென்றலை தண்டிக்காமல் விடுகிறேன்..!மருதாணிச் சிவப்பு..!
நீ வெட்கப்பட்டாலே போதும்
உன் முகம் மட்டுமன்று
முழு உடலும் சிவந்து விடும்..!
பிறகெதற்குப் பெண்ணே
மருதாணிச் சிவப்பு..!Monday, August 24, 2009

(அ)சைவக் காதல்


சுத்த சைவம் நான்..!
கனவில் கூட
அசைவத்தை
நினைத்துப் பார்த்தில்லை
உன் செவ்விதழ்களைக்
கண்டதிலிருந்து
அசைவம்
சாப்பிடத் தோன்றுகிறது
எனக்கு..!
Wednesday, August 19, 2009

ஒரு பிடி சாம்பல்


வெறும் சதைப் பிண்டங்களின்
மேல் பித்து
கொண்டுத் திரியும்
பித்தர்களே..!
நீங்கள் ஆசைப்படும்
அப்பூத உடல்
அடங்கிவிட்டால்
கடைசியில்
ஒருபிடி சாம்பலுக்குள்
அடங்கிவிடும்..!
பார்வையற்ற தம்பதியரின் நம்பிக்கை


கண் பார்வை இல்லாத
தம்பதியினர்
ஓடும் ரயிலில்
பிச்சையெடுத்தபடி
ஒன்று சேர்ந்து
பாடுகின்றனர்
''ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது..!''