ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, February 27, 2010

உன்னோடு என் இதயத்தையும்..!


ஒரு மாதம் எனைப் பார்க்க முடியாது
என்ற காரணத்தால்
எனைப் பிரிய மனமின்றி
உன்னோடு என் இதயத்தையும்
கொண்டு செல்கிறாய்..!
நானோ உன் நினைவுகளை
சுமந்தபடி நாட்களுடன்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்..!
அந்நாட்களை வென்று விட்டால்
நீ என்னருகே வரும் நாள்
வந்து விடும் என்பதற்காக..!


(காதலனை விட்டு விட்டு, அவனது காதலி, அவளது ஊருக்குச் செல்கிறாள்... வருவதற்கு ஒரு மாதமாகுமென்றாள்... அவளின் பிரிவைத் தாளமாட்டாமல் அக்காதலன் எழுதிய கவிதை..!)
Thursday, February 25, 2010

அடிக்கடி நீ எனை..?


வண்ண மயிலிறகின் மேனியடி - நீ
இம்மன்னவனின் தேவியடி..!
பொன் பஞ்சு நெஞ்சமடி - உன்
கண் பேச்சு காந்தமடி..!
குறுநகை கன்னமடி - உன்
புன்னகை பூப்பந்தலடி..!
அன்ன மயில் அழகு நடையடி - உன்
அன்பிற்கிவன் அடிமையடி..!
முயல் போன்ற அழகு முகமடி - உன்
முகில் கூந்தல் கார்மேகமடி..!
உயிர் கொடுத்தோர் பெற்றோரடி - என்
உயிர் வாழ அர்த்தம் கொடுத்தவள் நீயடி..!
முழு நிலவே என் மனதில் நீதானடி - முன்
பனி மலரே உன் மனதில் நான்தானடி..!
போதாது... போதாது  உன் குறும்புகளடி - நீ எனை
அடிக்கடி அடித்தணைக்க வேண்டுமடி..!
Wednesday, February 24, 2010

உயிரே… உம் என்று சொல்..!


உயிரே… உம் என்று சொல்
மணலை மலையாக்குகிறேன்
மடுவை கடலாக்குகிறேன்
கடலை குளமாக்குகிறேன் என்றெல்லாம்
பொய்யுரைக்க விரும்பவில்லை..
நீ என் காதலியானால்...
உன்னுள் நானிருப்பேன்..!
உனக்காகவே வாழ்ந்திருப்பேன்..!
உன் உயிரோடு கலந்திருப்பேன்..!
என் சொல்கிறாய் என்னன்பே..!Monday, February 22, 2010

அதுவரை என்னுள்ளேயே..!


என் அன்பின் அன்பே..!
உனை என் மனதில்
ஆழமாகப் பதித்து விட்டேன்..!
அழகே நீ பதறாதே..?
பத்திரமாய்... பவித்திரமாய்
நீ என்னுள்ளே கலந்திருப்பாய்..!
அந்த இன்பத்தில்
நான் களித்திருப்பேன்..!
காலம் வந்ததும்
உனைக் கரம் பிடிப்பேன்..!
அதுவரை என்னுள்ளேயே வசித்திடு..!Thursday, February 18, 2010

எனை விட்டுச் செல்லாதே..!


நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!Wednesday, February 17, 2010

உன்னை நினைத்தாலே போதும்..!


உன்னை நினைத்தாலே போதும்
என் பேனாவிற்கு…
உடனே அது காகிதத்தை
முத்தமிடத் தொடங்குகிறது..!
உனைப் பற்றி
கவிதையாய் வடிப்பதற்கு..!
உன்னை நான் நேரில்
சந்தித்தால் போதும்…
உடனே உன் செவ்விதழில்
முத்தமிடத் தோன்றுகிறது…
உன்னைப் போன்றதொரு
அழகான கவிதையைப் படைப்பதற்கு..!Monday, February 15, 2010

முழு நிலவு உதிக்குமா?அதிகாலையில்
முழு நிலவு உதிக்குமா?
என்று என்னிடம் கேட்டார்கள்...
உதிக்குமென்றேன்..!
'போடா நீ பொய் சொல்கிறாய்..'
என்றார்கள்..!
அதி காலையில்
உன் முழு நிலவு முகத்தைப்
பார்த்த பின்னும்...
பார்க்கவில்லை என்று
என்னால் பொய்யுரைக்க
முடியவில்லையடி அன்பே..!

(காதலர் தினத்தன்று அதிகாலை 6. மணிக்கு நானும் என்னவளும் சந்தித்துக் கொண்டோம்... அதையே கவிதையாக வடித்து அவளிடம் அனுப்பினேன்... அளவற்ற ஆனந்தமடைந்தாள்... அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்..)Sunday, February 14, 2010

இத்தனை நாளாய்..!


என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன்
பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய்
நீ எங்கிருந்தாய்..?

(உலக காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்…)Thursday, February 11, 2010

இவள் அழகிற்கு...


இந்த ரோஜா ஏனடா
இவ்வளவு சிவப்பாக இருக்கிறது
என்று என்னிடம் கேட்கிறாய்..?
அடி அசட்டுப் பெண்ணே
உனைக் கண்ட ரோஜா மலர்
இவள் அழகிற்கு
நான் ஈடில்லையே
என்று வெட்கப்பட்டு
நிற்பதால் வந்த சிவப்படி..!   Wednesday, February 10, 2010

வள்ளலிடம் கஞ்சத்தனம்..?


உன் செவ்விதழ்களைத்
திறந்து பேசுவதில்
நீ வள்ளல் என்பதை
ஒத்துக் கொள்கிறேன்..!
அதே வேளையில்
உன் செவ்விதழ்களால்
எனக்கொரு முத்தமிடு
என்றால் மட்டும்
மாட்டேன் என
கஞ்சத்தனம்
செய்கிறாயே அது ஏன்?
வள்ளலிடம் கஞ்சத்தனம்
கூடாது பெண்ணே..!
நீ வள்ளலாய் இருந்தால்தான்
இந்த வறியவனுக்கு வாழ்க்கையே..!
Tuesday, February 9, 2010

ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?


உன் கார்மேகக் கூந்தலின்
வாசம் பிடித்து வானில் நடக்க ஆசை..!
உன் வெண்டை
விரல்களைக் களைந்து
விளையாட ஆசை..!
உன் தண்டைக் கால்களில்
கொலுசாய் மாறி
கலகலவென ஒலிக்க ஆசை ..!
உன் கெண்டை விழிகளின்
இமையாய் மாறி
உன்னை கண்ணடிக்க ஆசை..!
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?
அன்புக்கு ஆசைகள் அடி பணியுமா..?
பெண்ணழகே பதில் சொல்..!Monday, February 8, 2010

உன் கட்சிதானடி.!


என் வீட்டுக் கண்ணாடி கூட
உன் கட்சிதானடி..!
என்னைக்
காட்டச் சொன்னால்
அது உன்னைக்
காட்டுகிறது பார்..!Friday, February 5, 2010

என்ன மேதாவித்தனம் இது..?


வெண்முத்துப் பற்களை
வைத்துக் கொண்டு
பொன் முத்து வாங்க
வாங்க வருகிறாயே..!
என்ன மேதாவித் தனம் இது..?               


*****

நீயோ முத்துச் சிரிப்பை
உதிர்த்து விட்டாய்..!
நானோ…
உன்னிடமிருந்து
சிதறிய முத்துக்களை
என் மனதிற்குள்
கோர்த்துக் கொண்டிருக்கிறேன்..!Thursday, February 4, 2010

திட்ட வேண்டும் என்பதற்காகவே..!


நீ எனைத் திட்ட வேண்டும்
என்பதற்காகவே உன்னிடம்
சிறு சிறு குறும்புகள்
செய்கிறேன்..!
அதைப் பார்த்த நீயோ
எனைக் கடுமையாகத் திட்டாமல்
மறைமுகமாகச் சுட்டுகிறாய்...
மறுபடியும் அதே குறும்பை
செல்லமாய்ச் செய்யடா என்று..!