ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, August 28, 2013

வலிந்து விரட்டு வலியை..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை!

 

பல்லாண்டுகளுக்கு முன்
தாயின் கருவறையில்
ஆலம் வித்தானாய்...
உன் தந்தையின்
மன அறையில்
சிப்பிக்குள் முத்தானாய்..!
ஈன்றெடுத்த போது
இழைந்தோடும்
இசையானாய்..!
வளரும் போது
வருடி விடும்
தென்றலானாய்..!
பூச்சூடும் பருவத்தில்
மணம் வீசும்
பூஞ்சோலையானாய்..!
கல்லூரி பருவத்தில்
வானம் சுற்றும்
வானம்பாடியானாய்..!
விதியின் விளையாட்டில்
விளையாட்டு
பொம்மையானாய்..!
காலம் மாறிற்று
காட்சிகளும் மாறிற்று...
பொம்மை பெண்மையானது
உண்மை வண்மையானது
சுதந்திர உலகம் இனி உனக்கானது..!
வலியில் பிறப்பது வாழ்க்கை
வலிந்து விரட்டு வலியை
வசந்தம் இனி பின்பற்றும் உன் வழியை..!
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் நிலவுக்கு
முதல் பிறந்தநாள் இது..!
இன்னாள் போல் இனி என்னாளும்
வாழ்க நீயும் நலமோடு
வாழ்த்துகிறேன் நானும் மனதோடு!

(என் அன்புக்குரிய தோழி பொன். விமலாவிற்கு இன்று பிறந்தநாள்... அவருக்காக நான் எழுதிய கவிதை இது...

உலகின் எல்லா மகிழ்ச்சிகளும் உன் காலடியில் விழட்டும் விமலா...

என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!)




Monday, August 19, 2013

மறவேன் இனி..!


நான்காண்டு காலம்
ஒன்றாய்ப் பழகி
ஒன்றாய்த் திரிந்து
ஒன்றாய் மகிழ்ந்து
ஒன்றாய்க் குலாவிய நட்பினை
நிஜத்தில் பின் தொடர்ந்தேன்...
பள்ளிக்காலம் முடிந்த பின்
எங்களைப் பிரிக்க முடியாமல்
பிரித்தது காலம்…
எனை தனிப் பித்தனாக்கியது
அக்கோலம்?
எத்திசையில் இருப்பினும்
நட்பின் வாசம் தேடி
நாயாய் நான்
பல்லாண்டுகளாய் அலைந்த போது
இன்றுதான் அவனை
நிழலாய் பின்தொடரும்
வாய்ப்பு கிடைத்தது
முகநூலிலும்
சிட்டுக்குருவியின் கீச்சலிலும்…
இந்நாளை மறவேன் இனி…
அதற்கு காரணம் இரண்டு!
நான் தொலைத்த நான்காண்டு நட்பு
பல்லாண்டுகளுக்குப் பிறகு
இன்று ஐந்தாமாண்டில்
அடியெடுத்து வைப்பது ஒன்று...
என் கவிக்குடிலுக்கு இன்றோடு
அகவை ஐந்தென்பது மற்றொன்று..!




Wednesday, August 7, 2013

பத்திரிகை தர்மம்?


'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்'
என்று கவர் ஸ்டோரியில்
செய்தி வெளியிட்ட
பிரபல வார இதழ்கள் 
எல்லாம் 
அதே இதழை
பிளாஸ்டிக் கவரில் இட்டு
இலவசமாக ஷாம்புவின் சாஷேவையும்
தந்து கொண்டிருக்கின்றன!
இதுவன்றோ 
பத்திரிகை தர்மம்..!?

************************************************************
நான் எழுதிய கட்டுரைகள்
பள்ளிகளில் சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை! - அரசாணை குறித்த முழு தகவல்கள்
சாதி இல்லை - நெஞ்சை நெகிழச் செய்த வாசகர் கடிதம்