ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, September 12, 2011

நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்..!நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்
நேற்று வரை
தங்கத்தின் விலையை மட்டுமே
கவனித்துக் கொண்டிருந்தவள்
இன்று பெட்ரோல் விலையை
மட்டும் கவனிக்கிறேன்..!
நேற்று வரை 
ஆடை விளம்பரங்களை மட்டுமே
ரசித்துக் கொண்டிருந்தவள்
இன்று இருசக்கர வாகன
விளம்பரங்களை மட்டும் ரசிக்கிறேன்..!
நேற்று வரை...
விமானத்தில் மட்டுமே பயணம்
செய்ய விரும்பியவள்...
இன்று உன் இரு சக்கர வாகனத்தில்
மட்டும் பயணம் செய்ய விரும்புகிறேன்...
என்னுள் ஏன் இத்தனை மாற்றங்கள்..
உன் காந்தக் கரம் பட்ட வாகனம்
என் இரும்பு இதயத்தை ஈர்த்ததாலா..?
இல்லை.. நீ எனக்கே எனக்கென
வாங்கிய இரு சக்கர
இரும்புப் பறவையாலா..?
8 comments:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

நல்ல உணர்வாக்கம் கவிதை அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி

மதுரை சரவணன் said...

kavithai vaalththukkal...kavithaikkum irusakkaram vaangkiyamaikkum ...!

யூர்கன் க்ருகியர் said...

சூப்பர் பைக்,.. சூப்பர் கவிதை..

ரெடி ஒன் டூ த்ரீ. ட்டூரு ...ட்டூரு... ட்டூர்ரூரூரூரூம் ...!!!

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு நன்றி சங்கர்... நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க சரவணன்...

வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.. நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க யூர்கன்...

ரசித்தமைக்கு நன்றி.. வாழ்த்தியமைக்கும் நன்றி... பின்னணி இசை அமைத்தமைக்கும் நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Anonymous said...

உங்கள் கவிதை மிகவும் அருமை.... உங்களின் இந்த படைப்புக்கு என் வாழ்த்துகள்.......

vijaya chandran

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி விஜய் சந்திரன்...

இந்த படைப்பு என்னவளுடையது... அவளுக்குத்தான் இந்த பாராட்டும், வாழ்த்தும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!