ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, November 21, 2011

கூடலும்... ஊடலும்..!


கூடல்தான் காதலெனும் போது
அதில் ஊடல் வருவது இயல்பல்லவா..?
ஊடலை ஊதிப் பெரிதாக்கி
எனை உதறித் தள்ளுவதேனடி..?

நீ அருகிலிருந்தால் அன்பில்லை
தொலைவில் இருந்தால் தொல்லையில்லை
என்று சொன்ன உன் நாவை
என்ன சொல்லி வெட்டி எறிய வேண்டுமடி..?

தேனுண்ட வண்டைப் போல்
உன் காதலையுண்டு மகிழ்ந்திருந்த எனக்கு
அலைபேசியில் நீ பேசிய வார்த்தைகள்
அமிலமாய் கொட்டியதடி.!

என்னை இன்னும் நீ
புரிந்து கொள்ளவில்லையே
அது ஏனென்று கேட்டு
என் மனம் உன்னை திட்டித் தீர்த்ததடி..!

முத்தில்லா சிப்பி போல...
மருந்தில்லா குப்பி போல...
நீயின்றி வெறுமையாய் கிடக்கிறேன்
எப்போது வருவாய்... ஊடலை கூடலாக்குவாய்..!
2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே!... சூப்பர்! எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

மோகனன் said...

வந்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!