ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, August 20, 2012

உற்பத்தி செய்யும் விவசாயிக்கு...அன்றோ…
விவசாயப் புரட்சி
எனும் பெயரில்
வீரிய உரங்களை கொடுத்து
விளைநிலங்களை பாழாக்கினார்கள்...
அன்றோ…
தொழிற்புரட்சி
எனும் பெயரில்
பெரும் தொழிற்சாலைகளைப் புகுத்தி
குறுநிலங்களை கூழாக்கினார்கள்…
இன்றோ…
ரியல் எஸ்டேட் எனும் பெயரில்
வளர்நிலங்களை வளைத்துப் போட்டு
கான்கிரீட் கூடுகளாக்கி வருகிறார்கள்…
இப்படி அன்னை மடியை
அனைவரும் கூறு போட்டால்
உலகுக்கே உணவுப்பொருளை
உற்பத்தி செய்யும் விவசாயிக்கு
அவனது அரைக்கோவணம் தவிர…
அரைக்காணி நிலம் கூட மிஞ்சாது..!

+++++++++++++++++++++++++++++
______________________________________

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்:விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 10)

6 comments:

கவி அழகன் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்
உங்கள் படைப்பை எதிர்பார்த்திருக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...


உண்மை தான் நண்பரே...

தங்களின் கவிதை படித்து நெடுநாள் ஆகி விட்டது...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி கவி அழகன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி தனபாலன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

vimala niranja said...

இனிய நண்பரே !
உங்கள் -
பேனா முள் கொண்டு
உழுத வார்த்தைகளால்
உருவான இவ்வீரிய க'விதை'
நிலமகளை கூறுபோடும்
கூறு கெட்டவர்களின் கண்ணில் பட்டு
மாற்றம் 'முளை'த்தால் சரி !

இக்கவிதை வறண்ட பூமியில் விழுந்த பொய்க்காத மும்மாரி !
அருமை! அருமை !

மோகனன் said...

வருகைக்கும் வளமான பின்னூட்ட விதைக்கும் மிக்க மகிழ்ச்சி தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!