ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 13, 2012

நவநீதன் மகனே..! - சிறப்புக் கவிதை
இருளைக் கிழித்துப் பிறந்த
நவநீதன் மகனே…
வளர்பிறையில் வளரும்
என் மருமகனே…
உன் வரவால்
என்னுள்ளம் துள்ளுதடா
உன்னாலென்
நண்பன் தந்தையானான்
என்ற மகிழ்வை விட
நானுந்தன் மாமனானேன்
என்பது கண்டு மகிழ்ந்தேனடா
நீ எங்களின் ‘மகிழ்’ தேனடா…

உன்னாலிங்கு
உன் அத்தை உள்ளம் பூரித்து
சிரிக்கிறாள் – உவகையால்
கவிதையாய் வடிக்கிறாள்..!
எத்தனை முறை அவள்
எழுதிப் பார்த்தும்
உனைப் போலொரு உயிர்க்கவிதையை
வடிக்க முடியாதென
உனை வாழ்த்தி மகிழ்கிறாள்
வருக எங்களின் இளவலே...
வளர்க நீயும் புவியிலே...
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!


(இன்று எனது ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணன் - கவிதா தம்பதிக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது. அம்மகவின் வரவிற்க்காக இக்கவிதை..!)
4 comments:

சே. குமார் said...

கவிதை அருமை நண்பா...

அருமைக் குட்டிக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்...

vimala niranja said...


அத்தையைப் பார்த்துக் கண் சிமிட்டும் தத்தையே -இனி
எப்போதும் அவள் மடி உனக்கு மெத்தையே !

இலவம் பஞ்சும் இரவல் வாங்கும் -உன்
பட்டு மேனியைத் தொட்டு ரசித்தால்!

செல்லமே கொஞ்சம் இரவல் கொடு!
வேண்டும் உன்போல் புது மனது!

வாழ்த்துக்கள்!

மோகனன் said...

வா நண்பா...

கண்டீப்பாய் சொல்லி விடுகிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

கலக்கறீங்க விமலா..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!