ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, January 9, 2013

வெகுண்டெழு தேசமே..!வெகுண்டெழு தேசமே…
வெகுண்டெழு…
வேங்கையைப் போல
வெகுண்டெழு…
தினவெடுத்த தோள்களே
வெகுண்டெழுக...
திமிறும் காளைகளே
வெகுண்டெழுக...

எல்லைப் பகுதியில்
உதை வாங்கி
ஊளையிட்ட ஓநாய் இன்று
நம் இந்திய வீரர்களை
எல்லை தாண்டி
கழுத்தை அறுத்திருக்கிறது…

எல்லை காத்த எம்மாவீரர்களின்
சிரம் அறுபட்ட ஈரம்
காய்வதற்குள்
இப்பாதகச் செயலை செய்த
பாகிஸ்தான் பன்றிகளின்
ஈரக்குலையினை அறுத்தெறிவோம்…

செந்நீரை சிந்தினாலும்
கண்ணீர் சிந்தா எம் காவல் மறவர்களின்
உயிர் காட்டுமிராண்டித் தனமாய்
பறிக்கப்பட்டிருக்கிறது
போர் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறது
போக்கத்த பன்றிகளுக்கு
ஏது போர் முறை..?
போர் விதிமுறை..?

யார் கொடுத்த தைரியமடா இது
எவன் கொடுத்த தைரியமடா…
ஈனப் பன்றிகளே..?
பொறுக்கோம்.. பொறுக்கோம்…
இனியும் பொறுக்கோம்…
எம் இராணுவ வீரர்களின் தலையை
வாங்கிய ஈனப் பன்றிகளை
இவ்வுலகத்திலிருந்தே அழித்தெடுப்போம்…

போரே மூண்டாலும் சரி
மூடர்களின் மூர்க்கத்தனத்திற்கு
முடிவு கட்டுவோம்..
ஏ… இந்திய மக்களே
எல்லையில் உயிர் விட்டது
நம்மில் ஒரு சகோதரன்
நம்மில் ஒரு நண்பன்
நம்மில் ஒரு தந்தை…

துடித்தெழுங்கள்…
இழிவைத் தின்னும்
பன்றிகளை இல்லாமல் செய்ய
துள்ளி எழுங்கள்…
போர் முரசம் ஒலிக்கட்டும்
போக்கத்த நாய்களுக்கு
நமது பலம் புரியட்டும்…
எல்லையில் வாலாட்டும் பன்றிகளுக்கு
பாடம் புகட்ட இதுவே
வாய்ப்பாக அமையட்டும்…

இனியும் எம் மண்ணில்
இப்படியொரு கோரம் வேண்டாம்
அரசுத் தரப்பில் இருந்து
கண்டனம் வேண்டாம்…
தலைமைப் பொறுப்பின் நீலிக்கண்ணீர் வேண்டாம்…

அடங்கியிருக்கும் வரைதான் கடலலை
ஆர்ப்பரித்தால் சுனாமி அலை
அமைதி காக்கும் வரைதான் வெறும் மலை
வெடித்தெழுந்து விட்டால் எரிமலை
பொறுத்தது போதும் பொங்கியெழுவோம்
பொல்லா நாய்களை ஓழித்துக் கட்டுவோம்…!(காஷ்மீரிலுள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறிய பன்றிகளை எதிர்த்து நடைபெற்ற சண்டையில் 'லேன்ஸ் நாயக்' ஹேமராஜ், 'லான்ஸ் நாயக்' சுதாகர் சிங் ஆகிய இரு வீரமறவர்களை பாகிஸ்தானிய பன்றிகள் கொன்று விட்டு, தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளன. இதைக் கேட்டதிலிருந்து என்மனம் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் எம்மினம் அழிக்கப்பட்ட போது, மௌனம் காத்தது போல் இதிலும் இந்தியா மௌனம் காத்தால் பறிபோவது நமது உயிர் மட்டுமல்ல… உயிரினும் மேலான நமது மானமும்தான்…

‘‘நெஞ்சு பொறுக்குதிலையே…
என் நெஞ்சு பொறுக்குதிலையே…’’

கண்ணீருடன்…
உங்கள்
மோகனன்

இந்த நிமிடம் வரை எந்த ஒரு தமிழ் ஊடங்களும் இந்த செய்தியை வெளியிடவில்லை என்பதை எண்ணுகையில் பத்திரிகையாளன் என்ற முறையில் தலை குனிகிறேன்...)
No comments: