ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, February 25, 2013

முகவரியில்லாதோருக்கு முகவரி! - பாராட்டுக் கவிதை


முகமில்லாமல் போன எத்தனையோ முகங்களுக்கு
            முகம் கொடுத்த சேவையமைப்புகளில் முத்தாய்ப்பாய் நீ!
ல்விச் செல்வம் பெறுவதற்கு பொருட் செல்வமற்ற
             கள்ளமில்லா உள்ளங்களுக்கு 'கற்பகத் தரு'வாய் நீ!
லிகளைக் கூட வலிந்து சென்று ஏற்றுக் கொண்டு
             கற்போர் முகங்களில் மகிழ்ச்சியைத்  தரும் மந்திரமாய் நீ!
ரிதமோ, இசையோ, பொருளோ தராத ஞானத்தைத் 
             தரும் கல்விக்கே முகவரி கொடுத்த முகவரியாய் நீ..!


(வறுமைக் கோட்டிலிருக்கும் திறன்மிகு கிராமப்புற மாணவர்களின் உயர் கல்விக்குத் தேவையான நிதி உதவிகளை கொடையாளர்களிடமிருந்து பெற்று, அவற்றை அம்மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் சேவை அமைப்பிற்காக நானெழுதிய கவிதை இது. முதல் வரிகளில் உள்ள தடித்த முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்தால் அந்த அமைப்பின் பெயர் உங்களுக்கு புலப்படும். புலப்படுகிறதா?

நீங்களும் இந்த அமைப்பிற்கு உதவ விரும்பினால்:  http://www.mugavarifoundation.org

சென்னை, வேளச்சேரியில் உள்ள இந்த சேவை அமைப்பை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் நடத்தி வரும் திரு. ரமேஷ் அவர்களுக்கும், எதிர்காலத்தில் நட்சத்திரங்களாய் மின்னப்போகும் இந்த அமைப்பின் மாணவர்களுக்கும் இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்)




11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் அருமை... நல்லதொரு அமைப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

அன்புடன் மலிக்கா said...

சிறந்ததொரு அமைப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

கவிதையும் அருமை..

மோகனன் said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி மலிக்கா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Anonymous said...

முகவரியே முதல் எழுத்தாக
முத்தாக கோர்த்தாய் மனதில்
சத்தாக இனித்தாய்.

நித்திலத்தின் வாயிலில்
பத்திலம் வைத்தாற் போன்ற
உத்திர வரிகள்.

வஞ்சிரா சூரியனின்
செஞ்சுலுவை மனதின்
நெஞ்சு நிறை பாராட்டு.

சுக்கிர வாசுவதத்தின்
அத்திர நிமிடங்கள்
அனங்கு தான் வாழ்க.

Anonymous said...

பெயர் போட் மறந்துட்டேன் அண்ணா.....என் பெயர் பக்சிராஜன்.

மோகனன் said...

''முகவரியே முதல் எழுத்தாக....''

இவையெல்லாம் முகவரிக்கு கிடைக்கு வேண்டிய பாராட்டுக்கள் அனானி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

ஆங்... நானும் பெயர் குறிப்பிட மறந்துட்டேன் நட்பே.....

பக்சிராஜனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வருகை புரிந்த தமிழ்க்களஞ்சியத்திற்கு நன்றி

அடிக்கடி (சு)வாசிக்க வரவும்...

பகிர்ந்து கொள்கிறேன் அனைத்தையும்...

Unknown said...

அருமை பதிவு

Team Sripada said...

அற்புதமான அழகு கவி வரிகள்