ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, March 11, 2013

ஆழக்குழி தோண்டி..!? - முரண்பாட்டுக் கவிதைஅம்மா அப்பா
பொண்டு பொடிசு என
குடும்பமே ஒன்றிணைந்து
ஆழக்குழி தோண்டி
இரும்புக்கம்பிகளை இருத்தி வைத்து
வெயிலென்றும்
மழையென்றும் பாராமல்
அடுக்கடுக்காய்
செங்கல் சுமந்து
பெட்டி பெட்டியாய்
மணல் சுமந்து
மூட்டை மூட்டையாய்
சிமெண்ட் சுமந்து
வியர்வையாய்
நீராய்க் கரைத்து எழுப்பிய வீட்டை
கட்டி முடித்தவுடன்
விட்டு விட்டு
தன் குடிசைக்குச் சென்றது
கட்டடத் தொழிலாளியின் குடும்பம்!
10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... அவர்கள் நிலைமையும் ஒருநாள் மாறும்...

மாசிலா said...

ஆக்கம் நன்று.
பகிர்வுக்கு நன்றி.

மோகனன் said...

இந்த 'மாறும்' என்ற வார்த்தைதான்... சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு ஆறுதல் சொல்லாக இருக்கிறது தனபாலரே...

வருகைக்கு நன்றி

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி மாசிலா...

வே.நடனசபாபதி said...

கட்டிடத் தொழிலாளர்களின் உண்மை நிலையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். இவர்களின் நிலை ஒரு நாள் மாறும் என்று நம்புவோம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

மோகனன் said...

வணக்கம் சபாபதி அவர்களே...

எங்கே மாறும் என்கிறீர்கள்... எட்டுமணி நேர வேலை என்று வாழ்கிழிய பேசும் அரசு, சென்னை மெட்ரோ ரயில் கட்டடப் பணிகளுக்கு வட இந்தியர்களை 10 மணி நேரம் கசக்கிப் பிழிகிறது... குறைந்த ஊதியத்தில்...

எங்கே போய் சமத்துவம் தேட... நிலைமை மாற...

தொடரும் ஆதரவுக்கு நன்றி

சே. குமார் said...

அருமையான கவிதை நண்பா.

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பா...

அம்பாளடியாள் said...

சிறப்பான கவிதை தொடர வாழ்த்துக்கள் .

மோகனன் said...

அம்பின் வாழ்த்திற்கு

அடியவனின் நன்றிகள்...