ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, April 16, 2013

மின் வெட்டு! - ஜாலி கவிதை


இதோ வருகிறேன்
அதோ வருகிறேன்
என்று சொல்லி விட்டு
அடிக்கடி காணாமல் போகிறாயே
நீயென்ன
என் வருங்கால
சம்சாரமா..?
இல்லை
தமிழ்நாட்டின்
மின்சாரமா..?

@@@@@@@@@@@@@

நீ கண்வெட்டிப்
போகும்
போதெல்லாம்
எனக்கு
தமிழ்நாட்டின்
மின்வெட்டுதான்
நினைவிற்கு வருகிறது...

@@@@@@@@@@@@@

மின்சாரத் துண்டிப்பால்
அடிக்கடி
இயக்கமிழக்கும்
இயந்திரத்தைப் போல்
உன் கண்சாரத்
துண்டிப்பால்
நானிங்கு
இயக்கமிழந்து போகிறேன்..!

@@@@@@@@@@@@@

(கோடை வெயில் கொளுத்தி அடிக்க, தமிழகமே மின்வெட்டால் திமிலோகப்பட, நான் மட்டும் சும்மா இருப்பேனா... மின்வெட்டை இப்படியும் நையாண்டியாக சுட்டலாம் என்பதை இங்கே நாசூக்காக எழுதியிருக்கிறேன்...

ஹி...ஹி... சும்மா ஜாலிக்கு இந்த மின்வெட்டு கவிதை..!)




4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... அருமை... (இப்படியாவது சிரித்து சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்...)

தொடர வாழ்த்துக்கள்...

மோகனன் said...

மகிழ்ச்சி தனபாலரே...

வாழ்த்தியமைக்கு நன்றி...

வே.நடனசபாபதி said...

மின் வெட்டைக் கூட இப்படியும் கிண்டலடிக்கலாம் போல! அருமை! அருமை!! வாழ்த்துக்கள்!

Unknown said...

வரும் ஆனா வராது
அதான்டா கரண்ட்
எப்ப வரும்ன்னு
ஒரே இருக்குது மிரண்டு
ஏ டண்டனக்கா டனக்குணக்கா

வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்