தர்மபுரி காதல்
இன்று கண்ணீரில்
கரைந்து போனது...
காதலின் அடிப்படையே
அன்புதானே...
அந்த அடிப்படையையே
ஆட்டம் காண வைத்து விட்டதே
இந்த சாதி வெறி!
இது தகுமா..?
பூமி தாங்குமா..?
உலகில் தூயது
என்றால் அது அன்பு
மட்டுமே...
வாழும் அன்பு மட்டுமே
அதற்குப் பிறகே
மற்றவை எல்லாம்..!
இக்காதல்
கண்ணீரில் கரைந்தற்கு
வாழும் அன்பல்ல
பாழும் அன்புதானே காரணம்
இக்காதல்
துன்பியல் சம்பவத்தில்
மற்றவர்களின் அன்பெல்லாம்
அன்புதானா? - என
அன்பு மீதே
சந்தேகம் கொள்ள
வைத்துவிட்டதே?
இது சரிதானா?
மகளின் அன்பு
காதலில் நிறைந்து
கல்யாணத்தில் முடிந்தது
அவள் தந்தையின்
அன்போ
சாதிமேல் திரிந்து
சுய கொலையில் முடிந்தது...
கணவர் இறந்தாரே
என அவரின்
ஆருயிர் மனைவி
உயிர் துறக்கவில்லை
இதுதான் அவர் மேல்
அவர் மனைவி கொண்ட அன்பு?!
தந்தை போனாரே
என மகளும் மரிக்கவில்லை
இதுதான் அவர் மேல்
அவர் மகள் கொண்ட அன்பு?!
காதல் மனைவி
'தன்னுடன் வாழேன்' என்றதற்காக
தன்னுயிர் பிரிந்தான்
இளவரசன்...
இதுதான் காதல் மனைவி
மேல் அவன் கொண்ட அன்பு!
சாதி எனும் இரண்டெழுத்து
அன்பு எனும் சக்தி
வாய்ந்த மூன்றெழுத்தை
வென்று விட்டதே..?
என வெம்புகிறது அன்பு...
இதில் எது உண்மையான அன்பு?!?
செல்லுங்களடா
சாதிவெறி பிடித்த மிருகங்களே..!
17 comments:
//சாதி எனும் இரண்டெழுத்து
அன்பு எனும் சக்தி
வாய்ந்த மூன்றெழுத்தை
வென்று விட்டதே..?//
இந்த ‘வெற்றி’ தற்காலிகம் தான் என்பதை காலம் சொல்லும்.
சொல்ல வேண்டும் என்பதுதான்
என்போன்றோரும் எண்ணமும் ஐயா..!
எது எப்படியோ ஆயிரம் ஆயிரம் கனவுகளை சுமந்த ஒரு சின்னஞ்சிறு உயிர் போச்சே! பொம்பளையே இப்படித்தான், சேலை மாத்தும்போதே ஆளையும் மாத்துவான்னு குத்தி குத்தியே திவ்யாவையும் சாகடிக்க போறாங்க.
கனவா ? என்ன கனவு ? என்ன படிச்சி இருக்கார் ? பையன் எங்க வேல பார்த்தார் ?
இந்தக் கொடுமை என்று முற்றிலும் தீருமோ...?
சரியாய் சொன்னீர்கள். இது காதலே அல்ல. மதுவினால் வந்த வினை.
வேலை இல்லை ஆனா மது வேண்டும்.
வேலை இல்லை ஆனா பொண்ணு வேணும்.
பணம் இல்லை ஆனா குடும்பம் நடத்தனும்.
இதுக்கெல்லாம் பேரு காதல். இந்த ஐடியா நல்லா இருக்கே.
பள்ளி கூட மாணவர்களே எவனும் படிக்க வேணாம். முதல்ல சாதி வெறியை ஒழிப்போம். பெண்களின் பின்னல் சுற்றுங்கள். ஒரு நாள் அந்த பெண் பலவீனமாக இருக்கும் போது மடியும். அது போதும். இங்கே இணையத்தில் இருப்பவர்கள் வேலை வாங்கி தருவார்கள்.
நோ படிப்பு ..
நோ வேலை ..
நோ வயசு வித்தியாசம் ..
ஒன்லி காதல் ...
சூபர்ரப்பு .....
காதல் உயிரைக் குடித்து விட்டது...
உண்மை கடவுளுக்கு தான் தெரியும்..
நண்பா சாதி ஜெயித்துவிட்டது.
he is dead ,what she will do??????????????
முகமதியர்கள் 500 வருடங்கள் ஆண்டார்கள், ஜாதி ஒழியவில்லை, ஆங்கிலேயேர்கள் 300 வருடங்கள் ஆண்டார்கள், ஜாதி ஒழியவில்லை, இந்தியர்கள் 70 வருடங்களுக்கு மேல் ஆள்கிறார்கள், இன்னும் ஜாதி ஒழிந்தபாடில்லை, மாயாஜால சினிமா எடுக்கும் குடும்பங்களோ, காதல் சினிமா பலவரு எடுத்தாலும், ஜாதி ஒழியவில்லை, இதிகாசங்களும், ஐம்பெரும் கவியங்களும், இருத்தலும், மேலும் படித்தாலும், அதன் பயனாக, ஜாதிகள் ஒழியவில்லை, பாரதி போறந்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று' பாடியது சுத்த வெஸ்டு, உலக அதிசயங்களில், காதல் சின்னம் தாஜ்மகால், நமக்கு எந்த படிப்பினையும், தரவில்லை, ஆகையால், எனக்கு தெரிந்த, ஒன்றை ,இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன், காதல் ஒன்றே, ஜாதியை ஒழிக்கும், காதலித்தவர்களை, காப்பாற்ற பல அமைப்புக்கள், உருவாக வேண்டும். இந்திய அரசாங்கம் காதலுக்கென்ற சட்டம் மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும்.அவர்கள், இந்தியாவில் முதல் ஜாதிகளற்ற குடிமக்கள், முதலில் ராணுவம், பிறகு அரசாங்க வேளையில் முன்னுரிமை கொடுக்கவேண்டும், அவர்களே முதல்தர குடிமக்கள், என கூறவேண்டும்.
முருகன்.
அனானிக்கு...
பையன் படிச்சிருக்கணும், வேலை பாக்கணும், சம்பாதிக்கணும் அப்படி இருந்தா மட்டும்தான்... அவர் காதலிப்பார் போல... அல்லது... இப்படி இருப்பவரைத்தான் தன் மகனையோ, மகளையோ காதலிக்க சொல்லுவார் போல...
விஷயம் இதுவல்ல அனானி...
சாதீய சீர்கேடுதான் உயிர் பலி என்கிறேன்...
சாதி எண்ணத்தை விட்டு சமமாய் நடக்கத் தயாரா நீங்கள்..?
நகரங்களில் இந்த சாதீய எண்ணம் குறைவு... ஆனால் தமிழக கிராமங்களில் இன்னும் இந்தக் கொடுமை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை பத்திரிகையாளன் என்கிற முறையில், வெட்கித் தலைகுனிந்து இங்கே பதிவு செய்கிறேன் அனானி...
இவற்றை மாற்ற என்னால் முடியும்... உங்களைப் போன்ற சாதி வெறி பிடித்தவர்களால் முடியுமா...?
பதில் கூறும்...
சாதீயத்தை என்று இந்நாட்டில் இருந்து ஒழிக்கிறோமோ அன்றுதான் சமதர்மம் இந்நாட்டில் நிலவும் தோழர்களே...
//பையன் படிச்சிருக்கணும், வேலை பாக்கணும், சம்பாதிக்கணும் அப்படி இருந்தா மட்டும்தான்... அவர் காதலிப்பார் போல... அல்லது... இப்படி இருப்பவரைத்தான் தன் மகனையோ, மகளையோ காதலிக்க சொல்லுவார் போல...//
ஆமாம். கல்யாணம் பண்ணிட்டு ஒருவரை ஒருவர் காதலிக்க சொல்லுவேன்.
ஒன்னுத்துக்கும் வக்கில்ல ஆனா காதல் மட்டும் எங்கிருந்து வருதோ. குடும்பம் நடத்த அப்பன பணம் கேப்பியா ?
இப்பலாம் காதலிக்கலனா உங்கள தள்ளி வைக்கிறாங்களா என்ன ? ஒரு பய விடாம எல்லாம் காதலிக்கிறான் ?
பக்கத்து ஏரியா ராபிச்சகாரன் ஒருத்தன் சாதி ஒழிப்புக்கு நல்ல பிகரா தேடிகிட்டு இருக்கான் . உங்க கமெண்ட்ஸ்ச கொஞ்சம் மிச்சம் வையிங்க , அவனுக்கு பயன் படும்.
ஆக எல்லாத்துக்கும் பிரச்சனை பணம் என்கிறீர்கள்...
பணம் இருந்தால் போதும், சாதீயம் இல்லை என்கிறீர்கள்... அப்படித்தானே...
தாராளமா மிச்சம் வைக்கிறேன் அனானி...
Yes your coret
Yes your coret
Post a Comment