ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, September 16, 2013

பிறைநிலவே உன்னழகில்..! - பிறந்தநாள் வாழ்த்து


பிறைநிலவே உன்னழகில் பெரும் பித்தானோம்
       வளர்நிலவே உன்னுயிரில் குறும் வித்தானோம்!
சிப்பதெனில் உன் குறும்பைத் தவிர வேறேதுமில்லை
      ருசிப்பததெனில் உன் அரும்பு மொழிக்கு நிகரேதுமில்லை!
திரும்பும் திசையெல்லாம் தீங்கரும்பே நீயானாய்
      எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் சேயானாய்!
க்குவலயத்தில் இன்றோடு நீ பிறந்து ஆண்டொன்று
     இந்நாளை கொண்டாடி மகிழ்கின்றோம் என்றும் நன்றென்று!
ஷாஸ்திரம் பாராமல் சம்பிரதாயம் பாராமல் பாரதியின்
      புதுமைப் பெண்ணாய் என்றென்றும் நீ வாழ்க வாழ்கவே!


(எனது தோழியின் மகளுக்கு இன்று முதலாமாண்டு பிறந்தநாள்... அந்த அன்பு செல்லத்திற்கு என் பாசம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! அந்த குட்டி செல்லத்திற்காக நானெழுதிய கவிதை இங்கே... அந்த குட்டி செல்லத்தின் பெயரை, இக் கவிதையில் தடித்த எழுத்துக்களில், மேலிருந்து கீழாக அமைத்து எழுதியிருக்கிறேன்...)
2 comments:

Ramani S said...

அருமையான வாழ்த்துக்கவிதை
பிரதிக் ஷாவுக்கு மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மோகனன் said...

தங்களின் வாசிப்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழரே...