ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, March 13, 2014

SMS காதல்


என் குறுஞ்செய்தியைப்
பார்த்ததும்
உன் குவலய முகம்
குதுகலமாய்ப்
பூக்கிறது
என்பதாலேயே
அடிக்கடி உனக்கு
குறுஞ்செய்தி அனுப்புகிறேன்...
செய்தி ஏதும்
இல்லை என்றாலும் கூட..!
8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படி அனுப்புங்க...!

வாழ்த்துக்கள்...

சே. குமார் said...

அருமை நண்பா...

வே.நடனசபாபதி said...

நீங்கள் எப்போதும் உங்கள் காதலியை நினைத்துக்கொண்டிருப்பதால் தானே குறுந்தகவல் அனுப்புகிறீர்கள். அதுவே ஒரு செய்திதானே!

மோகனன் said...

ஏன் தனபாலரே... நீங்கள் அனுப்ப மாட்டீர்களா உங்கள் தலைவிக்கு...

மோகனன் said...

நன்றி நண்பரே...

மோகனன் said...

பாஸ் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க... நீங்க சொல்றது அத்தனையும் உண்மைதான்...

நீங்க இப்படி எஸ்எம்எஸ் அனுப்பினதுண்டா நடனசபாபதி அவர்களே..?

வே.நடனசபாபதி said...

காதலித்தது மனைவியைத் தான். அதுவும் திருமணம் ஆன பிறகுதான். அப்போதெல்லாம் கைபேசி இல்லை. எனவே அந்த அனுபவம் எனக்கு இல்லை நண்பரே!

மோகனன் said...

ஏன் இப்போது உங்கள் மனைவிக்கு நீங்கள் அனுப்பக் கூடாதா என்ன?

காதலிங்க தலைவா...