ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 25, 2015

நீயெங்கு போனாயடி?


திரும்பும் திசையெங்கும் நீ
திரும்பும் இடமெங்கும் நீ
தீயை தொட்டாலும் நீ
தீவாய் விட்டாலும் நீ
கண்ணில் படுவதெல்லாம் நீ
கண்கள் தொடுவதெல்லாம் நீ
கரங்களின் தொடுதலும் நீ
காற்றின் வருடலும் நீ
நீ... நீயென என்னுள் எல்லாமே
நீயாகிப் போனதால்
என்னைத் தேடித் தேடி
உன்னுள் தொலைந்து போகிறேன்!
நிஜத்தில் நீயெங்கு போனாயடி?




12 comments:

ஊமைக்கனவுகள் said...

காணுமிக் கவிதையிலே தட்டுப்பட்டாள்))

தொடர்க கவிஞரே..!

மோகனன் said...

கருத்தளித்தமைக்கு நன்றி தோழரே...

வே.நடனசபாபதி said...

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடத்தில் தேடினால் அவர் எப்படி கிடைப்பார்! அருமையான கவிதை வாழ்த்துக்கள்!

Unknown said...

மலை மேல் ஏறி இப்படித் தேடியும் கிடைக்கவில்லையோ? ஐயோ பாவம், எங்கோ படித்த மாதிரியே இருக்கே,

ம். நன்று. . .

Unknown said...

நேற்றைய பிறந்த நாளுக்கான இன்றைய இல்லை. . .
என்றென்றைக்குமான வாழ்த்து -

குறும்பும் கும்மாளமுமாய்
சமூக முரண்பாடுகளைக்
களையப் பிறந்தவன்
என்ற பெயரை
உனக்கு நீயே சூட்டிக்
கொண்ட நீ

பிள்ளைகள் இருவர் இருந்தும்
பிள்ளை போன்ற ஆர்வத்தேடலை
எங்கெங்கும் பதியனிட்டு
முட்டி மோதி
முயன்று முயன்று
முன்னேறிக் கொண்டிருக்கும் நீ

முயன்றவரை முயற்சிப்பது முயற்சியன்று
முடியும் வரை
முயற்சிப்பதே முயற்சி
என்ற தொடருக்கு
உதாரணமாய் வாழ்ந்து காட்டு நீ

இது உழைப்பதற்கான வயது
சிந்திப்பதற்கான வயது
சிந்தனைகளைச் செயலாக்குவதற்கான வயது
உடலும் உள்ளமும் ஒருசேர
உன்னதச் செயல்களை
உள்நினைத்து பணியைத் தொடரு நீ

நினைத்தவை அத்தனையும் ஈடேற
நீ அளித்த எத்தனையோ வாழ்த்துகள்
உனக்குத் திரும்ப வரும்
உன்னை மெருகேற்றும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்புடன்
ஔவை.


மோகனன் said...

தங்களின் கருத்திற்கு

மிக்க நன்றி நடனசபாபதி ஐயா...

மோகனன் said...

எல்லா காதலருக்கும் இருக்கும் நிலைதான் இது...

அதனால் படித்தது போல் அல்ல... நீங்களே உங்களவரைப் பற்றி நினைத்ததாகவும் இருக்கலாம்...

கருத்துக்கு நன்றி சங்கீதா அவர்களே!

மோகனன் said...

நிச்சயம் செய்கின்றேன் சங்கீதா...

தங்களின் அன்பும் வாழ்த்தும் என்றும் என்னுடன் இருக்கவேண்டும்...

ஆமா... யாரு அது ஔவை..?

Unknown said...

ம் . . . நான்தான் . . . நான்தான். . . . ஔவைபாட்டி

மோகனன் said...

ம்ம்ம்... நம்பிட்டேன்...

RPSINGH said...

இனிய வரிகள்

மோகனன் said...

நன்றி தோழரே