ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, July 28, 2015

எங்கள் அப்துல் கலாம் ஐயாவே..!





இந்திய தென்கோடி
மண்ணில் பிறந்து
விண்ணை ஆண்ட
எங்கள் அப்துல் கலாம் ஐயாவே
எங்களின் 120 கோடி இதயங்களை
துடிக்க விட்டு
உங்களின் இதயத் துடிப்பை
நிறுத்தியது ஏன்?

‘வல்லூறு நாடுகளுக்கிடையே
இந்தியாவை வல்லரசாக்க
வாருங்கள் மாணவர்களே..!’
என்றழைத்த எங்கள் ஆசானே
மண்ணிலுள்ள உங்கள்
மாணவர்களை துடிக்க விட்டு
விண்ணில் நட்சத்திரமாய்
மறைந்து போனது ஏன்?

அணுகுண்டு சோதனையில்
அணுவைப் போல்
அடக்கமாய் செயல்பட்டு
வினையில் விண்ணைத்தொட்ட
அறிவியல் ஐயனே…
உலக அரங்கில் தலை நிமிர்ந்த தமிழனே
உங்களின் சிம்மக் குரல்
மரணச் சிறைக்குள் அகப்பட்டது ஏன்?


ஏவுகணையின் நாயகனே
ஏழைகளின் தூயவனே
எளிமையின் இருப்பிடமே
தமிழகம் ஈன்றெடுத்த தங்கமே
உன் பிரிவாலின்று
குமரி முதல் இமயம் வரை உள்ள
240 கோடி கண்களும் அழுகிறதே
கண்ணீரைத் துடைக்க வராதது ஏன்?

‘கனவு காணுங்கள்
இந்தியைவை வல்லரசாக்க’
‘கேள்வி கேளுங்கள்
எதையும் பரிட்சித்துப் பார்க்க’
என்று எங்களுக்கு போதித்த புத்தனே
ஏன் எங்களை விட்டுச் சென்றாய்
என்று கேள்வி கேட்டு
கேவிக் கேவி அழுகிறோம்
அண்ணலே மீண்டு(ம்) வா..!

வாழ்ந்தது போதுமென்று
‘அக்னி சிறகுகள்’
கொண்டு பறந்து விட்டாயா
‘இந்தியா 2020’ முழக்கத்தை
மறந்து விடுவோம் என்று
நினைந்து விட்டாயா?
என்றென்றும் உம்

வழி நடப்போம் நாங்கள்
என்றும் அப்துல் கலாமின்
மாணவர்கள் நாங்கள்..!


(கண்ணீரோடு அழைக்கிறோம்.. மீண்டு வாருங்கள் ஐயா… எங்களின் கண்ணீரைத் துடைக்க வாருங்கள் ஐயா…)

அப்துல் கலாம் ஐயாவிற்காக 2007-இல் நான் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் இங்கே... நாமும் கலாம் ஆகலாம்




5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

வே.நடனசபாபதி said...

மேதகு அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுவதோடு மட்டுமல்லாமால் அவர் எண்ணியதை செய்து காட்டுவதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

'பரிவை' சே.குமார் said...

ஆழ்ந்த இரங்கல்கள்... கவிதாஞ்சலி நன்று.

மோகனன் said...

வருகை தந்தமைக்கு நன்றி நட்பே...

சத்யாசெந்தில் - SathyaSenthil said...

அவர் கண்ட கனவுகளை நனவாக்குவது தான், நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி....